வாக்குறுதி………(சிவாலெனின் ,சுங்கை)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

kavibg01எரிவாயு

விலையேற்றம்

ஏழையின்வீட்டில்

நேற்றையஇரவு

அடுப்புஎரியாமலேயே

விடிந்தது….

பேருந்தின்கட்டண

உயர்வு

உடல்உழைப்பாளிகளின்

பிள்ளைகள்

பள்ளிக்கூடம்போகல……

தோட்டத்தொழிலாளிகளின்

மாதசம்பள

கோரிக்கை

நூல்அறுந்த

பட்டமாய்

காற்றில்பறந்தது…….

அமைச்சர்களின்

சம்பளஏற்றம்

குதுகலமானது….

ஓட்டுபோட்ட

மக்கள்

கையேந்துகிறார்கள்இன்னும்

பிச்சைகாரர்களாய்…………

ஆட்சிஅதிகாரம்

வெறும்

நாற்காலிஅலங்காரம்….

காற்றில்பறந்தது

தேர்தல்காலத்து

வாக்குறுதிகள்!

– சிவாலெனின் ,சுங்கை

TAGS: