வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
சுதந்திரம்பெற்று
57 ஆண்டுகள்
விவசாயம்சார்ந்தநாடு
தொழில்துறைநாடானது
அறிவியலில்அசரவைக்கிறது
மேம்பாடும்முன்னேற்றமும்
கொண்டநாடானது-இருந்தும்
தொழிலாளர்களின் சம்பளமும்
வாழ்க்கைதரமும்
ஏமாற்றதின்உச்சத்தில்………….
மனிதவளஅமைச்சர்களும்
மாறினார்கள்
பிரதமர்களும்மாறினார்கள்
இருந்தும்
தொழிலாளர்களின் நிலை
மட்டும்மாறவில்லை
நாடு 2020 நோக்கி
பயணிக்கிறது
தொழிலாளர்வர்க்கமோ
தொடர்ந்து
பின்னோக்கிசெல்கிறது……………
குறைந்தபட்சசம்பளம்
தொழிலாளர்களின் நீண்டகால
கோரிக்கை
முதலாளிகளின்காதுகளில்
விழவில்லை
அரசாங்கதிற்கோஅக்கறையில்லை
முழக்கங்களும்உரிமைகுரல்களும்
செவிடன்காதில்ஊதிய
சங்காய்பயனற்றுபோனது………….
உழைக்கும்வர்க்கத்தின்
பிரதிநிதிகளும்
ஆட்சியாளர்முதலாளிகளின்
காலடியில்மண்டியிட்டு
கிடப்பதால்
மகஜர்களும்முழக்கங்களும்
இங்குஎடுப்படாது………..
இழப்பதற்குஒன்றுமில்லை
அடிமைவிலங்கைதவிர
பசித்தவன்வயிற்றில்தான்
புரட்சிவெடிக்கவேண்டும்
தொழிலாளர்வர்க்கமே
ஒன்றுப்பட்டுபோராட
களமிறங்கவேண்டும்…………
அரசியல்தலத்தில்
தொழிலாளர்கள்பலிகாடாய்
ஆனதுபோதும்
புதியசிந்தனை
புதியஇலக்கு
தொழிலாளர்களின் போராட்டம்
புரட்சியாய்
வெடிக்கவேண்டும்
அஃது
மற்றோருமேதின
வரலாறாய்பதிவாகவேண்டும்!!!!
– சிவாலெனின்(சுங்கை)