பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெரு நாட்டில் பஸ் விபத்து 52 பேர் பலி
லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில், பயணிகள் பஸ், மலை சரிவிலிருந்து ஆற்றில் கவிழ்ந்ததில், 52 பயணிகள் உயிரிழந்தனர். பெரு நாட்டின், சான்டா தெரசா மாகாணத்தில், பயணிகள் பஸ் ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழி விடுவதற்காக, ஒதுங்கிய போது, மலை…
ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் ஐ.நா.வின் ஹெலிகொப்டரை மார்ச் 23(எம்23) இயக்கத் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் வடக்கு கிவு மாகாணத்தின் ருமாங்காபோ பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 18 மாதங்களாக அரசுப் படையினருக்கும், ஐ.நா அமைதிப்படையினருக்கும் எதிராக மார்ச் 23 (எம்23) இயக்கத்…
அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்!
கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக்…
அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார்.…
பாகிஸ்தான் பிரதமராக விரும்புகிறேன்: மலாலா
நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய பிரதமராக விரும்புகிறேன் என பாகிஸ்தான் சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசஃப்ஸாய் (16), கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு…
அழகிகள் மீதான ஆசையால் மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள்
பதவி, பணத்தின் மூலம் தவறான உறவு வைத்துக் கொண்ட சீன அதிகாரிகள் தற்போது சிக்கலில் மாட்டி வருகின்றனர். சீனாவில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அழகிகளுடன் தவறான உறவு வைத்துக் கொள்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக் காட்சிகளும் தற்போது வெளியாகி வருவது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
“நெருங்கிய நட்பு நாடு’ அந்தஸ்து இந்தியாவுக்கு தற்போது இல்லை: பாகிஸ்தான்
இந்தியாவில் 2014இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன், நெருங்கிய நட்பு நாடு அந்தஸ்து (எம்.எஃப்.எஸ்.) அளிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்தார். வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியபோது, "இந்தியப் பிரதமர் மன்மோகன்…
லிபியா பிரதமர் கடத்தப்பட்டு விடுதலை
லிபியா பிரதமர் அலி ùஸய்தான், தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பல மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். கடந்த 5-ஆம் தேதி, அமெரிக்க அதிரடிப்படையினர் லிபியா தலைநகர் திரிபோலியில் தாக்குதல் நடத்தி, அனாஸ் அல்-லிபி எனும் பயங்கரவாதியைப் பிடித்துச் சென்றனர். இதற்கு முன்னாள் அதிபர்…
காமன்வெல்த்துக்கான கனடாவின் உதவிகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்!
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ள கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள், அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை…
காலரா பரப்பிய குற்றச்சாட்டில் ஐநாவுக்கு எதிராக ஹெய்ட்டி வழக்கு
உலகிலுள்ள வறிய நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட போதிலும் ஹெய்ட்டிக்குள் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை, அதாவது சுமார் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் கொலரா அங்கு எட்டிப்பார்த்தது கூட கிடையாது. ஒரு காலரா நோயாளி கூட அதற்கு முன்னர் அங்கு பதிவானது கிடையாது. ஆனால், 2010-ம் ஆண்டின் இறுதியில் அங்குள்ள…
சிரியா ரசாயன ஆயுத அழிப்பு நடவடிக்கை பேராபத்து நிறைந்தது
சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஓராண்டு காலம் ஈடுபடவுள்ள நிபுணர்கள் எதிர்பாராத பல பேராபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவம் நிகழ்த்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 1400 க்கும் மேற்பட்டோர்…
மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள், மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, மலாலா, 16, மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது; ஆனால், அந்த தாக்குதலில் இருந்து, மலாலா உயிர் பிழைத்து விட்டார்.…
இனவெறிப் பேச்சுக்கு நஷ்டஈடு: ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி அருகே இனவெறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், அந்த பள்ளிக்கு நஷ்டஈடாக 12 மில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) தர வேண்டும் என ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக கொரிய மக்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரிய மக்களுக்கு…
