பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தற்கொலை தாக்குதல்: 61 பேர் பலி
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச் சாவடி பகுதியில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 55 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.…
போராளிகள் மீது குண்டு வீச்சு: இராணுவத்தின் அட்டூழியம்
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு படைகள் போராளிகள் மீது பேரல் குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகின்றனர். சிரியாவின் ஜனாதிபதி அல் ஆசாத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சிரியாவில்…
50 பழங்குடியின மக்கள் சுட்டுக்கொலை: ஐ.எஸ்.ஐ.எஸ்யின் உச்சகட்ட வெறிச்செயல்
ஈராக்கில் 50 பழங்குடியின மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை பிடித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். கடத்தல் கச்சா எண்ணெய் விற்பனை மூலம்தான்…
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை கல்யாணம் கட்டிய தீவிரவாதிகள்: பரபரப்பு தகவல்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளுக்கு, தீவிரவாதிகளுடன் திருமணம் நடக்கப்போகிறது என்று போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இதில் சிலர் தப்பி வந்த நிலையில் தற்போது 219 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில்…
காங்கோ நாட்டில் தீவிரவாதியை கல்லால் அடித்து கொன்று, தின்ற கும்பல்
பெனி, நவ.1– ஆப்பிரிக்காவில் காங்கோ நாடு உள்ளது. அங்கு ‘எ.டி.எப். நலு’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு எதிராக கொடுஞ்செயல் புரிந்து அவர்களை கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் கம்பியா சூ என்ற கிராமத்தில் புகுநது 14 பேரை…
ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் சீரழிக்கப்பட்ட தருணங்கள்…19 வயது சிறுமியின் கண்ணீர் பேட்டி
யாஸிதி இனத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தித்த கொடுமைகளை பற்றி அளித்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ஈராக்கின் சின்ச்சார்(Sinjar)மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினத்தவரான யாஸிதி மக்களை கடத்தி…
15,000 அயல்நாட்டு ஜிகாதிகள்: விஸ்வரூபம் எடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் மொத்தம் 15,000 வெளிநாட்டு ஜிகாதிகள் இருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது அமைப்பில் ஆள் சேர்ப்பதில் தீவிரமாய் இருந்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் போராட…
பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க ஈரான் வலியுறுத்தல்
அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான…
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது சுவீடன்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தை, தனி நாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவைப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் வியாழக்கிழமை கூறியதாவது: பாலஸ்தீன நாட்டுக்கு இன்று (அக். 30) அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை…
கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் எல்லைப்புற நகரான கொபானேவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக சிரியா கிளர்ச்சிப் படையினர் துருக்கி வழியாக அந்த நகருக்குள் புதன்கிழமை நுழைந்தனர். "சுதந்திர சிரியா ராணுவம்' என்று அழைக்கப்படும், அதிபர் அல் அஸாதுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சிப் படையினர் சுமார் 50 பேர், சிரியா…
70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் 70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தினந்தேறும் பல தலைத் துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். தற்போது வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் (Idlib)…
ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கவில்லை: கத்தார் அதிகாரிகள் மறுப்பு
சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு கத்தார் நிதி உதவி வழங்கி வருவதாக வெளியான செய்தியை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும் போது சட்ட திட்டங்களுக்குட்பட்டு செயல்படும் போராளிகளுக்கு மட்டுமே கத்தார் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்தனர். இந்த நிதி உதவி அமெரிக்க மத்திய புலனாய்வு, மேற்கத்திய…
கட்டாய திருமணம், கற்பழிப்பு: கதறும் சிறுமிகள் (வீடியோ இணைப்பு)
போகோ ஹாரம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த சிறுமிகளும், பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி மனித உரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதால், அரசை மிரட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 300 பள்ளி…
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வஜிரிஸ்தான் பகுதியானது ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து பல தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக…
இராக்: தற்கொலை தாக்குதலில் 24 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். பாக்தாதுக்குத் தெற்கேயுள்ள ஜுர்ஃப் அல்-சகார் என்ற இடத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தது. வாகனம் ஒன்றில் வெடிபொருள்களை நிரப்பி வந்த ஒருவர் அதனை ராணுவ சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தார்.…
ஈராக்–சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்
ஈராக் மற்றும் சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை தகர்க்க அவர்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் தீவிரவாதிகள் அங்கு ரசாயன குண்டுகளை வீசுவதாக…
ஹாங்காங் போராட்டம் குறித்த வாக்கெடுப்பு தாற்காலிக நிறுத்தம்
ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பை போராட்டக் குழுவினர் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். வாக்கெடுப்பு முறை குறித்து குழுக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும்…
பெண் போராளிகளை கண்டு நடுநடுங்கி ஓடும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக்-சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்திஷ் பெண் போராளிகளை கண்டு அஞ்சி ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கொபேனி (Kobani) நகரை தங்கள் வசமாக்க கடும்…
தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசிய ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக் மற்றும் சிரியாவில் தொடர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது தலை துண்டித்து சடலங்களை ரோட்டில் வீசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்-சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ரக்கா (Raqqa) நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தங்களை எதிர்பவர்களையும், இஸ்லாமிய…
படுகொலை செய்வது எப்படி? சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி
எதிரிகளை எவ்வாறு தலை துண்டித்து படுகொலை செய்ய வேண்டுமென, சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்து வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியதுடன், புதிய சட்ட திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம்,…
மருத்துவ உலகின் சாதனை! இறந்த இதயம் மீண்டும் உயிர் பெற்றது
இறந்து போன இதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்களே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இறந்த ஒருவரின் இதயத்தையும் உயிர்ப்பித்து மாற்று…
ஜப்பான் நாடே முழுமையாக அழிந்து விடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பயங்கர எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பான் முழுவதுமே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1,20,000 ஆண்டுகளாக எவ்வளவு கால இடைவெளியில் எந்த அளவில் எரிமலை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை யொஷியுகி டட்சுமி(Prof. Yoshiyuki Tatsumi) தலைமையிலான புவி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில்,…
ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகளில் அமெரிக்கா தாக்குதல்
ஐ.எஸ்.ஐ.எஸ் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கை ஒட்டிய சிரியாவின் எல்லைப்புற மாகாணமான தீர் எல்-ஸரில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் குறித்து அந்த அமைப்பு கூறுகையில், தீர் எல்-ஸரிலுள்ள ஜாஃப்ரா எண்ணெய்க்…