வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
வீடுவீடாய்
ஒட்டுகேட்டாங்க
வாக்குறுதியைஅள்ளி
தந்தாங்க……
தோற்றவங்கஓடி
ஒளிந்தனர்
வென்றவர்கள்வாக்குறுதியை
மறந்தாங்க……..
தேர்தல்காலத்து
வாக்குறுதி
நூலறந்தபட்டமானது
உதவிசெய்ய
நாதியில்லை
ஊரெல்லாம்மக்கள்
சேவையாம்நாள்தோரும்
பத்திரிக்கைஅறிக்கை………
ஓட்டுக்காக
காலிலும்விழுறாங்க
அம்மாதாயேஎன
பாசத்தையும்கொட்டறங்க
ஜெய்த்தபின்னர்
யாருநீங்கனு
மனசாட்சிஇல்லமல்
கேட்கறாங்க………..
ஐந்தாண்டுக்கொருமுறை
வந்துநிற்பாங்க
அப்பவியாய்வீட்டு
வாசலில்
அடித்துவிரட்டனும்
சுயநலஅரசியல்வாதிகளை………
ஓட்டும்நம்மிடம்
முடிவும்நம்மிடம்
அடிமைபட்டதுபோதும்
வாக்களிப்போம்உரிமையோடு
நம்மினத்தின்
நாளைய விடியலுக்காக!!!!!!!!!!
– சிவாலெனின் – சுங்கை,பேராக்