எகிப்தில் நீடிக்கும் கலவரம்: 50 பேர் சாவு
எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீஸாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் இடையே நேரிட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில் உள்ள கெய்ரோ மத்திய சதுக்கத்தில் 1973ம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேலி போர் நினைவு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு
தெற்கு தாய்லாந்து பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 போலீஸார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தென்பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பிரமோத் பிரோம் அளித்த பேட்டியில், "தெற்கு தாய்லாந்தின் நராதிவாத் கிராமத்தில் பயங்கரவாத அமைப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க, ராணுவமும் போலீஸாரும் இணைந்து…
எகிப்தில் கலவரம்: 15 பேர் சாவு
எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார்-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1973ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேலிய போர் தினத்தை ராணுவ ஆதரவாளர்கள் விழாவாக கொண்டாடினார்கள். அப்போது முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் மத்திய கெய்ரோ சதுக்கத்தில் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர். அங்கு போலீஸாருக்கும்,…
மாரடைப்பு நோயை தடுக்க இந்தியா- அமெரிக்கா கூட்டு முயற்சி
இந்திய அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் அமெரிக்க இதய சங்கத்தினர் இணைந்து இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாரடைப்பு நோய்த் தடுப்பு மற்றும் அந்நோயினால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த இணைந்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள் சங்கமும், அமெரிக்க இதய கழகமும் இதற்கான ஒத்துழைப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக்…
நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சீனாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி பெற்றுக் கொள்பவர்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்து வைக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட அளவிலான தொகையும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் Liu Xinwen(வயது 33)…
உலக பொருளாதாரத்தை அமெரிக்க கடன் நெருக்கடி பாதிக்கும்
அமெரிக்காவில் தற்போது நிலவும் கடன் நெருக்கடி உள்நாட்டை மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையும் பாதிப்படைய செய்யும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எப்.) இயக்குநர் கிறிஸ்டீன் லகார்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்டீன் லகார்ட் பேசியது:…
நடுரோட்டில் பெண்ணை சவுக்கால் அடிக்கும் பொலிஸ்
நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹலிமா, முன்பின் தெரியாத நபரின் காரில் ஏறியதையடுத்து, நடுரோட்டில் வைத்து அனைவரின் முன்னிலையில்…
தஞ்சம் கோரியவர்கள் வந்த படகு கடலில் மூழ்கியதில் 300 பேர்…
இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் 300 பேர் வரை இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகிறது. வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது. கடலில்…
பர்மா தமிழர்கள், தொழில் மற்றும் வர்த்தகத்தில் மெல்ல மெல்ல புக…
பர்மாவில் தேசிய மயமாக்கல் நடவடிக்கை காரணமாக நகர்ப்புரங்களில் இருந்த தமிழர் செல்வந்தர்களும், படித்தவர்களும் தமது சொத்துகளை இழந்த நிலையில் இந்தியா திரும்பினர். அதற்குப் பிறகு கிராமப் புரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழர்கள், தொழில் மற்றும் வர்த்தகத்தில் மெல்ல மெல்ல புக ஆரம்பித்துள்ளனர். பருப்பு ஏற்றுமதியில் ஈடுபடும் சந்திரன்…
சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் இஸ்லாமிய இலவச பள்ளி மூடல்
கடுமையான இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மீது திணித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிட்டனில் இருக்கும் இலவச இஸ்லாமிய பள்ளிக்கூடமான அல் மதினா பள்ளிக்கூடம் திடீரென மூடப்பட்டிருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த முஸ்லீம் அல்லாத அசிரியைகள் உட்பட அனைவரும் ஹிஜாப் மூலம் தங்களின் தலையை மூடிக்கொண்டிருக்கவேண்டும் என்று பலவந்தப்படுத்தப்பட்டார்கள்…