புதுகுரல்களைக் கக்கிக்கொண்டிருக்கும் தலைநகரில்
இளைஞனாய் நாம் சந்தித்தவேளை
குடிமக்களின் சீற்றம் தொடங்கியபோது
உயர்ந்த குறிக்கோள்களைக் கைக்குள் அடக்கிய
புதியதொரு பட்டதாரி குழுவினை நான் அறிந்திருந்தேன்
தோழமையும் குடிமக்கள் சமத்துவமும்
புதியதொரு உலகை உருவாக்கும் கனவுகள்
எனது நம்பிக்கையை வலுப்படுத்தின
நீண்ட நேரம் கடந்தது
அனுபவமும் வயதும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது
என்னவொரு சிறந்த இளங்கனவு
விரல்களாலும் கவிதையாலும்
புத்தகங்களாலும் கோட்பாடுகளாலும்
கரங்களை எரிக்காமலும்
உடலை பொசுக்காமலும்.
பிரபஞ்ச நட்சத்திரங்கள் பறித்தது
(இப்போது, இன்னும் நான் சந்திக்கிறேன்
அரை துணிச்சலான இளைஞர்கள்
எப்போதாவது கனவை கிசுகிசுப்பார்கள்
நிலவை வெளிப்படுத்தாத நட்சத்திரத்தை எரிக்க
நான் மீண்டும் சுழலுகிறேன்
கடந்த பதிவுகள் நாடாக்கள்).
நண்பரே,
நாம் கனவு காணும் சுதந்திரமான சமூகம்
உண்மையில் வெகு தூரத்தில் உள்ளது
நம்மைப் பிரித்து வைத்தபோது
எனது கோபம் எரிச்சலானது
நமக்குள் இருந்த இடைவெளியின் தூரம் அதிகரித்து
எனக்கு “பூமி புத்ரா” பட்டம் கிடைத்தது ஆனால் உனக்கு இல்லை
உன் மருந்தகத்தில் கண்டறிந்தேன்
என் இருதய கிட்டத்தட்ட முடங்கியபோது
நீதான் முதலில் அதன் துடிப்பைக் கேட்டாய்
எனது வயதான கறுத்த நுரையீரலைக் கண்டாய்
நீ வெறுத்த சிகரெட் புகை….
நம்புகிறாயா?
என்னால் உன் இருதயம் துடிப்பைக் கேட்க முடிந்தது
முன்னைய உன் இருதய துடிப்பு
முன்னோர்கள் விண்ணப்பித்ததைப்போன்று
ஒரு புதிய சமூகம், புதிய வாழ்க்கை
ஒரு சுதந்திர தேசத்தின் கனவுகளை
சரிசமமான நீதியும் உண்மையும்
‘நுன்கிருமி இதயத்தையும் சமமாகப்பங்கீட்டும்
பெரும்யானை இதயத்தையும் சமமாகப்பங்கீட்டும்
நம்மை எரித்துக் கொண்டிருக்கும் இன வேறுபாடுகள்
எப்போது அனைக்கப்போகிறோம்
மற்றும் இன்னும் எரிய எண்ணெய் ஊற்றும்
அந்த கபடதாரிகளை எப்போது ஒடுக்கப்போகிறோம்
நம் குழந்தைகள் அப்பாவிகள்
அவர்களின் எதிர்காலம் சூதாடப்படுகிறது
நம் அடுத்த தலைமுறை சந்ததிகள்
இலாபத்தையும் அதிகாரத்தையும் மட்டும் எதிர்ப்பவர்களால்
பலிகெடா ஆகப்போகிறார்கள்
எப்போது நாம் இந்த இடைவெளியைத் தகர்க்க முடியும்
வறுமைக்கும் பட்டினிக்கும் அதிக செல்வத்தை வழங்க முடியும்
இரு சமூக தராதரத்திற்கு இடையே
சுதந்திர அர்த்தத்தை வாக்குறுதியாக்கிட முடியும்
எப்போது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையும்
சம உபசரிப்பும் மற்றும் சம நீதியும் கிடைக்கும்?
அப்போது ஓர் ஒற்றை பெயரால் அறியப்படும்:
மலேசிய இனம்?
மெலாயுமொழியில்; தேசிய இலக்கியவாதி உஸ்மான் ஆவாங்
தமிழ்மொழியில்; பாமரன்
(தோழர் டாக்டர் M.K. இராஜ்குமார் அவர்களுக்கு)
மலைக்கும் மடுவுக்கும் உள்ள இந்த இனப்பிரிவினை பற்றி ஒரு மலாய் இலக்கியவாதியின் உள்ளக் குமுறல் மனதை நெருடுகிறது.