பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மாலி சண்டையில் 10 பிரான்ஸ் வீரர்கள் பலி
பாரீஸ்: மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலி இராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி இராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல் பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே…
மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீண்டும் கைது
மாலைதீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு தலைநகரான மாலேவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது பெருந்தொகையான போலிஸார் அங்கிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும்…
புரட்சியாளரும் வெனிசுலா அதிபருமான சவேஸ் காலமானார்
கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன்…
புதியதாக உருவாகிறது ‘டைட்டானிக் 2’
நியூயார்க்: டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர். அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார்.…
ஒபாமா மனைவி ஆடையை மாற்றம் செய்து ஒளிபரப்பிய ஈரான் ‘டிவி’
நியூயார்க்: ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியின் ஆடை வடிவத்தை, ஈரான் தொலைக்காட்சிகள் மாற்றம் செய்து ஒளிபரப்பியது. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சேல் ஒபாமா பங்கேற்றார்.…
கியூபாவில் முடிவுக்கு வருகிறது கெஸ்ரோக்களின் ஆட்சி!
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுடன் அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதாக கியூபாவின் அதிபர் ரோல் கெஸ்ரோ அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக அந்நாட்டுஅதிபராக தெரிவாகியுள்ள ரோல் கெஸ்ரோவின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு நிறைவடைகின்ற நிலையிலேயே அவர் இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபராக மிகுவெல் டயஸ் அந்நாட்டின்…
இந்தோனேஷியாவில் 7 பேர் சுட்டுக்கொலை
ஜயபுரா : இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா என்ற பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய, இருவேறு தாக்குதல்களில் ஐந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள, பதட்டம் நிறைந்த பப்புவா மாகாணத்தின் டிங்கி நம்புத் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள்,…
நஷூத் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சி!
இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், கைது செய்யப்படுவதை தவிர்க்க, இந்திய வெளியுறவு அதிகாரிகள், மாலைதீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாலைதீவில், 2008ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது நஷீத் (வயது 45) நீதிபதி…
‘சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன இராணுவப் பிரிவு’
கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம்…
ரஷ்யாவில் எரிகல் சிதறல் மழை; 950 பேர் காயம்
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆறு நகரங்களில் எரிகல் சிதறல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் சார்பாக பேசவல்ல…
ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் பலியான குழந்தை
பீஜிங் : சீனாவில், ஒரு குழந்தை திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டிப்பு காட்டிய அதிகாரிகளால், 13 மாத குழந்தை, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 1979ல் 'ஒரு குழந்தை திட்டம்', அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நகர்ப்பறங்களில் இருக்கும் தம்பதிகள், ஒரு…
சுனாமியால் சாலமன் தீவில் ஐந்து கிராமங்களை காணோம்
சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. 100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.…
சொலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்களில் சுனாமி!
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சொலமோன் தீவுகளில் இன்று காலை (புதன்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ., உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சொலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவுஸ்திரேலியா,…
பங்களாதேஷ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை
பங்களாதேஷின் பிரதான இஸ்லாமியக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் , பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற , 40 ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் விடுதலைப் போர் நடந்த கால கட்டத்தில், இழைக்கப்பட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதற்காக , சிறப்பு போர்க்குற்றங்கள் தீர்ப்பாயம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஜமாத் இ…
இளம் வயதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் இதயநோய் வாய்ப்பு அதிகம்
லண்டன் : குழந்தை பருவம் மகிழ்ச்சியாக அமையாதவர்களுக்கு, நடுத்தர வயதில் இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு அவர்கள் நடுத்தர வயதாகும் போது…
சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை
ஆஸ்லோ : பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததால் தலிபான்களால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய், அந்நாட்டு பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். தலிபான்களால் பெண்களின் கல்வி…
ஒரு பள்ளிச் சிறுமிக்கு துணையாக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!
துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல்…
மாலியில் கிடால் நகருக்குள் நுழைந்த பிரெஞ்சுப் படைகள்
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்திவந்த பிரெஞ்சுப் படைகள், ஆயுததாரிகளின் Read More
மூன்றாவது அணுச் சோதனை : வடகொரியா எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்கான பதில் நடவடிக்கையாக தாம் மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ராக்கட் சோதனைகளையும் செய்யப்போவதாக வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்காவை மனதில் வைத்தே இந்தச் சோதனைகள் செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலத்தின் மூலம் மாத்திரமே அமெரிக்காவை கையாள முடியும் என்றும் அது…
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும்…
வங்கதேச போர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
தாகா : வங்கதேச விடுதலைப்போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட நபருக்கு தூக்கு தண்டனை விதித்து தாகா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கதேச விடுதலைப் போர், பாகிஸ்தானுக்கு எதிராக 1971ல், நடந்தது. இதில், வங்கதேசத்திற்கு இந்திய இராணுவத்தினர் பெருமளவில் உதவிகளை செய்தனர். இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த, அபுல் கலாம்ஆசாத்…
பிணைய கைதிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் சண்டை: அல்ஜீரியாவில் 81 பேர்…
அல்ஜியர்ஸ் : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை மீட்க, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், 81 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.…
பணத்தால் எனக்கு பயன் இல்லை: சொல்பவர் பில்கேட்ஸ்!
"பணத்தால் எனக்கு பயன் இல்லை" என, உலகின் பெரும் கோடீஸ்வரரான, பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார். உலகின், பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸ் இது குறித்து கூறியதாவது: உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை பொறுத்தவரையில், நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுக்கு மேல்என்னிடம் பணம் இருந்து…