எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் 529 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனைகளை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் மொர்ஸிக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம் செய்தவர்களை பாதுகாப்பு படையினர் வன்முறையாக கலைத்ததை அடுத்து, பொலிஸ்காரர் ஒருவரைக் கொலைசெய்தது, பொலிசாரைத் தாக்கியது போன்ற…

இயந்திர மனிதன் எழுதிய செய்தி பத்திரிகையில் வெளியீடு

வாஷிங்டன்: இயந்திர மனிதன், "ரோபோ' எழுதிய செய்தி, அமெரிக்காவின், "தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளரும், புரோகிராமருமான, கென் ஷ்வெங்கே, இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ, பூகம்பம் குறித்த செய்திகளை எழுதுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தானியங்கி முறையில், செய்தியை தயாரித்து விடும். "தி லாஸ்…

ஏவுகணைச் சோதனையில் ஈடுபடுகிறது வடகொரியா

வட கொரியா, குறைவான தூரம் சென்று தாக்கக் கூடிய 16 ஏவுகணைகளை கடலில் ஏவி ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் வரை நடைபெற உள்ள தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

நைஜீரியாவில் குழந்தைத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பெருகிவரும் குழந்தைத் தொழிற்சாலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டுக் காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கிருக்கும் பெண்களை விடுவித்து வருகின்றனர். இதன்மூலம் மனிதக் கடத்தல், சட்டவிரோத மகப்பேறு மருத்துவமனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தை விற்பனையில் கிடைக்கும் ஒரு பங்கு பணத்துக்கு ஆசைப்பட்டு 20க்கும் குறைவான வயதுடைய பல…

ரஷ்யா மீது ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம்: யுக்ரேன் எச்சரிக்கை

யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது, யுக்ரைன் எல்லையை கடந்து கிழக்கு பகுதியை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்தால், ராணுவ…

“உலகிலேயே குற்றங்கள் நிறைந்த நகரம் பாக்தாத்”

அரபு நாடுகளுக்கு முன்மாதிரி நகரம் என்ற பாராட்டைப் பெற்றிருந்த பாக்தாத் நகரம், குற்றங்கள் அதிகம் நிகழும் மோசமான நகரமாக மாறிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது. உலகின் 239 நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியதாகக் கூறும் மெர்சர் கன்சல்டிங் என்ற நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து…

கிழக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை இல்லை: ரஷியா

உக்ரைனின் கிழக்குப் பகுதி மீது எவ்வித ராணுவ நடவடிக்கையையும் ரஷியா மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகலிடம் உறுதியளித்துள்ளார். இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்க மற்றும் ரஷிய…

தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் பாடமாகும் இந்திய மொழிகள்

ஜோகனஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இந்திய மொழிகள் நீக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு வாழும் சுமார் 1.4 மில்லியன் இந்திய வம்சாவளியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஆப்பிரிக்க அரசு இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 5 இந்திய…

தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத், கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக ரத்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாத இயக்கத்தினருடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்துகொள்ள பாகிஸ்தான் அரசு முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை எந்தவித முடிவும் இல்லாமல் மறுமுறை தொடங்கியது. அப்போது,…

சீனாவில் இரண்டு மில்லியனுக்கு விற்கப்பட்ட நாய்

பீஜிங், மார்ச். 20- திபெத்தைச் சேர்ந்த மஸ்டிப் இன நாய்க்குட்டி ஒன்று சமீபத்தில் சீனாவில் 2 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. உலகளவில் ஒரு நாய்க்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான விலை இதுவென்று கூறப்படுகின்றது. 80 செ.மீ உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்தக் குட்டியை ரியல் எஸ்டேட்…

யுக்ரெய்னிய தளத்தினுள் ரஷ்ய ஆதரவாளர்கள் நுழைந்தனர்

க்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள க்ரைமிய துறைமுகத்தின் யுக்ரெய்னிய கடற்படைத்தளத்தினுள் பல நூற்றுக்கணக்கான ஆயுதந்தாங்கிய ரஷ்ய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். யுக்ரெய்னிய கடற்படையினர் அந்தக் கடற்படைத்தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாக நம்பப்படுகின்றது. ரஷ்ய…

ஜி8 நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கம்! புதின் கண்டனம்

சக்தி வாய்ந்த ஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமின் புதிர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா தான் காரணமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியான லாரெண்ட் பாபியஸ், அந்நாட்டை ஜி8…

