யேமன் கிளர்ச்சியாளர்கள் – சவூதி படையினர் மோதல்:ஏராளமானோர் பலி

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படையினர் வான்வழித் தாக்குதல் நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் சனாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள். நாள்: சனிக்கிழமை. சவூதி அரேபியா எல்லைப் பகுதிகள் மீது, யேமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஆதரவாளர்கள் நடத்திய திடீர்…

சவுதியை நோக்கி ஹூத்திகள் ஏவுகணை வீச்சு

ஏமனில் இருந்து ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களால் தமது நாட்டுக்குள் ஏவப்பட்ட ஸ்கட் ஏவுகணை ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. இரவு வேளையில் தமது நாட்டை நோக்கி வந்த அந்த ''ஸ்கட்'' ஏவுகணையை ''பாட்ரியாட்'' ஏவுகணை கண்டுபிடித்து தடுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஹமீஸ் முஸாயிட் நகரை நோக்கிய…

அமெரிக்க கம்ப்யூட்டர்களில் புகுந்து விளையாடியது சீனாவா ? !! முக்கிய…

வாஷங்டன்: அமெரிக்க அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் 40 லட்சம் கம்ப்யூட்டர்கள் "ஹேக்' செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. அமெரிக்காவின் கம்ப்யூட்டர்களை அவ்வப்போது "ஹேக்' செய்வது சீனாவின் வழக்கம். நேற்று அமெரிக்காவின் 40 லட்சம் அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் "ஹேக்'…

10 தலிபான்கள் கழுத்தறுத்து கொலை: ஐ.எஸ் அமைப்பின் வெறிச்செயல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்பு தலிபான்கள் 10 பேரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் கொண்டுள்ள தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் புகுந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், தலிபான்கள் 10 பேரை வெட்டிக்கொன்றுள்ளனர் என்று ஆப்கான்…

உலகளவில் சட்ட விதிகளின்படி சிறப்பாக ஆட்சி செய்யும் முதல் 10

சட்ட விதிகளை முறையாக பின்பற்றி ஆட்சி புரிந்து வருவதில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் சுமார் 102 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. Bill Neukom என்பவரால் கடந்த 2006ம் ஆண்டு Rule of Law Index என்பதை உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் World Justice Project என்ற…

கானா நாட்டு பெட்ரோல் பங்கில் தீ விபத்து: 150 பேர்…

கானா நாட்டின் ஒரு பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கானாவின் தலைநகர் அக்ராவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கடந்த புதன்கிழமை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இரண்டு நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மீட்பு…

கயானா நாட்டின் பிரதமராக ஒரு தமிழர்

தென் அமெரிக்க நாடான கயானாவில் பிர தமர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் நடை பெற்றது. இதில் எதிர்க் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 ஆண்டு களுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச்…

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர்கள்: துடிதுடிக்க கொன்ற ஐ.எஸ்

ஈராக்கில் 100 அடி உயர மாடியில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு பெண்களின் ஆடை விடயத்தை கண்காணிக்கவும், தாடி வளர்க்காத ஆண்களை பிடித்து தண்டிக்கவும் தனி காவல் படையை அமைத்துள்ளனர். அதேபோன்று, அங்கு…

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி…

லண்டன், ஜூன் 3- பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும்…

வாழ்வா? சாவா?: மரணத்தின் பிடியில் எகிப்து முன்னாள் ஜனாதிபதி

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சிக்கு வருகிற 16 ஆம் திகதி மரண தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கெய்ரோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதல் அதிபர் முகம்மது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத சண்டை: 14 ஆண்டுகளில் பலியான…

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் சண்டையில் 1½ லட்சம் பேர் பலியாகி உள்ளதாக புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்தும், அதனால் நடைபெறும் சண்டையில் பலியானோர் குறித்தும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழகத்தின் வாட்சன் சர்வதேச கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அமெரிக்காவில்…

நீரில் மூழ்கியது சீன உல்லாசக் கப்பல்: 5 பேர் பலி!…

சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி…

அகதிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தில் திருத்தம்: ஐரோப்பிய ஆணையத்திற்கு கோரிக்கை

வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் வரையறுத்துள்ள ஒதுக்கீட்டில் திருத்தம் வேண்டும் என ஜேர்மனி கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் கோரி வரும் வெளிநாட்டினர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து…

அழைத்த மனிதாபிமானம்: ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக களமிறங்கிய ஹாலிவுட் நடிகர்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக போராட ஹாலிவுட் நடிகர் ஒருவர் முடிவு செய்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து…

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட…

இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரான்ஸ் பிரதமரான மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Dauphine பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை மூளை…

வானில் தெரிந்த வினோத பொருள்: ரஷ்யாவின் ரகசிய ஏவுகணை சோதனையா?…

ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது. அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது.…

இறந்த பின்னும் வாழும் அண்ணனின் முகம்: தொட்டுப்பார்த்து பரவசமடைந்த தங்கை…

அமெரிக்காவில் இறந்தவரின் முகத்தை வேறு ஒரு நபருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த ரிச்சர்டு நோரிஸ் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தால், அவரது முகம் சிதைந்துபோனது, இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு அறுவைசிகிச்சைகள்…

அமெரிக்கா – சீனா இடையே போர் மூளுமா? சிலிர்க்கும் கழுகு;…

படை வலிமையில் உலகின் முதலிடத்தை வகிக்கும் அமெரிக்காவுக்கும், மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்தை நோக்கி தீவிரமாக முன்னேறி வரும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமா? "நிச்சயம் மூளும்' என்கிறார் சீன ராணுவத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பெங் குவாங்கியான். சீனாவின் ராணுவ உத்திகளை உருவாக்குபவர்களில் ஒருவர் எனக் கூறப்படும்…

புலம்பெயர்ந்து சென்ற ரோகிங்யா அகதிகள்: கைது செய்த மியான்மர் கடற்படை

மியான்மரில் இருந்து படகு மூலம் புலம்பெயர்ந்து செல்ல முயன்ற 727 அகதிகளை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுத்த நாடான மியான்மரில் உள்ள ரோகிங்யா முஸ்லிம் இனத்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என கூறப்படுகின்றது. அதனால் வறுமை மற்றும் வேலைவாய்ப்பற்ற அவர்கள் இந்தோனேசியா…

அடுத்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய ஐ.எஸ்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ் அமைப்பு, பல்வேறு அட்டுழியங்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சிரியாவின் ரமடி மற்றும் பால்மைரா நகரத்தை கைப்பற்றியுள்ள அவர்கள், விரைவில் பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை…

போகோஹராம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: தற்கொலைப்படைகளாக மாறும் பெண்கள், குழந்தைகள்

நைஜீரியாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மூலமாக நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. நைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விற்பனை: உறுதி செய்தது ரஷியா

ஈரானுக்கு வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் எஸ்-300 ரக ஏவுகணைகள் விற்பனை செய்யப்படுவதை ரஷியா செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. எனினும், அந்த ஏவுகணைகளும், அதனை இயக்குவதற்கான தொழில்நுட்பக் கருவிகளும் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான தேதியை ரஷியா அறிவிக்கவில்லை. இதுகுறித்து ரஷிய பாதுகாப்புக் கவுன்சில் துணைத் தலைவர் யெவ்கெனி லக்யானோவ் கூறியதாவது:…

மரணித்துப் போனது புத்தரின் அமைதி: மியான்மரில் வதைபடும் முஸ்லிம் மக்கள்

பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர். இவ்வாறு படகுகளில் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால், பலர் உண்ண உணவின்றி நடுக்கடலில் படகிலேயே உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள்…