வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
இல்லை
பிறப்புபத்திரம்
இல்லை
குடியுரிமையும் மறுப்பு
சொந்த
நாட்டிலே அகதியாய்
நாம்……..
உரிமைகள் அபகரிப்பு
தேவைகள் அவசியமற்றது
மகஜர்களும் அர்தமற்றது
சுதந்திரம் பெற்ற
நாட்டிலே
மூன்றாம்தர மக்களாய்
நாம்……..
இனவாத பேச்சும்
ஓயல
அம்னோவின் அராஜகமும்
தொடர்கதை
ஓட்டுக்காக ஒரே மலேசியா
முழக்கம்
ஆட்சி அதிகாரம்
கைபற்றல்
பாலே இந்தியாவும்
நித்தம் ஒலிக்கும்………
ஹம்பருக்கும் அரிசி பருப்புக்கும்
ஓட்டுப்போடும் நம்மினதிற்கு
உரிமை இருந்தால்
என்ன?
மறுத்தால் என்ன?
நித்தம் சொரணையற்று
நாம்!!!!!!!!!
(சிவாலெனின், சுங்கை)
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன் விழா இலக்கியப பரிசு கவிதைகளை கடந்த ஞர்யிறு படிக்க நேர்ந்தது…புதிய கவிதை பாணியாம்.
முதல் பரிசு…வெளிச்சம் தேடும் இரவுகள் /இரண்டாம் பரிசு வீழ்வது எழுவதற்கே !/மூன்றாம் பரிசு கட்டி முடிக்கபடாத வீடுகள்.
புதுக்கவிதை என்றால் எத்தனை வரிகளாவது எழுதி தள்ளலாம் என்று பொருள். இலக்கணம் இலக்கியம் ஒன்றும் வேண்டாம்.உணர்வுகளும் உணர்சிகளும் மிஞ்சி காபியடி கட்டுரையானாலும்” ஒகேதான்”போல இருந்தது…செம்மொழியாம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் சவால் மிக்க பொன் வில்லங்க விழாதான்