கற்போம் கற்பிப்போம் தமிழமுதம்………… (இரா.சந்தோஷ் குமார் )

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

tamilதமிழம் அமுதமாகும் நமதாகும்
தேனும் சுவையும் இனிப்பாகும்
கற்போம் கற்பிப்போம் தமிழமுதம்

இலக்கியமும் மரபும் கவிதையாகும்
எமக்கும் புதுமையும் இலட்சியமாகும்
புகுத்திடுவோம் படைப்போம் இலக்கியம்

குற்றவாளியும் மன்னவனாம் பாண்டியனாம்
கண்ணகியும் எரித்தாளாம் மதுரையைதானாம்.
என் பார்வையாம் அதுவும் குற்றமாம்.

விமர்சனமும் இதற்கும் உண்டாம்
துணிச்சலும் எனக்கும் உள்ளதாம்
சிந்தனையும் கொடுக்குமாம் விமர்சனம்.

அக்னியாகும் பாரதியும் கவிதையும்
தலைமுறையானோம் அவனுக்கும் தமிழுக்கும்
நம் எழுதுகோலும் ”மை”யும் அக்னியாகட்டும்

இரா.சந்தோஷ் குமார்

TAGS: