சிரியாவின் ரசாயன ஆயுத விவகாரம்: அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது…

அமெரிக்காவும் ரஷியாவும் இணைந்து சிரியாவின் ரசாயன ஆயுத தடுப்பு பிரச்சனை குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் படி சிரியாவும் ரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் ஒழிக்க உடன்பட்டது. ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு (ஓ.பி.சி.டபிள்யூ) சார்பில், சிரியா தனது அணு ஆயுதங்களை அடியோடு அழிப்பதற்கான விளக்கத்…

ஒசாமாவை பிடிக்க உதவிய மருத்துவரை விடுவிக்க வலியுறுத்தல்

அல்காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைப் பிடிக்க உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகீல் அஃப்ரிதியின் கைது நியாயமற்றது. அவரை உடனடியாக விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்புக்கு டாக்டர் அஃப்ரிதி உதவி செய்ததாக…

மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன்

மரணத்திற்கு பின்னரும் அதிகம் சம்பாதித்து நம்பர் 1 ஆக பட்டியலில் இடம்பிடித்துள்ளார் பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை உலகளவில் மரணமடைந்த பிரபல பணக்காரர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டது. இதில் மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தில் உள்ளார். இவரது நிறுவனம் கடந்தாண்டில் ரூ.965…

விஷத்தன்மை வாய்ந்த குண்டு தயாரிப்பு: பாகிஸ்தான் தலிபான்களின் கொடூரம் அம்பலம்

பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைத் தயாரிப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தும் குண்டு வெடிப்பில் காயமடையும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறுகையில், ""வெடிகுண்டுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடல்நிலை கடுமையாகப்…

ஜெர்மன் தலைவர் ஏங்கலா மெர்க்கல் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது

ஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின் செல்லிடத்தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சு அமெரிக்க தூதுவரை தம்முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. ஒரு வழமைக்கு மாறான நடவடிக்கையாக அமெரிக்கத்தூதுவர் ஜோண் எமர்சன் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் குயிடோ வெஸ்டர்வெல்லை…

சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தில் நுழைவு வரி

பாங்காக்: தாய்லாந்தில், சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு வரி திட்டம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமல்படுத்தப்படுகிறது. தெற்காசியாவில், அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நாடு தாய்லாந்து. கேளிக்கை விடுதிகள் நிறைந்த நாடு என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதுவரை, சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை. சுற்றுலா…

பலூனில் 30 கி.மீ., உயரத்தில் பறக்க RM 2.5 லட்சம்…

வாஷிங்டன்: பூமியிலிருந்து, 30 கி.மீ., உயரம் பறந்து, பாராசூட் உதவியுடன் மீண்டும் கீழே இறங்கும் ராட்சத பலூன் பயணத்தை, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. பூமியிலிருந்து, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களின் மூலம் வானத்தில் பறந்து மீண்டும் தரையில் இறங்கும் அனுபவம் அலாதியானது. வெளிநாடுகளில்…

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய Black Widow

ரஷ்யாவில் பயணிகள் பேருந்தில் இஸ்லாமிய பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வோல்கோகிராடில் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பேருந்தில் பயணம் செய்த நைடா ஆசியலோவா(வயது 30) என்ற இஸ்லாமிய தீவிரவாத பெண் தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.…

சிரியாவில் வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம்! வெற்றி பெற்றால்…

சிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த…

சௌதி அரேபியா மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைகின்றன-அம்னெஸ்டி

சௌதி அரேபியாவின் மனித உரிமைச் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாக , மனித உரிமைகள் அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்னேஷனல் குற்றம் சாட்டியிருக்கிறது. ஐநா மன்றத்துக்கு நான்காண்டுகளுக்கு முன்னர், சீர்திருத்தங்களை அமல்படுத்துவதாகக் கொடுத்த உறுதிமொழிகளை சௌதி அரேபியா அமல்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், அடக்குமுறையையும் அதிகரித்திருக்கிறது என்று அம்னெஸ்டி கூறியிருக்கிறது. அமைதியாகச் செயல்படும் ஆர்வலர்கள்…

ஃபுக்குஷிமா அணு உலையிலிருந்து அபாயகரமான கதிரியக்க நீர் கசிந்தது

ஜப்பானில் ஃபுக்குஷிமா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக, அணுமின் நிலையத்திலிருந்து கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்குள்ளான நீர் எதிர்பாராதவிதமாக கசிந்து வெளியேறியுள்ளதாக ஃபுக்குஷிமாவை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும், அதன்தொடர்ச்சியாக சுனாமி பேரலைகளிலும் சிதைவடைந்த ஃபுக்குஷிமா…

