பாக்.: பள்ளிக்கூட நூலகத்திற்கு ஒஸாமா பின் லாடன் பெயர்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்களுக்கான மதப் பள்ளி ஒன்று தனது நூலகத்திற்கு அல்கைதா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின் லாடனின் பெயரை வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டிருந்த ஒசாமா பின்லாடனை, இஸ்லாத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர் என இந்தப் பள்ளிக்கூடம் சார்பாகப் பேசவல்லவர்…

மூழ்கியக் கப்பல்: மாலுமிக்கு எதிராக பிடி-ஆணை கோரப்பட்டுள்ளது

தென்கொரியாவில் கடந்த புதன்கிழமையன்று 475 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலின் தலைமை மாலுமியை கைதுசெய்வதற்கான பிடி-ஆணை ஒன்றை பிறப்பிக்குமாறு சட்ட நடவடிக்கை அதிகாரிகள் நீதிமன்றம் ஒன்றிடம் கோரியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பல் ஊழியர்கள் வேறு இரண்டு பேர் மீதும் நீதிமன்றத்தில் பிடி-ஆணை கோரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த…

மரண தண்டனை கைதி தப்பிய அதிசயம்

ஈரான் நாட்டில் மரண தண்டனை கைதி மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ராயன் நகரில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடந்த தெரு சண்டையில் அப்துல்லா ஹுசைன் ஜடே ( 18) என்ற வாலிபரை பலால் என்ற மற்றொரு வாலிபர் கத்தியால் குத்தி…

மதத்துக்கு ஆதரவு அதிகம் என்கிறது ஆய்வு

மதம், சமூகத்தில் ஒரு பயனுள்ள பங்காற்றுவதாக உலகில் 65 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் கருதுவதாக அப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வொன்று, கூறுகிறது. வின் மற்றும் கேலப் ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆய்வில், சுமார் 66,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், நாடு என்ற அளவில்…

முஸ்லீம்களைக் கண்காணிக்கும் நியுயார்க் போலிஸ் திட்டம் கைவிடப்பட்டது

நியுயார்க் நகரில் முஸ்லிம் சமுதாயத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கண்காணிப்புத் திட்டத்தை தான் கைவிட்டுவிட்டதாக, நியுயார்க் போலிஸ் துறை கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், முஸ்லீம் சமூகத்தினரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்க சாதாரண உடையில் போலிசாரை அனுப்புவது, அவர்களது அன்றாட நடவடிக்கைகள் எங்கு நடக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களை…

ஆப்கானிஸ்தானில் அமைச்சர் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் அகமது ஷா வாஹீத், செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். காபூலை அடுத்த கைர்கானா என்ற இடத்தில் அகமது ஷா சென்ற காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரையும், அவரது கார் ஓட்டுநரையும் கடத்திச் சென்றனர். அவரை மீட்பதற்கு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக காவல்துறை…

ரஷியாவுடன் உக்ரைன் கிழக்குப் பகுதியை இணைக்கலாமா? தேசிய பொது வாக்கெடுப்புக்கு…

உக்ரைனில் தேசிய அளவிலான பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டின் இடைக்கால அதிபர்  அலெக்சாண்டர் துர்ச்சினோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில், டொனெட்ஸ்க் நகர் உள்ளிட்டவற்றில் அரசு கட்டடங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்கள் பொது வாக்கெடுப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.…

7 குழந்தைகள் கொலை, உடல்கள் அட்டைப் பெட்டியில் ஒளித்து வைப்பு,…

அமெரிக்க மாநிலமான யுட்டாவில், ஒரு இறந்த குழந்தை குறித்து கிடைத்த தகவலை அடுத்து விரைந்த போலிசார், அங்கு அந்தக் குழந்தையின் உடலுடன், அட்டைப்பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வேறு ஆறு குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்தனர். இந்த ஏழு குழந்தைகளின் தாய் என்று கருதப்படும் மேகன் ஹண்ட்ஸ்மன் என்ற 39 வயதுப்…

பாகிஸ்தான் : நரமாமிசம் உண்டவர் கைது

சிறிய குழந்தை ஒன்றை உண்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர். நரமாமிசம் உண்டதாக முன்னரும் ஒப்புக்கொண்டிருந்த முஹமட் அரிஃப் அலி என்னும் நபரின் வீட்டில் இருந்து அழுகிப்போன பிணவாடை வருவதாக அயலவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து அறுக்கப்பட்ட குழந்தையின் தலை…

ஆப்கான் தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முன்னிலை

ஆப்கானிய தேர்தலின் ஆரம்பக் கட்ட முடிவுகளின்படி முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டின் சுயாதீன தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மொத்தமுள்ள 30 மாகாணங்களில் 26 இல், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அப்துல்லாஹ் அவர்கள் 41.9 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது…

கிழக்கு யுக்ரெய்னில் “பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை”

யுக்ரெய்னின் கிழக்கிலுள்ள ஸ்லாவியன்ஸ்க் நகரில் இராணுவத்தினர் போல சீருடை அணிந்து வந்த ஆயுதமேந்திய நபர்கள் பாதுகாப்புத்துறைக் கட்டிடங்களை முற்றுகையிட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அரச பாதுகாப்பு படைகள் ஆரம்பித்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் தெரிவித்துள்ளார். யுக்ரெய்னின் அரச படையினர் மீது அந்த ஆயுததாரிகள்…

ரஷிய ஆதரவாளர்களின் வசமானது கிழக்கு உக்ரைனின் காவல் நிலையம்

உக்ரைனின் கிழக்குப்பகுதியான ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் காவல் நிலையத்தை ஆயுதங்களுடன் வந்து சனிக்கிழமை கைப்பற்றிய ரஷிய ஆதரவாளர்கள். உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று சனிக்கிழமை கைப்பற்றிக்கொண்டது. அவர்கள் ரஷிய ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர்…

சீனா, கொரிய நாடுகளைச் சீண்டும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரில் உயிரை நீத்த ஜப்பானிய வீரர்களின் நினைவிடமாகப் யாசுகினி போர் நினைவிடம் அந்நாட்டவர்களால் போற்றப்படுகின்றது எனினும் அங்கு சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும் புதைக்கப்பட்டது அந்த நாடுகளின் உணர்வுகளில் இன்னும் ஆறாத ரணமாகவே உள்ளது. ஏற்கனவே தங்களது எல்லைப் பிரச்சினை மற்றும் கிழக்கு சீனக் கடலில்…

ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை

""உக்ரைன் மீதான தலையீட்டை அதிகரித்து வரும் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்'' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனில் அத்துமீறலில் ஈடுபடும் ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களை உடனடியாக கீழே போட வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க…

பாதிரிமார் சிறார் துஷ்பிரயோகம் : பாப்பரசர் மன்னிப்பு கோரினார்

சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ரோமன் கத்தோலிக்க பாதிரிமார் செய்த தவறுகளுக்காக பாப்பரசர் பிரான்ஸிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ஏற்படுத்தப்பட்ட தனிப்பட்ட மற்றும் தார்மீக பாதிப்பு குறித்து திருச்சபை உணர்ந்திருக்கிறது என்றும், அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் தடைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் பாப்பரசர் கூறியுள்ளார். சிறார் துஷ்பிரயோக பாதிரிமாரின்…

மத அடையாளங்கள் விவகாரத்தில் அமெரிக்கா பாரபட்சம்: சீக்கிய அமைப்புகள்

அமெரிக்க ராணுவத்தில் மத அடையாளங்களை வெளிப்படுத்துவது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் பாரபட்சமானது என்றும், இந்த விவகாரத்தில் அந்நாடு பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அங்குள்ள சீக்கிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தற்போது கொண்டுவந்துள்ள புதிய விதிமுறையின் கீழ், ராணுவத்தில் இருக்கும் சீக்கியர்கள் தங்களது…

உக்ரைனில் ரஷ்யா ஆதிக்கம்: அமெரிக்கா கண்டனம்

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அச்சுறத்தல் நடத்தி வருவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8ம் திகதி, வெளிநாட்டு தொடர்புகளுக்கான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில்…

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி

பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர். குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து வைக்கப்படிருந்திருக்கிறது. கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும்…

65 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது டொயோட்டா

ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள டொயோட்டா கார்கள்   கார் தயாரிப்பு வரலாற்றில் இந்த அளவுக்கு ஒரு நிறுவனமும் தனது தயாரிப்புகளை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, தனது யாரிஸ், அர்பன் க்ரூய்ஸர், RAV 4 மற்றும் ஹைலுக்ஸ் ரக வாகனங்களையே…

திருமணத்தில் சிரிக்க கூடாது, சாவு வீட்டில் அழக்கூடாது: தீவிரவாதிகளின் ஆதிக்கம்

சீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் நகர் ஒன்றில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு பல விதிமுறைகளை அங்குள்ள திவிரவாதிகள் முன்வைத்துள்ளனர். சீனாவில் உள்ள பாகிஸ்தான் எல்லையின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உகியார் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு உள்ள தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலும் அப்பகுதியில் இஸ்லாமியர்களுக்கு கடுமையான விதிமுறைகளை…

போதையில் மிதக்கும் இளைஞர்கள்: ஆய்வில் தகவல்

ஜேர்மனியில் ஏராளமான இளைஞர்கள் குடிப்பழக்கத்தில் சிக்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. ஜேர்மனியின் அரசாங்க மருத்துவ ஆணையம் அந்நாட்டிலுள்ள குடிக்காரர்களின் எண்ணிக்கையை அறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் கடந்த 2013ம் ஆண்டில் 26,000 இளைஞர்கள் மதுப்பழக்கதினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2012ம்…

ரஷியாவுடன் இணைய உக்ரைன் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம்?

உக்ரைனில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு ஆதரவானவர்கள் என கூறப்படும் சில நீதிபதிகளை நீக்கக்கோரி, அந்நாட்டு உச்சநீதிமன்றம் முன்பு திங்கள்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபடும் வலதுசாரி குழுக்களைக் கடந்து செல்லும் நீதிமன்றப் பணியாளர்கள்.  ரஷியாவுடன் இணைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உக்ரைனின் கிழக்குப் பகுதி மக்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாக…

ருவாண்டா இனப்படுகொலை – ஓர் சரித்திரப் பார்வை

1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார்; கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார். பின்னணி ருவாண்டாவின் அப்போதைய ஜனத்தொகையில் 85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த துத்ஸி…