மண்டேலா ………..(பூபாலன் முருகேசன் )

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

wpid-NelsonMandela உன் பெயர் உச்சரிக்கையில்

என் உள்ளம் உறுதி பெறுகின்றது…

 

உன் 27 ஆண்டுகால சிறைவாசம்

மனித உரிமையின் வனவாசம்…

 

காந்தியை நான் பார்த்ததில்லை…

நீ தென்னாப்பிரிக்காவின் காந்தி என்றால்

மறுப்பதற்கு எவருமில்லை….

 

மனித நேயம் இல்லாதவருக்கு நீ  வெறும் கருப்பு…

உண்மை மனிதருக்கு நீ வழிகாட்டும் நெருப்பு…

 

உன் பிரிவு மனிதநேயத்தில் அஸ்தமனமா!

இல்லை

நவீன இனவாத ஒடுக்கு முறைக்கு

புதைக்கப்பட்ட விதை…

 

காலம் பதில் சொல்லும்

காத்திருப்பேன் உன் தரிசனத்திற்காக…

உன் போராட்டம் தொடரும்…

– பூபாலன் முருகேசன் 

TAGS: