நவ்றுவில் தஞ்சக் கோரிக்கையாளர் கலகத்தை அதிகாரிகள் அடக்கினர்

பசிஃபிக் தீவுத் தேசமான நவ்றுவில் ஆஸ்திரேலியா நடத்தும் தஞ்க் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிசார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர். வெள்ளிக்கிழமையன்று அம்முகாமின் கட்டிடங்கள் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதகாகவும், முகாமின் மருத்துவ மையம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக்…

பிரிட்டன் மருந்துக் கம்பனி மீது சீனாவில் லஞ்சக் குற்றச்சாட்டு

பிரிட்டனின் மிகப்பெரிய மருந்துக் கம்பனியான கிளாக்ஸோஸ்மித்கிளைன் GlaxoSmithKline அதன் சட்டநிபுணர்களையும் கணக்காய்வாளர்களையும் சீனாவுக்கு அனுப்புகிறது. இந்த நிறுவனம் மீது சீன அதிகாரிகள் லஞ்ச ஊழல் விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையிலேயே இவர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள். மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் சுமார் 490 மில்லியன் டாலர்கள் பணத்தை பயண…

படகில் வந்து தஞ்சம்: ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது

ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறியிருக்கிறார். பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து…

ரஷ்ய எதிரணி போராட்டத் தலைவருக்கு 5- ஆண்டு சிறை

ரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது. எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச் சொந்தமான மரப்பலகை நிறுவனத்தின் அரை மில்லியன் டாலர்கள் பணத்தை கையாடியதாக…

டுபாயில் இந்தியர் தாக்கப்படும் வீடியோவை வெளியிட்டவர் கைது

டுபாயில் வீதிச் சண்டை ஒன்றை வீடியோ படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட ஆசிய நாட்டவர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய (யூஏஇ) காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் இந்திய ஓட்டுநர் ஒருவரைத் தாக்குகின்ற காட்சியையே அவர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் நாட்டுக்குள்ளும் வெளியிலும் பெரும்…

ஒரு கிலோ உடல் பருமனை குறைத்தால் 1 கிராம் தங்கம்:…

துபாய்: உடல் பருமனை குறைப்பதை ஊக்குவிப்பதற்காக, துபாயில், 1 கிலோ உடல் எடையை குறைப்பவர்களுக்கு, 1 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போதிய உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு இல்லாததால், உடல் பருமன் அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

உளவுத்துறைச் சண்டைகளை விட அமெரிக்காவின் உறவுதான் முக்கியம்

உளவுத்துறைகள் இடையிலான சண்டைகளைவிட அமெரிக்காவுடனான உறவுதான் முக்கியமானது என்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் தொடர்பில் அதிபர் புடின் இறுதியாக வெளிப்படுத்தியுள்ள கருத்தில், ரஷ்ய- அமெரிக்க உறவுகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வேலைகளை செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளார். நேற்று…

விண்ணிலிருந்து மலர் வடிவில் குதித்த ரஷ்யப் பெண்கள்

விமானத்திலிருந்து பாராச்சூட் மூலம் குதிக்கும் ரஷ்ய சாதனை ஒன்றை அந்நாட்டின் பெண்கள் படைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவ்வகையில் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொலோம்னா நகருக்கு மேலாக நடுவானில் விமானத்திலிருந்து பாரச்சூட் மூலம் பூவையொத்த ஒரு வடிவமைப்பில் குதித்து புதிய ரஷ்ய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.…

மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன

Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு பின்னணியில் இருக்கும் குறிப்பிட்ட மரபணுக்களை லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக அளவில் ஆறில் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக உடல் பருமனாகும் ஆபத்திருப்பதாக சர்வதேச மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய அதிகப்படியான உடல்பருமன் காரணமாக மாரடைப்பு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் முதல், டயபடீஸ் எனப்படும்…

கறுப்பின இளைஞரின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவில் போராட்டங்கள்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையிலேயே நடந்துள்ளன. ட்ரேவோன் மார்ட்டினின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். நியுயோர்க் நகரில் சிறிய…

வங்கதேச இஸ்லாமியவாத தலைவர் மீது போர்க்குற்றம் உறுதி

வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனி நாடாவதற்காக நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்த யுத்தத்தின்போது நடந்த அட்டூழியங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என மூத்த இஸ்லாமியவாத தலைவர் ஒருவர் மீது அந்நாட்டின் போர்க் குற்ற நீதிமன்றம் தற்போது குற்றத்தை உறுதிசெய்துள்ளது. கொலை, சித்ரவதை உட்பட சுமத்தப்பட்டிருந்த ஐந்து குற்றச்சாட்டுகளிலுமே தற்போது 90…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற உதவும்படி ஒபாமா வேண்டுகோள்

வாஷிங்டன்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற ஒத்துழைக்கும்படி, அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.,க்களுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில், சட்ட விரோதமாக, ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இவர்களில், 2.40 லட்சம் பேர் இந்தியர்கள்.சட்ட விரோதமாக தங்கியுள்ள இவர்களை வெளியேற்றும்படி, குடியரசு…

