கவிதைக்கே ஒரு கவிதை அஞ்சலி……………(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

ganesanAவிழிகள் அழுதால் அதன் பெயர் கண்ணீர்
வாலியே இதயமல்லவா அழுகிறதிங்கு…. !!
வாலிப கவிஞன் என்றதுனை வையகம்
வாழ்ந்தது போதுமென்றதோ உனதகவை…!

தமிழ்தாய் ஈன்றேடுத்த தவபுதல்வன் நீ..
தணித்தாய் எங்களது தமிழ் பசியினை…!
கவிஞன் உனக்கு விசிறிகளானார்கள்…
கவிதை அதற்கு கவிஞருமானார்கள்…!!

முதுமை உன்னை முந்தி சென்றதேன்..
மடமையில் இளமையது ஏமார்ந்ததேன்..
இனி என்றும் நீ இறக்க போவதில்லை…
இசை பாடலாய் வாழ்வாய் இதயங்களில..!!!

– ஆதிநேசன்(எம்.எஸ்.கணேசன்),கிமிஞ்செ,நெ.செம்பிலான்

TAGS: