பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உக்ரைன் எல்லையில் நேட்டோ கண்காணிப்பு விமானங்கள்
உள்நாட்டுப் பிரச்னை மற்றும் ரஷிய ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் நிலவரத்தைக் கண்காணிக்க நேச நாடுகளின் கூட்டுப்படை (நேட்டோ) தனது இரு கண்காணிப்பு விமானங்களை அந்நாட்டின் எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது. ஒரு நாட்டின் வான் எல்லைக்கு அப்பால் பறந்தவாறே அந்நாட்டைக் கண்காணிக்கும் திறன் கொண்ட "அவாக்ஸ்' (எர்போர்ன் வார்னிங்…
உக்ரைனில் இருந்து சுதந்திரம்: கிரீமியா நாடாளுமன்றத்தில் தீர்மானம்
உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெற்றதற்கான தீர்மானம், கிரீமியா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யாணுகோவிச் தனக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததையடுத்து ரஷியாவுக்கு தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து உக்ரைனின் ஆட்சிக்கு உள்பட்டு தன்னாட்சி பகுதியாக விளங்கிய கிரீமியா பகுதிக்குள் ரஷியா தனது ராணுவத்தை அனுப்பியது.…
அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல்
அமெரிக்க ராணுவத்தில் மத அடையாளங்களான தாடி, தலைப்பாகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோ கிரவ்லி, ரோட்னி ஃபெரேலிங்கியைசென் ஆகியோர் தலைமையிலான 105 எம்.பி.க்கள் இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செயலாளர் சக் ஹேகலுக்கு கடிதம்…
யேமென் அருகே அகதிகள் படகு மூழ்கி 40 பேர் பலி
அகதிப் படகு ஒன்று யேமெனிற்கு தெற்கு கரையோரத்தை ஒட்டிய கடல் பரப்பில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களைச் சுமந்து வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர். மூழ்கிய இந்தப் படகில் இருந்து குறைந்தது முப்பது பேரை யேமெனிய கடற்படை…
சிரியா : கடத்தப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுதலை
கடத்தப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுதலை சிரியாவின் கிறிஸ்தவ நகரான மாலௌலாவில் கடந்த டிசம்பரில் கிளர்ச்சிக்காரர்களால் கடத்தப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க பழமைவாத திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் குழு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது. கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த 13 கன்னியாஸ்திரிகளும், அவர்களது 3 உதவியாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.…
கிரீமியாவில் ரஷிய படைகள் குவிப்பு: அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைனின் கிரீமியா பகுதியில் ரஷிய படையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் ஆயுதம் தாங்கிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதையடுத்து மேற்கத்திய நாடுகள் - ரஷியா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. கிரிமீயாவை விட்டு வெளியேற வேண்டும் என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை எச்சரித்து வரும் நிலையில், இந்த படைக் குவிப்பின் மூலம்…
உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்யா: 6 நாட்டு தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை
உக்ரைன் விவகாரம் தொடர்பாக 6 நாட்டு தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைன் நாட்டிலுள்ள கிரீமியா சுயாட்சி பகுதியில் ரஷ்யா ராணுவம் நுழைந்து பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதோடு அந்த பிரதேசத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தடுப்பது குறித்து…
உலகில் முதல் 3டி விரல்ரேகை பதிவு: சாதனை படைத்த இந்தியர்
உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணனி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார். கான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித்தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண…
ரஷ்ய அதிபர் புதினின் உடல் அசைவுகளை நோட்டமிடும் அமெரிக்கா
உடல் அசைவுகளை மொழிப்பெயர்க்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசானது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் , ரஷ்ய பிரதமர் ட்மிர்ட்டி மெட்வெடேவ், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், ஈராக்கின் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் உசேன், தீவிரவாதி ஒசாமா…
எய்ட்ஸ் நோய் தொல்லை இனி இல்லை!
இனிவரும் காலங்களில் எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை எளிதில் காப்பாற்றிவிடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் கடந்தாண்டு எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு, பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில்…
அபாய நிலையில் பாரம்பரிய சின்னங்கள்
உலகின் பாரம்பரிய சின்னங்கள் அனைத்தும் வெப்பமயமாதல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்கள் பட்டியலில் தற்போது 720 இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வெப்பநிலையினால் உயரும் கடல் மட்டமானது, இந்தப் பாரம்பரியத் தலங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆய்வு…
யுக்ரெய்ன் நெருக்கடி: கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவு
ரஷ்ய சமஷ்டிக் கூட்டமைப்புடன் ஓர் அங்கமாக இணைந்துகொள்வதற்காக யுக்ரெயினின் கிரிமியா பிராந்திய சட்டமன்றம் வாக்களித்துள்ளது. கிரிமியா சட்டமன்றத்தின் இந்த முடிவு பற்றி கிரிமியா மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்கான வாக்கெடுப்பும் மார்ச் 16-ம் திகதி நடத்தப்படவுள்ளது. ஆனால் அப்படி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று யுக்ரெயின்…
வலியின்றி மிருகங்களை அறுக்குமாறு பிரிட்டனில் கோரிக்கை
பிரிட்டனில் சமய வழக்கங்களுக்காக மிருகங்களை வெட்டும்போது மனிதத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டின் மூத்த மிருக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முஸ்லிம்கள் அல்லது யூதர்களின் இறைச்சி சந்தைகளுக்காக மிருகங்களை வெட்டும்போது, முதலில் உணர்விழக்கச் செய்துவிட்டு- மிருகங்கள் வலியை உணராதபடி அவற்றைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டனின்…
“ஆசிட்’ வீச்சுக்கு எதிரான பிரசாரம்: லக்ஷ்மிக்கு விருது வழங்கினார் மிஷெல்…
மிஷெலிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லக்ஷ்மி (அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து 2-வது நபர்). ஆசிட் வீச்சால் பாதிப்படைந்து, அதற்கு எதிராகப் பிராசரத்தில் ஈடுபட்டு வரும் இந்தியப் பெண் லக்ஷ்மிக்கு சர்வதேச வீரப் பெண்மணி விருதை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி…
ரஷ்யா மீது அதிகரிக்கும் நெருக்கடிகள்!
உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண ரஷ்யாவுக்கு ராஜீய ரீதியாக நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டுள்ளன. உக்ரைனின் கிரீமியா பிராந்திய ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ரஷ்யா உலகை ஏமாற்ற முடியாது என்று ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தலைநகர் கீவில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
உக்ரைனின் கிரிமியாவில் இருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெற்ற அதிபர்…
உக்ரைனின் தன்னாட்சிப் பிராந்திய பகுதியான கிரீமியாவின் கிழக்கு படகுத் துறைமுகப் பகுதியை ரஷிய ஆதரவாளர்கள் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றினர். இந்தப் பிராந்தியம் அமைந்துள்ள கருங்கடல் பகுதியில் மேலும் படைகளை குவிக்கும் ரஷியாவின் திட்டத்தால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷியாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த படகு…
ரஷ்யா மீது பொருளாதார தடை? ஒபாமா ஆலோசனை
உக்ரைன் மீதான பிரச்னையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஆட்சிக்கு வந்தனர், ரஷ்யாவின் அனுதாபியாக இருந்த விக்டர் யானுகோவிச் துரத்தப்பட்டார். இதனையடுத்து உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிரதேசத்தை ரஷ்யா ராணுவம்…
சௌதி: வெளிநாட்டு தொழிலாளர் தடுப்பு மையத்தில் கலவரம்
சௌதி அரேபியாலிருந்து வெளியேற்றப்படக் காத்திருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் நடந்த கலவரத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்று சௌதி போலிசார் தெரிவித்தனர். இக்கலவரத்தில் ஒன்பது பேர் காயமடைந்திருக்கின்றனர். மெக்காவுக்கு அருகே இருக்கும் அல்-ஷுமைசி என்ற இடத்தில் இருக்கும் இந்த மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, அதைக் கட்டுப்படுத்த தாங்கள்…
க்ரைமீயாவில் பிடியை இறுக்குகிறது ரஷ்யா
யுக்ரெய்னின் க்ரைமீயா பிராந்தியத்தில் ரஷ்யா தனது தலையீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ராஜீய ரீதியிலான சர்வதேச அழுத்தங்கள் கூடிவருகின்ற வேளையிலும், அங்கு ரஷ்யா தனது இராணுவப் பிரசன்னத்தையும் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது. யுக்ரெய்னின் இராணுவ தளங்கள் தொடர்ந்தும் ரஷ்யத் துருப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்துக்கான இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் போடப்பட்டு…
உக்ரைனில் பதற்றம்: ரஷிய படைகளை வாபஸ் பெற புதினிடம் ஒபாமா…
உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதைத் தொடர்ந்து கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தில் இருந்து ரஷியப் படைகளை வாபஸ் பெறும்படி அந்நாட்டின் அதிபர் விளாதிமீர் புதினிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் ரஷிய அதிபர்…
ஜி-8 உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க பிரான்ஸ் நடவடிக்கை
முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பாக ஏற்பட்ட மக்கள் போராட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய தேர்தல்கள் நடத்துவதும் குறித்த ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இந்த…
சீனாவில் மர்ம மனிதர்கள் தாக்குதல்!: 28 பேர் பலி, 113…
சீனாவின் தென்மேற்கில் உள்ள கன்மிங் நகர் ரயில் நிலையத்தில் மர்மக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு மர்மக் கும்பல் ஒன்று ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் மீது கத்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. தாக்குதல்…
பாலியல் அடிமைகள் தொடர்பில் ஜப்பான் சர்ச்சை
இரண்டாம் உலக போர் மற்றும் சீனாவுடான போரின் போது அண்டைய நாடுகளை சேர்ந்த பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக ஜப்பான் இராணுவம் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் பல ஆண்டுகாலமாக பதில் எதுவும் கூறாமல் நழுவி வந்த ஜப்பான் இறுதியாக கடந்த 1993 ஆம்…