குப்பைக் கொட்டி எரிக்கின்றாய்,
காரைஓட்டி சிதைக்கின்றாய் – புவியில்
வெப்பம் நித்தம் கூட்டுகிறாய் – பின்
வெம்மை என்று சலிக்கின்றாய்.
மண்ணின்சுயத்தைஇழக்கின்றாய்,
மாரைத்தானேஅடைக்கின்றாய்,
மரணத்தை விரைந்து அழைக்கின்றாய்.
புகையைக் கொண்டு புகைக்கின்றாய்,
புவியில் சேதம் செய்கின்றாய்,
பகையைத் தனக்கே வளர்க்கின்றாய்
தரணியின் பவித்திரம் குறைக்கின்றாய்.
எந்த உரிமையில் இதையெல்லாம் செய்கின்றாய்,
பிரம்மன் படைத்த இப்புவிதனிலே??!!
– ரமணாதேவி த/பெ ஆனந்தன்
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்.
உங்களுடைய கவிதை மிக அருமை அம்மா. இன்றைய மனிதர்கள் சுற்றுப்புற சூழலைப்பற்றி கவலைப்படுவதாகவே இல்லை. மாசற்ற சூழல் என்றால் என்ன என்று கேட்கும் மனிதர்களைத்தான் இப்போதெல்லாம் பார்க்கமுடிகிறது. தன் வீட்டில் செத்துப்போன எலியை அடுத்தவீட்டை நோக்கி எறியும் ஒவ்வொரு மனிதனும் மாறவேண்டும். தன் சுயநலத்துக்காகவாவது தன் குடியிருப்பைச் சுற்றி தூய்மையைப் பேணினாலேபோதும். அது மற்றவர்களுக்கும் சென்று சேரும்.
உங்களுடைய கருத்து முற்றிலும் உண்மை. மரங்களும் நம்முடன் சேர்ந்து வளரும் உயிர்கள் தான் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள். என் குடியிருப்பைச் சுற்றி உள்ள மரங்களை வெட்டி சாய்க்கும் போது என்னுடன் சேர்ந்து வளர்ந்த நினைவுகளும் அழிக்கப்பட்டது. அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இந்த கவிதை. தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா…