பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பாகிஸ்தானின் தலிபானின் புதிய தலைவர்
பாகிஸ்தானின் தலிபான்கள் தமது புதிய தலைவராக முல்லா ஃபசுல்லா அவர்களை தெரிவு செய்துள்ளனர். பள்ளிக்கூட மாணவி மலாலா யூசுப்பை சுட்டவர்கள் இவரது போராளிகள்தான். கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின்…
சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு – வெளிநாட்டுத்…
சௌதி அரேபியாவில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சௌதி அரசு கொடுத்திருந்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், அங்கு சுமார் 30,000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் சோதனைக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல உணவு விடுதிகள், சலவைக்கடைகள்,…
அமெரிக்கா விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பம்
ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்களின் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாகி வருவதால், பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. எனினும் பாகிஸ்தானின் பேச்சை…
நட்பு நாடையும் உளவு பார்த்ததா அமெரிக்கா? அதிர்ச்சியில் ஜப்பான்
ஜேர்மன், பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து ஜப்பானையும் அமெரிக்கா உளவு பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள 35 நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த தகவலை எட்வர்டு ஸ்னோடென் வெளியிட்டார். குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ், பிரேசில் நாடுகளை உளவு பார்த்ததால் உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்…
‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 40 பேர் பலி
நைஜீரியாவில் கடந்த ஒருவாரத்தில் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். "போகோ ஹராம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாமா நகரில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதுகுறித்து அந்தப் பகுதியின் அரசு அதிகாரி பாபா சேகு…
வங்கதேசத்தில் 167 படையினருக்கு மரண தண்டனை
வங்கதேசத்தில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 167 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது. இதுதவிர 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்…
பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்?
அமெரிக்கா மிச்சிகனை சேர்ந்த ஒருவர், “பில்-லேடனின் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவலை முதலில் கொடுத்தது நான்தான். பின்-லேடனின் தலைக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட சன்மான தொகை 25 மில்லியன் டாலரை எனக்கு தர வேண்டும்” என அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவரது இந்த உரிமை கோரலில்…
அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோன மருத்துவர்கள்
அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.…
பாகிஸ்தான் தலிபான்களின் இடைக்கால தலைவனாக அஸ்மத்துல்லா ஷஹீன் தேர்வு
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டான். அவனுடன் அப்துல்லா, தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். தங்கள் தலைவனை கொன்றதால் கடும் ஆத்திரமடைந்துள்ள தலிபான் இயக்கம், இதற்கு…
பிரிட்டன் முஸ்லிம் தலைவர், அமெரிக்கருக்கு மரண தண்டனை
போர்க்குற்ற வழக்கில் பிரிட்டன் முஸ்லிம் தலைவர் மற்றும் அமெரிக்கருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கடந்த 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது. இப்போரின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.…
ஹிட்லரின் கௌரவ குடிமகன் அந்தஸ்து பறிப்பு
ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட கௌரவ குடிமகன் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர், அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகிவிட்டது என்பதால், இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், கோஸ்லார் நகரசபையில்…
தாலிபன் தலைவர் கொலை: பாகிஸ்தான் கோபத்துடன் கருத்து
பாகிஸ்தானிய தாலிபன் இயக்கத் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடுங்கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளது. தாலிபன் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஹக்கிமுல்லா மெஹ்சூதின் மரணம் அழித்துவிட்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறியுள்ளார். வடக்கு…
அமெரிக்காவின் ரகசியத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனுக்கு இணையதளத்தில் வேலை
அமெரிக்கா மற்ற நாடுகளை உளவுப் பார்க்கும் ரகசியத்தை கசிய விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடென். உயிருக்கு பயந்து அவர் மற்ற நாடுகளில் புகலிடம் தேடி அலைந்து இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார். தற்போது மூன்று மாதங்கள் கழிந்த…
பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் உள்ள மெஹ்சூத்தின் வீட்டின் மீதும் காரின் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக, இந்தத் தாக்குதல்களில் ஹக்கிமுல்லா மெஹ்சூதின் சகோதரர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. அதில் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா…
ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிக்கும் சிரியா
ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் சாதனங்களை சிரியா முற்றிலுமாக அழித்துள்ளதாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்த அமைப்பு, ரசாயன ஆயுத உற்பத்தி சாதனங்களை அழிப்பதற்காக சிரியாவுக்கு வெள்ளிக்கிழமை வரை கெடு விதித்திருந்தது. இந்நிலையில், அதற்கு…
நைஜரில் பாலைவனத்தில் தண்ணீரின்றி 87 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு…
கடல் வழியே இரண்டு கண்டங்களையும் இணைக்கும் ரயில் பாதை
கடலுக்கு அடியில் இரண்டு கண்டங்களையும் இணைக்கும் குகை ரயில் திட்டத்தை துருக்கி அரசு தொடங்கியுள்ளது. துருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளக்கும் பாஸ்பரஸ் வளைகுடா பகுதியில் இரண்டு கண்டங்களையும் இணைக்கும் ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 13.6 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி…
பாகிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களில் 2227 பேர் பலி
தீவிரவாதிகளை ஒழிக்கும் வேட்டை என பாகிஸ்தானின் பல பகுதிகளில் சுற்றிவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இதுவரை 2160 போராளிகளையும், 67 பொது மக்களையும் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். கடந்த 23-ம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்த…
பாகிஸ்தானில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! உயிருடன் புதைத்தனர்
பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரை அடுத்த தோபா தெக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக்மொகல். நேற்று பள்ளிக்கு சென்ற இவரது 13 வயது மகள், வீடு திரும்பவில்லை. இதற்கிடையே சிறுமியை இரண்டு பெர் கடத்தி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து…
குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 40 பேர் உயிரிழந்த பரிதாபம்
நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் குடிக்க தண்ணீர் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி கடல் வழியாகவும், வாகனங்களிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட…
லிபியாவில் துப்பாக்கி முனையில் RM17 கோடி கொள்ளை
திரிபோலி, அக்.29–லிபியாவில் சிர்தே விமான நிலையத்துக்கு லிபியன் தேசிய வங்கியை சேர்ந்த ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அதில் லிபியா மற்றும் வெளிநாடுகளின் பணம் எடுத்து வரப்பட்டது. அந்த வேன் சிர்தே விமான நிலையத்துக்குள் நுழைந்த போது துப்பாக்கி முனையில் 10 பேர் கும்பல் அதை வழி மறித்து…
மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவர் விடுதலை
மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்ட மருத்துவர் முர்ரே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு மருத்துவர் முர்ரே அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மாத்திரைகளை வழங்கியது தான் காரணம்…
அதிபர் ஒபாமா ஒப்புதலுடன்தான் ஜெர்மன் பிரதமர் உளவு பார்க்கப்பட்டார்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுடன்தான் அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய உளவு அமைப்பு (என்எஸ்ஏ), ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை உளவு பார்த்து வந்தது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஜெர்மன் பிரதமர் மெர்கலின் செல்போன்…