பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தெரேசா மேயின் நிர்க்கதி நிலைக்கு காரணம் யார்?
பிரித்தானிய நாட்டில் நடந்து முடிந்துள்ள பொது தேர்தலில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கன்சேர்வேடிவ் கட்சியின் பிரதமரான தெரேசா மேயின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2001 முதல் 2010 வரை பிரித்தானிய முன்னாள்…
அடங்காத வடகொரியா! மீண்டும் இன்று ஏவுகணை சோதனை
தென்கொரியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக் காலமாக தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார…
போர் வந்தால் என்னவாகும்? புடின் பரபரப்பு பேட்டி
திடீரென போர் வந்தால் அதிலிருந்து யாரும் தப்பித்து வாழ முடியாது என ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் கூறியுள்ளார். பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் Oliver Stone ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சமீபத்தில் பேட்டி எடுத்தார். இந்த பேட்டி டாக்குமெண்டரி படம் போல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில்…
பிரான்ஸில் தொடரும் தாக்குதல்களின் எதிரொலி! ஜனாதிபதி சிறப்பு முடிவு
தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளவதற்கென சிறப்பு படை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முடிவினை பிரான்ஸ் எடுத்துள்ளது. அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதலினால் உலகம் முழுவதும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கென்று சிறப்பு படைப்பிரிவு…
மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120…
விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. மியன்மாரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம்…
கத்தார் நெருக்கடிக்கு இதுதான் முதன்மை காரணம்? வெளியான தகவல்
கத்தார் நாடு அல் கொய்தா அமைப்பினரால் கடத்தப்பட்ட தமது அரச குடும்பத்தினரை மீட்க ஒரு பில்லியன் டொலர் மீட்பு தொகையாக வழங்கியதே சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திடீர் கோபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி…
பிரான்ஸ் தலைநகரில் தாக்குதல்! பொது மக்களை வெளியேற வேண்டாம் என…
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தாக்குதலில் தீவிரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பதிலுக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இத் தாக்குதலில்…
கட்டார் உடனான உறவை துண்டித்த வளைகுடா நாடுகள்
கட்டார் நாட்டுடனான இராஜாங்க உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகள் அறிவித்துள்ளன. சவுதி செய்தி நிறுவனமான எஸ்பிஏ இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாக கூறியுள்ளது. தீவிரவாதத்தில்இருந்து…
அமெரிக்க தொழில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ பகுதியில் அமைந்துள்ள தொழில் பூங்கா ஒன்றில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ…
லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
லண்டன் மாநகர பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று, அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து, தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், கொலைவெறி…
லண்டன் தீவிரவாத தாக்குதல்: இஸ்லாமியர்களுக்கு தடை விதித்ததை நியாயப்படுத்திய டிரம்ப்
லண்டன் தீவிரவாத தாக்குதலையடுத்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதித்த தடையை நியாயப்படுத்தும் விதமாக டொனால்டு டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இதற்கு உலகெங்கிலும் கடும்…
தாக்குதல் இப்போது தான் ஆரம்பம்: கொண்டாட வேண்டிய தருணம்: லண்டனுக்கு…
அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினை அழிப்பதற்கு பிரித்தானியா மேற்கொள்ளும் நடவடிக்கையினை எச்சரிப்பதற்காகவே பிரித்தானியா மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக செய்தி நிறுவனமான Amaq News Agency தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களில் மூன்று தாக்குதல் அடுத்தடுத்த நடந்துள்ளது. இதனால் பிரித்தானிய மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.…
கனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய…
கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் எதிர்வரும் யூலை 1ம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு…
ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல்:80,000 மக்கள் உடனடியாக வெளியேற்றம்
ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இசைத் திருவிழாவான ராக் அம் ரிங் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான ROCK AM RING என்ற திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை Nuerburg பகுதியில் நடைபெற இருந்தது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை மாலை துவங்கி, ஞாயிற்று கிழமை மாலை வரை…
பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 34…
மணிலா: பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள உணவு விடுதி ஒன்றின் சூதாட்ட அரங்கில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் திடீரென நுழைந்தனர். சுதாரிப்பதற்குள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது…
உலக அழிவிற்கு வித்திடும் டிரம்ப்! அமெரிக்கா வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு
புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள்ளார். பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்கான…
சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி 44 அகதிகள் பலி
லிபியாவில் புகலிடம் பெறுவதற்காக சஹாரா பாலைவனத்தில் பயணம் மேற்கொண்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த 44 அகதிகள் தண்ணீர் இல்லாமல் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கானா மற்றும் நைஜீரியா நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியா நாட்டிற்கு வாகனங்களில் புறப்பட்டுள்ளனர். சஹாரா பாலைவனம் வழியாக செல்ல வேண்டும் என்பதால் தேவைக்காக சில…
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்கள் சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் கூட ஜப்பான் கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம்…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 80 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காபூல் பொலிஸின் செய்தித் தொடர்பாளர் பஷிர் மஜித் கூறுகையில், காபூலிலில் இன்று ஜேர்மன் தூதரக கட்டிடத்தின் நுழைவாயிலில் கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தீவிரவாதிகள்…
மாடியிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்: பாகிஸ்தானில் சம்பவம்
பாகிஸ்தானில் வகுப்பறையை சுத்தம் செய்யாத குற்றத்திற்காக மாணவியை ஆசிரியர் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பள்ளியில் பஜ்ஜர் நூர் என்னும் மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி, ஆசிரியர்கள் புஷ்ரா மற்றும் ரெஹானா கூறியுள்ளனர்.…
பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி
பாகிஸ்தானில் உறவினரால் துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிற்கு உள்ளூர் ஷரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ரஜன்பூர் பகுதியில் அமைந்துள்ளது பாதிக்கப்பட்ட 19 வயதான இளம்பெண்ணின் குடியிருப்பு. சம்பவத்தன்று குடியிருப்பில் தூக்கத்தில்…
சவுதியில் உடல் ஊனமுற்ற நபருக்கு மரண தண்டனை: காரணம் என்ன?
சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உடல் ஊனமுற்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இப்போராட்டத்தில் உடல் ஊனமுற்றவரான Munir al-Adam(23) என்பவரும் பங்கேற்றுள்ளார். போராட்டத்தை கலைக்க…
டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா?
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அண்மையில் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றபோது அந்நாட்டுடன் 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்…
