மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம்: பிரதமர்…

காந்திநகர்: ''மொபைல் போன் மூலம் அரசு நிர்வாகத்தின், சில செயல்பாடுகளை மேற்கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல், அரசின் சேவைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில், பிரதமர் மோடி வல்லவர். பிற எந்த…

பர்சுக்குள் பணம் வைத்து போட்டால் மும்பை மக்கள் அதை எடுக்கமாட்டார்கள்:…

உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் பணம் தொடர்பான நேர்மை எப்படி உள்ளது என்பது குறித்து பத்திரிகையொன்று ஆய்வு நடத்தியது. அதில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைவிட, மும்பை மக்கள் நேர்மை குணம் உள்ளவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் உலகிலுள்ள 16 முக்கிய நகரங்களிலுள்ள மக்களின்…

கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாடு

இந்தியாவில் கவுரவக்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதைத் தடுக்க தனியாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் இதை தடுக்க முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகரத். புதுக்கோட்டையில் அக்கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கவுரவக்கொலைகளுக்கு எதிரான மாநாட்டில் மேலும் அவர்…

ராமலிங்கனார் நினைவு நாள்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளை பிப்ரவரி. 3-ஆம் தேதி மூடவேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் பிப்ரவரி. 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் சென்னையில் உள்ள…

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: மத்திய அரசின் செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம்…

குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தேவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள அகதிகளை திருப்பி அனுப்புவதுதை மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க…

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக, நாளை இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் நடக்கவிருப்பதாக, இந்திய…

இலங்கை செல்ல தயாரான நிலையில் 70 சதவீத அகதிகள்!

தமிழகத்தில் வாழும் அகதிகளில் 70 சதவிகிதம் பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மீனவர் பிரச்சனை மற்றும் இலங்கை அகதிகளை திரும்ப அனுப்புவதற்கான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம், அதன் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் எம்பி தலைமையில் நேற்று நடந்தது. இதில்…

பாலினம் கண்டறிய இணைய விளம்பரங்கள்: இந்திய உச்சநீதிமன்றம் தடை

இந்தியாவில் இணைய தள தேடல் எஞ்சின்களை நடத்தும் கூகிள், யாஹூ, பிங் போன்ற நிறுவனங்கள், தங்கள் தளங்களில் பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன் கிழமை தடை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொது நல வழக்கொன்றின் அடிப்படையில்…

அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள்: சீனாவை நம்பியிருக்கும் இந்தியா; நிலையை…

பெங்களூரு: கடந்த நான்கு நிதியாண்டுகளாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகளின் மொத்த மதிப்பு சுமார் 38 ஆயிரத்து 186 கோடி என கணக்கிடப் பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: பிரதமர் மோடி அறிவித்துள்ள மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலிடம் கொடுக்க வேண்டிய இடத்தில் மருந்து…

மதச் சகிப்புத்தன்மை வளர்ச்சிக்கு அவசியம்: ஒபாமா வலியுறுத்தல்

தில்லி ஸ்ரீபோர்ட் அரங்கில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிறகு பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய ஒபாமா. "நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத்தன்மை அவசியம்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ஒபாமா, சவூதி அரேபியாவுக்குப் புறப்படும் முன்பாக, தில்லியில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.…

இந்தியாவில் முதலீடு செய்வோம்: ஒபாமா

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். டெல்லியில் தாஜ் பேலஸ் ஹொட்டலில் இந்தோ- அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர்…

எல்லை தாண்டிய சக்திகளால் காஷ்மீர் வளர்ச்சி தடங்கல்: கவர்னர் வோரா

ஜம்மு:எல்லைத் தாண்டிய சக்திகளால் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தடையாக இருக்கின்றன என அந்த மாநில கவர்னர் வோரா தெரிவித்தார்.இதுகுறித்து ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில், நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து வோரா கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு, எல்லைத் தாண்டிய எதிர்மறை சக்திகளும், அமைதி, சகஜநிலையை ஏற்படுத்த எழும்…

சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்;…

சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த அமெரிக்கா சதி: சீனா…

 இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தனித்தனியாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம், இந்திய-சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தாங்கள்…

தனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர…

டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருக்கு மதிய விருந்தளித்த பிரதமர், காற்றோட்டமான இயற்கைச் சூழலில் அங்குள்ள புல்வெளியில் காலாற நடந்தபடியே ஒபாமாவுடன் சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார். பின்னர், தனது கைப்பட தேனீர் தயாரித்த…

1965 இந்தித்திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டக் காட்சி   1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நினைவுகூறப்பட்டது. தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும்…

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதுப்பிக்கப்படும் இந்திய- அமெரிக்க உறவு

மூன்றுநாள் சிறப்பு பயணமாக இந்தியா வந்துள்ள ஒபாமாவை நரேந்திர மோடி விமானநிலையம் சென்று வரவேற்றார்   இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்கப்படுவதற்கு அணுசக்தி ஒப்பந்தம் முக்கிய காரணமாக விளங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கூட்டாக கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில்…

“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார். தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலிப்…

டெல்லியில் மனிதர்கள் வாழவே முடியாது!

இந்தியாவிலேயே வாழ முடியாத மோசமான நகரமாக டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இசிஏ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் எவை என்ற ஆய்வை நடத்தியது. இதில் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் பெங்களூரூ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில்…

நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமி கூறியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, 2வது உலகப்…

கருப்பு பணம் மீட்பு குறித்த நடவடிக்கையை தெளிவுபடுத்த வேண்டும்: மத்திய…

சென்னை, ஜன.24- தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களுடைய பணத்தை இந்தியாவிற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் கொண்டுவருவோம் என்று பா.ஜ.க.வும், மோடியும் தேர்தல் நேரத்திலே மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். ஆனால்…

ஒபாமாவை தாக்க சதித்திட்டம் : , ஐ.எஸ்., – இலங்கை…

புதுடில்லி: குடியரசு தினத்திற்கு இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவில் வசிப்பவர்கள் மூலம் இந்த…

பாகிஸ்தானுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை

புது தில்லி, ஜன.23:  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக இந்தியாவைச்…