தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது.. தமிழக அரசு அறிக்கை

சென்னை: தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீத்தேன் போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், காவிரி போராட்டம், ஐபிஎல் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சாகர் மாலா போராட்டம்,…

வெளிநாடுகளில் தமிழக பாரம்பரியமிக்க 20 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

சென்னை, தமிழக சட்டசபையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலளித்து பேசியதாவது:- தமிழகத்தில் கண்டறியப்பட்ட 1,250 அரும் கலைப் பொருள்களை முறைப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 35 அருங்காட்சியகங்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 943 அரும்பொருள்கள் உள்ளன.…

சுடுகாட்டில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை ஒரு நாள் இரவு…

ஐதராபாத், ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி  எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடு  இவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள சுடுகாடு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அந்த  சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து அவர் ஒரு நாள் இரவு அங்கு படுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது…

திருமணத்திற்கு வரதட்சணைக்கு பதிலாக 1,001 மர கன்றுகளை பரிசாக கேட்ட…

கேந்திரபரா, ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சரோஜ் காந்தா பிஸ்வால் (வயது 33).  பள்ளி கூடம் ஒன்றின் ஆசிரியரான இவருக்கும், ஆதம்பூர் நகரில் உள்ள ரேஷ்மிரேகா பைடாலா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  மணமகளும் ஆசிரியை பணியில் உள்ளார். இந்த நிலையில், திருமணத்திற்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என கூறியுள்ள…

“கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது”- நீர்வள…

சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை இருப்பதாக சமீபத்தில் நிதி ஆயோக் அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நீர்வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழுக்கு ஃ பேஸ்புக்…

சிவபானமா இது… திருவண்ணாமலை சாமியார்களின் சுகவாசம்!

படுக்க இடம் கிடையாது, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலை கிடையாது, உற்றார், உறவினர் இருந்தும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்கள்  நூற்றுக்கணக்கில் உள்ளனர். அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டே வாழ்கிறோம் என உடம்பில் திருநீறு பட்டையுடனும் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையுடனும் வலம் வருகிறார்கள். கடந்த வாரம் கிரிவலப்பாதையில் ஒரு…

பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய…

சென்னை: பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி…

பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு.. மாணவி நந்தினி தந்தையுடன்…

மதுரை: டெல்லியில் வரும் 25ம் தேதியன்று பிரதமர் மோடி வீடு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை சட்டக்கல்லூரி மாணவியான நந்தினி. இவர் தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை…

போலீஸ் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் குண்டர்…

ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் நடந்த…

ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள் என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!

திருவள்ளூர்: ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம்,…

2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

திரிபுரா மாநிலத்தில், ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய பழங்குடியின சிறுமிக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரிபுரா மாநிலம், தன்சேரா பகுதியில் சுமதி(9) என்ற பழங்குடியின சிறுமி தனது பெற்றொருடன் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளம் அபாயகரமான…

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் எத்தனை விவசாயிகளுக்கு…

கோவை : சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் -…

இந்தியாவில் மீண்டும் பண நீக்க நடவடிக்கை வருகிறதா? பூடான் ரிசர்வ்…

சென்னை: இந்திய ரூபாயை கையில் வைத்திருக்காதீர்கள். சேமிக்காதீர்கள் என்று பூடான் ரிசர்வ் வங்கி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளானா பூடான், நேபாளம் நாடுகளிலிருந்து பலரும் இந்தியாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதனால், அவர்கள் இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தி வந்தனர். இதனை பூடான் நேபாளம் நாட்டு…

இந்தியாவின் உதவியை நாடும் கொரியா..

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் உதவி அவசியம் என தென்கொரிய துணை வெளியுறவு மந்திரி இன்று புதுடெல்லியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு கொரிய…

நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன் , தப்பியோடிய எஸ்.வி சேகர்.!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியது தொடர்பாக பதியப்பட்டிருந்த வழக்கில் இன்று நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்திட வேண்டுமென…

அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..

நியூயார்க்: அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால்…

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரையில் அமையும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கிறார். சுமார் 20 ஆண்டு கால கோரிக்கைக்குப் பிறகு மதுரையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, "செங்கல்பட்டு, மதுரை,…

“இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்” ஆய்வறிக்கையில்…

இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. முதல் முறையாக நீர் மேலாண்மை குறியீடு பற்றிய அறிக்கையை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா தனது வரலாற்றிலேயே மிக மோசமான…

`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்

உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இதுவரை அறிந்திராத மொழியில்…

மன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ், வளர்மதி- சேலம்- சென்னை 8…

சேலம்: சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு மக்கள் எதிர்ப்பு தொடர்கிறது. அதேநேரத்தில் இந்த 8 வழிசாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என சந்தேகிப்பவர்களை உடனடியாக கைது செய்வதில் போலீசார் மும்முரமாக இருந்து வருகிறது. சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு எதிரான போராட்டத்தில் நடிகர் மன்சூர்…

ஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில், ரூ.12 லட்சத்தை எலி ஒன்று கடித்து குதறி நாசம் செய்துள்ளது. கவுகாத்தி டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதி அருகே அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த மே 19-ம் தேதி பணம் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அடுத்த…

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை

பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போடுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதை மத்திய அரசு கேட்கவில்லை. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தை கூறி…

வன்முறையை தூண்டியதாக சேலத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கூட்டங்களை நடத்திய 'சேலமே குரல் கொடு' அமைப்பை சேர்ந்த பியூஷ் மானுஷை இன்று தீவட்புபட்டி போலீசார் கைது செய்தனர். நேற்று திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில் பியூஸ் மானூஷூம் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் மீது…