வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
பொய்மையை விரும்பும் உலகம்,
புகழைப் புதைக்கும் திறம்,
இயற்கையை எதிர்க்கும் கேவலம்,
இதுதானா மானுட வாழ்க்கை?!
செல்வம் புரட்டும் சவனம்,
சற்குணம் மறக்கும் சனனம்,
சத்தியத்தை மறைக்கும் சாதுரியம்,
இதுதானா மானுட வாழ்க்கை?!
மனதினை அறியாத சுற்றம்,
மன்னிக்க மறுக்கும் மானுடம்,
குறையைப் பாடும் கைஞ்ஞானம்,
இதுதானா மானுட வாழ்க்கை?!
அர்த்தம் அற்ற சங்கநாதம்,
அமைதி புதைந்த நானிலம்,
சாதியைப் போற்றும் மனிதயினம்,
இதுதானா மானுட வாழ்க்கை?!
ரமணாதேவி த/பெ ஆனந்தன்
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்
நன்றி Sivaleenin 🙂
மாசில்லாத இயற்கைச் சூழல் மனிதகுல வாழ்வாதாரத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உங்கள் கவிதையில் தெரிகிறது. பிறரைப் போற்றிப்போற்றிப் பாடுவதென்பது மட்டும் சார்ந்தது அல்ல கவிதைத் துறை. மனிதத் தவறுகளையும் சுட்டிக்காட்டிட கவிதைத் தளத்தைப் பயன்படுத்தலாம் என்பதற்கு உங்களின் கவிதை ஓர் எடுத்துக்காட்டு.
தொடர்ந்து எழுதுங்கள் அம்மா. ..வாழ்த்துக்கள் உங்களின் மனவெதும்பலின் வெளிப்பாட்டுக்கு.
நிச்சயம் எழுதுகிறேன் ஐயா… தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 🙂
தங்கள் படைப்பில் சமுதாயத்தின் மீதுள்ள உங்கள் கோபம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. ஓர் ஆலோசனை: எளிய சொற்களை எல்லார்க்கும் தெரிந்த சொற்களைப் பயன்படுத்தினால் இன்னும் சிறக்கும். வெல்க!
நன்றி எழிலன்…. தங்களின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வேன். 🙂
உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.மேலும் எழுதுங்கள் . பாராட்டுகிறேன் நன்றி. ரம்னபபூ@யாஹூ.com
நன்றி ரம்னபபூ… 🙂