விடை தேடிய வாழ்க்கை…!…(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

ganesanAகடவுளின் கணக்கில்
விடை தேடிய
வாழ்க்கை…!

தந்தையின் கணக்கில்
விடையானது..
ஒழுக்கமாய்…!

தாயின் கணக்கில்
விடையானது…
பாசமாய்…!

குருவின் கணக்கில்
விடையானது..
அறிவாய்…!

நண்பனின் கணக்கில்
விடையானது..
நேர்மையாய்..!

காதலரின் கணக்கில்
விடையானது..
அன்பாய்…!

மனைவியின் கணக்கில்
விடையானது…
முயற்சியாய்..!

கணவனின் கணக்கில்
விடையானது..
நம்பிக்கையாய்..!

-ஆதிநேசன்(எம்.எஸ்.கணேசன்),கிமிஞ்செ,நெ.செம்பிலான்

TAGS: