உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்

உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத் தெரிவித்துள்ளது. சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை பேணக்கூடிய அளவுக்கு உண்ணும் வசதியில்லாதோரே இந்தப் பட்டியலில் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.…

நைஜீரியாவில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரியில் காவலர்களை கொண்டு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு எதுவும் இருந்திருக்கவில்லை என அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர். கல்லூரிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடப்போவதாகவும் மற்ற கல்விக்கூடங்களை மூடப்போவதில்லை என்றும் அம்மாநில அரசாங்கத்தின்…

அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா ; ஒபாமா அரசுக்கு கடும்…

வாஷிங்டன்: 17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. இதனால் உலக போலீஸ்காரர்…

பத்து ஆண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா கண்ட வளர்ச்சி என்ன?

இணையத்தில் கட்டற்ற தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவின் தமிழ் மொழிப் பிரிவு தொடங்கப்பட்டு தற்போது பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சென்னையின் அண்ணா பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று ஞாயிறன்று நடந்துள்ளது. விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களாகவும் ஆர்வலர்களாகவும் இருக்கும் நூறு பேர் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் கனடா…

காரோட்டினால் கருப்பை பாதிப்பு: சவுதியில் எச்சரிக்கை!

கார் ஓட்டும் பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று சவுதி அரேபிய மதகுரு ஒருவர் எச்சரித்துள்ளார். சவுதிப் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கக் கோரும் புதிய பிரச்சார இயக்கம் ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே, மதகுரு ஷேக் சாலேஹ் அல் லொகால்டன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். காரோட்டுவதை வழக்கமாகக்…

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு: பிரிட்டன் நிறுவனம் சாதனை

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும்…

நாடு திரும்பினார் ரொவ்ஹானி: ஒருபக்கம் வரவேற்பு – மறுபக்கம் செருப்பு…

இரானிய அதிபர் ஹஸன் ரொவ்ஹானி அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் உரையாடியிருந்த நிலையில், ஆர்ப்பரிப்புக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் பங்குபெற நியூயார்க் சென்றிருந்த இரானிய அதிபர், அங்கிருந்தபோது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 15 நிமிட தொலைபேசி உரையாடலை அமெரிக்க அதிபருடன் நடத்தியிருந்தார்.…

அமெரிக்காவின் மினிட்மேன்-3 ஏவுகணைச் சோதனை வெற்றி

அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் திறன் கொண்ட மினிட்மேன்-3 ஏவுகணைச் சோதனை கலிபோர்னியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது, வான்டன்பர்க் விமானப்படை ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணி 33 நிமிடங்களுக்கு மினிட்மேன்-3 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அமெரிக்க விமானப்படையின் 20ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி…

அணுசக்தி விவகாரம்: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை

சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக உயர்நிலைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னை நீடித்து வரும்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று…

புதிய தலைமுறை கணினி: இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணினியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூடிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணினி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும். குறைந்த…

கத்தார்: “உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்”

கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை…

‘இலங்கை போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர்…

நியூயார்க், செப். 26- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார். ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான்…

கடவுள் துகளை கண்டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு?

அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டுபிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரெயில் என அனைத்துப் பொருட்களின் இயக்கத்துக்கும்…

சுந்தரவனக்காடுகளில் அனல் மின் நிலையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

உலகின் மிகப்பெரும் சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனக்காடுகளுக்கு அருகில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராக ஐந்து நாள் போராட்டம் ஒன்றினை நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வங்கதேசத்தில் தொடங்கியுள்ளனர். இது தொடர்பில் தலைநகர் டாக்காவில் ஒரு பேரணியை நடத்திய அவர்கள் அதன் பின்னர், நாட்டின் தென்மேற்குப்…

மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்தும்

மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று வயது…

தேவாலய குண்டுவெடிப்புகளைக் கண்டித்து பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் கிறிஸ்தவ சமூகத்தார் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் குரலெழுப்புகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய…

சிறார் தொழிலாளர் எண்ணிக்கையில் நல்ல வீழ்ச்சி

உலக அளவில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்த சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை 7 கோடியே 80 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக ஐநாவின் கிளை அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள்…

தேவாலயத்தில் தாக்குதல் – 75 பேர் பலி

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெஷாவர் நகரில் நடந்த இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.…

நெய்ரோபி தாக்குதல் – 68 பேர் சாவு

கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் காரணமாக 175 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர்…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியது. கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை…

மெக்ஸிகோவில் நிலச்சரிவு: நூற்றுக்கும் அதிகமானோர் பலி

மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அகபுல்கோ என்ற இடத்திலிருந்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிகேல் ஒசாரியோ சாங் இச்செய்தியை வெளியிட்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் என்ரிக் பெனா நைட்டோ உடனிருந்தார். அங்குள்ள லா…

எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் புதிய மூலக்கூறு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் கிருமிகள் தங்களை தாங்களாகவே அழித்துக் கொள்ளும் வகையில், புதிய மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் வடிவமைத்துளளனர். இதன் மூலம் எயட்ஸ் கிருமிகளால் ஆரோக்யமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, உயிரிழப்பும் தவிர்க்கப்படும். எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டால் மரணம் நிச்சயம் என உலகமே அச்சப்படும் நிலையில், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும்…

ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர்…

ஏமன் நாட்டில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பினர் நடத்தியத் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் ஷாப்வா மாகாணத்தில் உள்ள மாய்ஃபா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதன்மீது அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த அல்-காய்தா தீவிரவாத அமைப்பு…