தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

நீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதற்காக அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

பொறுப்பற்று செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்; ஜே.வி.பி அறிவிப்பு!

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொடர்…

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு; மோடியிடம்…

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கே உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. ஆகவே, இந்த…

ஏப்ரல் 21 ‘குண்டுத் தாக்குதல்கள்:’ விசாரணைக்குழுவின் அறிக்கை மைத்திரியிடம் இன்று…

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதியரசரான விஜித் மலல்கொடவினால் அறிக்கை…

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு… மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்…

கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று சந்தித்தனர், இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு இந்தியா- சிறிலங்கா இணக்கம்

தீவிரவாதத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்புக்குப் பின்னர், வெளியிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை,…

தமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி வருமாறு கூட்டமைப்பினருக்கு மோடி…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையுடனான ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் முகமாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன், நாடாளுமன்ற தேர்தலில்…

இலங்கை அரசுக்கு தமிழ் உறவுகள் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!

இந்த நாட்டில் ஒரு ரத்ன தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்துக்கு முடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள்…

இன்று முதல் கிழக்கில் நாடு கடந்த தமீழ அரசாங்கம் செயல்பட…

இன்றுமுதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பொறுப்பாளராக தேவராஜா தெரிவாகியுள்ளார். உயர்மட்ட ஆலோசகர்கள் பலர் இவரை தெரிவுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, அங்கே தமிழர்களின் பலத்தை கூட்டவும். தமிழர்கள் பாதுகாப்பாக வாழவும் , பல புத்திஜீவிகள் இணைந்து பெரும்…

இலங்கை ஜிகாடி முஸ்லீம்களுக்கு ஆதரவாக சில முஸ்லீம் நாடுகள் கடும்…

இலங்கையில் முஸ்லீம்கள் மீது சிறு கீறல் கூட விளக் கூடாது என்றும், ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்பு உலக பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட செயல் என்றும். இதற்கு இலங்கையில் உள்ள முஸ்லீம்களை பழி வாங்க வேண்டாம் என்றும், அரபு நாடுகள் கூட்டாக இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை எச்சரிக்கை…

இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள்…

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக…

சிறிலங்காவுக்கு உதவும் 20 அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான  விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்ரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்டார். ”தீவிரவாத தாக்குதல்கள்…

மதில் மேற்பூனையின் வேடிக்கை

மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது.  இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும் மிக வன்மையான கண்டனங்களும் பலபக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட்டாக முன்னெடுத்த அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஆகிய அமைச்சுகளிலிருந்து இராஜினாமாச் செய்தமை,…

முஸ்லிம் அமைச்சர்கள் ஆடிய பதவி விலகல் நாடகம்? வெளியாகும் உண்மையால்…

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து எழுந்த அச்சமான சூழ்நிலையை அடுத்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான கபீர் ஹாசிம்,…

ஸ்டாலின் மாவை சந்திப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  இன்று காலை  சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். குறித்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கினார்.…

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு (வெலிஓயா) பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதி குருகந்த ரஜமஹா விகாரை என்ற தமது ஆலயம் அமைந்துள்ள பகுதி எனவும் இந்த ஆலயப் பகுதியில் அரசியல்வாதிகள்…

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு அழைப்பு!

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பு ஏற்கவேண்டுமென கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணி யளவில் மகா சங்கத்தினர் கூடிநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 15 விடயங்களின் கீழ்…

‘இலங்கை இனவாதத்திற்கு மண்டியிட்டுள்ளது’ – இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு…

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் பெரும் இழப்பைச் சந்தித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போதும், தமிழர்கள், பெரும்பான்மை…

தமிழ் தலைமைகள் என்று சொல்லிக்கொள்ளும் துரோகிகளே இதனை கொஞ்சம் படியுங்கள்!

ஹிஸ்புல்லாவிடம் இருந்து தமிழ் தலைமைகள் எவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பின்னர் பார்ப்போம். ஒரு முஸ்லிம் சமூகத் தலைவரான ஹிஸ்புல்லா என்கின்ற தலைவர் தனது இனம் சார்ந்த தரிசனத்தில் அன்று முதல் இன்றுவரை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றார். வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும், கிழக்கு மகாணம் முஸ்லிம்களுக்குரியது, கிழக்கு…

ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரானுடன் தொடர்பு; பொலிஸில் முறைப்பாடு செய்த தமிழ் தலைவர்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தினைச் சேர்ந்த ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் இந்த முறைப்பாட்டில் கிழக்கு…

இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பற்றிய புகார்களை ஏற்க போலீஸார்…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை முன்வைப்பதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்று போலீஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன்…

இலங்கை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்: ஜனநாயகத்தை குழிதோண்டி…

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும்…

முஸ்லீம் ஆளுநர்களின் பதவி விலகல் எதிரொலி; உண்ணாவிரதத்தை கைவிட்ட தேரர்…

கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய ரத்ன தேரர், தனது உண்ணா விரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரதப்…