தற்கொலை செய்த பிரிட்டிஷ் படையினர் ஆப்கனில் பலியானவர்களை விட அதிகம்

பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்துகொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில்…

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டது குறித்து நீதிவிசாரணை

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்ட பட்டோகி பகுதியை சேர்ந்தவர் முஸ்லிம் பணக்காரரார் முகமது முனீர். இவருக்கும் அப்பகுதியில் உள்ள மாசி என்ற கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவருக்கும் இடையே கடந்த மாதம் மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மாசியின் மகன்கள் முகமது முனீர் குடும்பத்தினருடன் வாய்ச்சண்டையில்…

பொதுமக்கள் எதிர்ப்பு: யுரேனியம் ஆலைத் திட்டத்தைக் கைவிட்டது சீனா

சீனாவின் தென்பகுதி நகரமாகிய ஜியாங்மென்னில், 37 மில்லியன் யான் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் 36 ஆயிரம் கோடி) யுரேனியம் ஆலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும்  எரிவாயு அந்நாட்டு அணுசக்தித் தேவைகளில் பாதியை நிறைவு செய்யப் போதுமானதாக இருக்கும் என்று எண்ணி அரசு…

இந்தோனேஷியா: சிறையிலிருந்து 150 கைதிகள் தப்பியோட்டம்

இந்தோனேஷியாவில் சிறை ஒன்றிலிருந்து தப்பித்த நூற்றைம்பதுக்கும் அதிகமான கைதிகள் இன்னும் பிடிபடாமல் இருந்துவருகின்றனர். இந்தக் கைதிகளில் ஐந்து பேர் பயங்கரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் ஆவர். சுமத்ரா தீவின் வடக்கிலுள்ள இந்த சிறைச்சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தபோது அந்தக் களேபரத்தில் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டைக்…

வேலையாளை அடிமைப்படுத்தியதாக சௌதி இளவரசி மீது குற்றச்சாட்டு

சௌதி அரேபிய இளவரசி எனக் குறிப்பிடப்படும் பெண்ணொருவர் மீது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மனிதக் கடத்தல் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கென்யப் பெண்ணொருவரை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் அளவுக்கு வேலை வாங்கிவிட்டு, பேசிய கூலிக்கும் மிகக் குறைவாகவே கொடுத்ததாக மெஷாயெல் அலெய்பான் என்றழைக்கப்படும் இந்த 42…

அமைதியற்ற நிலையின் மத்தியிலும் எகிப்துக்கு அமெரிக்கா போர் விமானம் வழங்கும்’

எகிப்தில் ஒரு அரசியல் அமைதியீனம் தொடருகின்ற போதிலும் அந்த நாட்டுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கான திட்டத்தை அமெரிக்கா தொடரும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த வாரம் இராணுவத்தால் எகிப்திய அதிபர் முஹமட் மோர்சி அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்…

ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான சீன எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவங்கள் என்று கருதக்கூடிய ஒரு தொகுதி எழுத்து வடிவங்களை இரு கற்கோடாரிகளில் தொல்லியல் ஆய்வாளர்கள் சீனாவில் கண்டறிந்துள்ளனர். உடைந்த கோடாரி போன்ற பொருட்களில் காணப்பட்ட இந்த எழுத்து வடிவங்கள் குறைந்தது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மெசபத்தோமிய நாகரிக காலத்தில்…

மேலும் துல்லியமான கடிகாரம் : பிரான்ஸ் விஞ்ஞானிகள் சாதனை

நேரத்தை அளவிட மேலும் துல்லியமான ஒரு முறையை தாம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1960கள் முதல், அணுக் கடிகாரங்கள், அணுவில் ஒழுங்காக ஏற்படும் அதிர்வுகள் மூலம், செக்கன்களை அளவிடும் வகையில் செயற்பட்டு வருகின்றன. ஆனால், லேசர் ஒளியில் ஏற்படும் வேகமான அதிர்வுகளைக் கொண்டு மேலும் துல்லியமாக செக்கன்களை அளவிடும்…

கத்தோலிக்க மதகுருமாரின் சிறார் துஷ்பிரயோக விபரங்களை ஐநா கேட்டுள்ளது

றோமன் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமாரால் சிறார் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விவகாரங்கள் குறித்த விபரங்களை தருமாறு வத்திக்கான் திருச்சபையை ஐக்கிய நாடுகள் மன்றம் கேட்டிருக்கிறது. ஐநாவின் முன்பாக இது விடயமாக வத்திக்கானின் பிரதிநிதிகள் ஆஜராகி பதிலளிப்பதற்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், சிறார் உரிமைகள் குறித்த ஐநா சாசனத்தை…

உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைகிறது: புதிய ஆய்வு

உலகில் நான்கில் ஒருவர் கடந்த ஆண்டு லஞ்சம் கொடுக்க வேண்டி வந்துள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. உலகில் லஞ்ச சூழ்நிலை மோசமடைந்துவருவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் இந்த…

கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது-இலங்கையர்கள் கதி?

சோமாலியக் கடற்கொள்ளையர்களால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர். இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில்…