காஷ்மீர் விஷயத்தில் தீர்வு காண அமெரிக்கா தலையிட வேண்டும்: பாக்.,…

இஸ்லாமாபாத்:மத்திய கிழக்கு நாடுகளுக்காக செலவிடப்படும் நேரத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கினால், காஷ்மீர் பிரச்னை தீருவதற்கு வாய்ப்புள்ளது,''என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, அவர் இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:காஷ்மீர் விஷயத்தில் தீர்வு ஏற்பட, அமெரிக்கா தலையிட…

ஒரே நாளில் 22 தலிபான்கள் கொலை

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானின் உருஸ்கான், கந்தஹார், காஸ்னி மற்றும் ஹெராத் ஆகிய மாகாணங்களில் ஆப்கான் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் நேட்டோ படையினர்…

அமெரிக்க பொதுக் கடன் மதிப்பு ரூ.1,041 லட்சம் கோடியாக உயர்வு

கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் பொதுக் கடன் மதிப்பு ரூ.1,041 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு நிதித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடன் உச்சவரம்பை அதிகரிக்க புதன்கிழமை ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்காவின் பொதுக்…

மாலத்தீவு அதிபர் பதவிக்கு மறுதேர்தல் தடுத்து நிறுத்திய போலீஸார்

மாலத்தீவு அதிபரைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை நடைபெறவிருந்த மறுதேர்தலை கடைசி நேரத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாலத்தீவு அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மறுதேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், "தேர்தல் அலுவலகத்துக்குள் போலீஸார் நுழைந்து தேர்தல்…

மனிதர்களைப்போல் உரையாடும் “மார்மோஸட்’ குரங்குகள்

மார்மோஸட் இனத்தைச் சார்ந்த குரங்குகள் மனிதர்களைப்போல உரையாடிக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோùஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்கின்றன' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறியது: "இவற்றின்…

சிரியாவில் 14 இடங்களில் ரசாயன ஆயுதச் சோதனை முடிந்தது

சிரியாவில் 14 இடங்களில் ரசாயன ஆயுதங்கள் தொடர்பான சோதனையை நடத்தியிருப்பதாக ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு (ஓபிசிடபிள்யூ) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்தின் தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பு தெரிவித்ததாவது: சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக 20க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 14…

அமெரிக்கா: முடிவுக்கு வந்தது முடக்கம்

கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான மசோதாவுக்கு புதன்கிழமை இரவு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதனையடுத்து, 16 நாள்களாக நீடித்து வந்த அரசுத்துறை முடக்கம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. கடந்த…

மியான்மாரில் மேலும் 3 இடங்களில் குண்டுவெடிப்பு

கிழக்கு மியான்மரில் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவத்தினருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த புரட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மியன்மார் தலைநகர் யாங்கோனில் இருந்த பிரபலமான ஹோட்டல் ஒன்றில் கடந்த 14ம் திகதி நடைபெற்ற வெடிவிபத்தில் அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர் காயமடைந்தார். பயங்கரவாத செயல்கள்…

வெள்ள நிவாரணத்தை பார்வையிட விவசாயி மீது சவாரி: அதிகாரி பதவி…

பீஜிங்: வெள்ள நிலைமையை பார்வையிட சென்ற அதிகாரி, தன் செருப்பு நனையக் கூடாது என்பதற்காக, விவசாயி மீது சவாரி செய்ததால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனாவின், ஜேஜியாங் மாகாணத்தில, இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட புயல், மழையால், 10 பேர் உயிரிழந்தனர்; 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்; ஏராளமான…

ரகசிய வங்கிக் கணக்கு விவரங்களைத் தர ஸ்விட்சர்லாந்து சம்மதம்

உலகிலேயே மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்கள் நாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை வெளியிட ஸ்விட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தங்கள் கருப்புப் பணத்தை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள்…

குடியரசுக் கட்சியின் திட்டத்தை நிராகரித்தார் ஒபாமா

குடியரசுக் கட்சியின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டத்தை ஒபாமா நிராகரித்ததால் அமெரிக்காவில் நெருக்கடி நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்ஜெட்டுக்கு குடியரசுக் கட்சி ஒப்புதல் தர மறுத்தது. மேலும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்தவும்…

தொழுகையில் குண்டு வெடிப்பு: ஆப்கன் ஆளுநர் சாவு

ஆப்கானில்தானில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டின் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப்பட்டார். காபுல் அருகே லோகார் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை தொழுகையில், ஆளுநர் அர்சலா ஜமால் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு மைக்ரோபோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக ஆளுநரின்…