சிங்கள ராவயவிடம் அடிபணிந்தார் ஜனாதிபதி – மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு…

மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட சிங்கள ராவய பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பொன்றை…

புலிகள் பாவித்த தனித் தீவுக்கு மகிந்தர் இன்று பயணமானார் !

இன்று காலை(இலங்கை நேரப்படி) மகிந்தர் தன்சானியா நாடு மற்றும் சீஷெல் தீவுக்கும் பயணமாகியுள்ளார். தன்சானியா என்னும் நாடு பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சீஷெல்லா ? அப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று பலர் வியப்படைவார்கள். இந்துமா கடலில் இலங்கைக்கு கீழ் புறமாக மலதீவுகள் உள்ளது அங்கிருந்து ஆபிரிக்கா…

உரப் பற்றாக்குறை : கவலையில் இலங்கை விவசாயிகள்

இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள். உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது. ஆயினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற உரத்தின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரி…

முன்னாள் மூத்த புலி போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார்…

சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்க ராஜபக்ச ஆலோசனை

ஜனநாயக கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் உரிமைகளை மீண்டும் வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அதிக கவனம் செலுத்தி வருகிறார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த வருடம் மே மாதம் 21ம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போது, அவரது வாக்குரிமை…

நாளை மலரும் தமிழீழத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகள்: பிரதமர் உருத்திரகுமாரன்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த மே 18ம் நாள் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான விடயங்கள் பல்வேறு முஸ்லிம் பிரதிநிதிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தில் நிலைப்பாடுகள் தொடர்பிலான வரைவின் 10வது சரத்தில் 'தமிழீழத்தில் வாழும்…

தமிழினி விடுதலை

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி புதனன்று காலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது…

லண்டனில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள் !

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, ஒருங்கிணைப்பில் ஞாயிறு 23 அம் திகதி அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவின் 39 அவது நினைவு நாளையொட்டி  இல 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை…

மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை

இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர். அவர்கள் கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்கள் மாகாணசபை முறையை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்துக்கு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.…

புலம்பெயர் தமிழர்களும் தமிழக அரசியல்வாதிகளுமே குழப்பத்திற்கு காரணம் -தயா மாஸ்தர்

இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினருக்கு தெரியப்படுத்தியதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் கூறுகிறார். வட- மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது, தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக…

பொது பல சேனாவுக்கு எதிராக தென்னிலங்கை கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் தெற்கே, களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு…

இனப்பிரச்சனைக்குத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது

இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அரசாங்கம் அமைத்திருக்கிறது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைந்த இந்த தெரிவுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்பீரிஸ், பசில் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் அரசின் பங்களிகளான ஈபிடிபி அமைச்சர்…

தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு: ததேகூ

இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார். இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை…

உயிர் அச்சுறுத்தல் : பல ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் தலைமறைவு

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013 மே மாதத்திற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கடந்த வருட ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம்…

வடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட மாட்டார்கள்

வடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை முகாம்களுக்கு வரையறுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய இந்திய விஜயத்தின் போது இது வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை- இந்திய உடன்படிக்கை 2.9 சரத்தின் அடிப்படையில் படையினரை வடக்கில்…

13வது அரசியல் சட்டத்தில் திருத்தம்: இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை: ராஜபக்ஷே

இலங்கையில், தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய, இந்திய அரசு ஆட்சேபிக்கவில்லை,'' என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில், வடகிழக்கு மாகாணங்களுக்கு, சுயாட்சி அளிக்க வழி செய்யும் ஒப்பந்தம், 1987ல், இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் மற்றும்…

தமிழ்ப் பெண்ணை காலால் உதைத்தச் சிங்களர்களுக்கு பதிலடி!

இங்கிலாந்தில் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில் இருந்து வெளியே வந்த சிங்கள இளைஞர்களை தமிழிளைஞர்கள் குறிவைத்து தாக்கியுள்ளார்கள். இதில் சிங்கள காடையர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய வீரத் தமிழர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் , ஈழத் தமிழ் பெண் ஒருவரை சிங்களக் காடையர்கள்…

வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்

வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் இரண்டாவது நிலைப் பட்டியலில் அந்த நாடு பட்டியலிடப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு கட்டாய…

இங்கிலாந்து மைதானத்தில் இலங்கைக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்!

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத்…

தமிழர் உரிமைகளை அழிக்க சிங்களர் 10 லட்சம் கையெழுத்து!

வட கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. கடந்த 33 வருடங்களாக நடக்காமல் இருந்த 2 மாகாணசபைகளும் இவையே. இதுவரை காலமும் எதுவும் பேசாது இருந்த சிங்கள கடும்போக்காளர்கள், தற்போது இதுகுறித்து பல செயல்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். அதாவது வட கிழக்கு தேர்த்தல் நடைபெற்று மாகாணசபை அமைக்கப்பட்டால், காணி மற்றும் பொலிஸ்…

இலங்கை நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் அதிருப்தி

இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தமிழ் தேசியக்…

தமிழர் காணிகளைப் பறித்து சிங்களர் விவசாயம்!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மீள்குடியேற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாங்கள் கைவிட்டுச் சென்ற வயல் காணிகளைத் தங்களுக்குத் திருப்பித்தர வேண்டும் என்று புதனன்று அதிகாரிகளிடம் கோரியிருக்கின்றனர். இந்த மக்களுக்கு சொந்தமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட…

தமிழின உணர்வாளர் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவில் அஞ்சலி

தமிழின எழுச்சிக்காக ஓங்கி குரல் கொடுத்து வந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் தமிழ் மக்களின்  மனங்களில் தனி முத்திரை பதித்த நடிகரும், தமிழின உணர்வாளருமாகிய மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தை மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும்…