மரணத்தை தழுவும் இளம் மொட்டுகள்! சீனாவின் அதிரடி முடிவு

சீனாவில் பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொட்டில் குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் தீர்க்க முடியாத நோயின் தாக்கத்துடன் பிறக்கும் குழந்தைகளை சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் பல பெற்றோர் வீசி விடுவதால் குழந்தைகள் மரணத்தை சந்திக்கின்றன. இந்த அவல நிலையை விலக்கவே…

மலேசிய விமானம் வெடித்து சிதறவில்லை: ஐ.நா. அறிவிப்பு!- மலாக்கா ஜலசந்தியில்…

239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து…

உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டோம்: கிரிமீயா பிரகடனம்

உக்ரைனில் இருந்து கிரீமியா சுதந்திரம் பெற்று விட்டதாகவும், இனி ரஷியாவுடன் இணைந்துவிட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது. கிரிமீயாவில் உள்ள உக்ரைன் அரசின் அனைத்துச் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படும் என்று அறிவித்துள்ள நாடாளுமன்றம், தனிக்குடியரசாகியுள்ள கிரிமீயாவை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும்படி ஐ.நா. மற்றும் உலகின் அனைத்து நாடுகளுக்கும்…

கிரிமியா விவகாரம்: ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா…

முன்னர் ஐக்கிய சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே வேளையில் இந்தத் திட்டத்திற்கு ரஷ்யா…

தீவிரவாதிகள் தாக்குதல்: 100 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவில் மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 100 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் யாகூபு பிடியாங் கூறியதாவது: அங்கன்வான் காடா, சென்சிய், அங்கன்வான் சாங்வாய் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை இரவு மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள்…

பாக்.: குரான் எரிப்பு குற்றச்சாட்டின் பேரில் இந்து சமுதாய கூடத்துக்கு…

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துடைய தென்பகுதியில் இந்துக்களின் சமுதாய கூடம் ஒன்றுக்கு கும்பலொன்று தீவைத்துள்ளது என பொலிசார் கூறுகின்றனர். இந்து ஒருவர் புனித குரானை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் பரவிய நிலையில் அக்கும்பல் இக்காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. இந்து ஒருவருடைய வீட்டின் முன்னால் இருந்த குப்பைக் கூடையில் குரானின் பக்கங்கள் எரிந்து…

சொத்து எதுவும் இல்லாத நேபாள பிரதமர்!: குழப்பத்தில் அதிகாரிகள்

நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, தனது சொத்தாக இரண்டு செல்போன்களை மட்டுமே வைத்திருப்பதாக அவரது செயலாளர் வசந்தா கௌதம் தெரிவித்துள்ளார். பிரதமர் சுஷில் கொய்ராலாவிற்கு சொத்து என்று எதுவும் இல்லாததால் சொத்து விபரப் படிவத்தில் எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பத்தை அந்நாட்டு அதிகாரிகள் எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்து காத்மாண்டுவில்…

கிரீமியா குறித்து ஐ.நா.தீர்மானம்: வீட்டோ மூலம் நிராகரித்தது ரஷியா

கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது செல்லாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா சனிக்கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை ரஷியா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. உக்ரைனில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைப்பது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா கடும்…

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி

லண்டன், மார்ச் 15-சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து…

கற்பழித்தவர்கள் விடுவிப்பு: பாகிஸ்தான் பெண் தீக்குளித்து தற்கொலை

இஸ்லாமாபாத், மார்ச்.15–பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் நகரை சேர்ந்தவர்கள் அமீனாபீபி (18). சம்பவத்தன்று வீட்டில் தனது சகோதரனுடன் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அமீனாபீபியை கடத்தி சென்று கற்பழித்தனர். இது குறித்து முசாபர்கர் நகர போலீசில் அமீனாபீபி புகார் செய்தார்.…

ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்க பொதுவாக்கெடுப்பு கூடாது

உக்ரைனின் கிரீமியா தன்னாட்சிப் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்கான இம்மாதம் 16ஆம் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்காக ரஷியா மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யூக்குடன் வாஷிங்டனில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஒபாமா கூறியதாவது: ரஷியாவுடன் கிரீமியாவை இணைப்பதற்காக…