என் வளர்ப்பு தவரானதோ?…தெரியவில்லை!! …………….(ரெ. நடராஜன், அலம் மேகா)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

என் உதிரத்தில்
உன் உயிர் வளர்த்;தாய்!
என் விரல் பற்றி
நீ நடைப் பயின்றாய்!
மலழை மொழிப் பேசி
மனம்மகிழ பூத்துச் சிரித்தாய்!

குடி கெடுக்கும் குடி மீது
மோகம் கொண்டாய்!
துஷ்டர்களின் குனம் தெரிந்தும்
கூட்டும்  சேர்ந்தாய் …!
பழிச்சொல் ஏற்று  வீனே
நீ பதராய்  போனாய்!!

என் வளர்ப்பு தவரானதோ..
உன் போக்கு  தவரானதோ..
நான் அறியேன் என் மகனே,
இன்று ஊர்வாயில் அடிப்பட்டு
வீதில் மடிந்தாய் நாதி அற்று!

இருண்ட உலகில் உன் குடும்பம்
மிரண்ட நிலையில் உன் மனைவி
மாற்றான் பிடியில் உன் பிள்ளை
அத்தனைக்கும் யார் பொருப்பு
நீயா.. இல்லை நானா?

ஏழையாய்  பிறப்பதில்  குற்றமில்லை
ஏழ்மையில் வாழ்வதிலும் தவறில்லை
மனிதனாய் வாழ உனக்கு தெரியவில்லை
மாய்ந்;தாய்,  இனி யாருக்கும்  தொல்லையில்லை!!

ரெ. நடராஜன்,
அலம் மேகா, ஷா அலாம்.

TAGS: