தையெனும் தாயினை வரவேற்று
தமிழராய் வாசலில் கோலமிடு..!
மங்கள தோரணம் மாவிலையில்
மஞ்சள் கரும்புகள் இருமுனையில்…!
பாழான பழையதை எரியூட்டி
பிறக்கிற தையினை உரமூட்டி..
தொடங்கிடு முதல்நாள் போகியென
தொடர்ந்திடும் மறுநாள் பொங்கலென..!
செங்கரும்பு மூன்று மத்தியிலே
செய்துவைத்த புதுப் பானையிலே….
பாலை ஊற்று பாதியென…
பச்சரிசி இடு பொங்கலென…
உழவர் திருநாள் பொங்களிது..
உதிர்திடும் கதிருக்கு நன்றியுரை..!
உரக்க கூவிடு பொங்கலென…
உனது பானையில் பொங்கையிலே..!
மூன்றாம் திருநாள் காளைக்கு
முகம் சுழிக்காத வேலைக்கு…!
வர்ணம் தீட்டி கொம்பதற்கு ..
வணங்கிடு நீயும் நன்றியென..!
நான்காம் திருநாள் கன்னியர்க்கு
நல்லதோர் திருமணம் தானுணக்கு..
நிகழ்ந்திட காணும் பொங்கலிடு
நெஞ்சமும் மகிழ்ந்திடும் திங்களிட..!
-ஆதிநேசன் (கிமெஞ்சே,நெ.செம்பிலான்.)
nice வாழ்த்துக்கள்.
நன்றி சிவா…..
தமிழர்களின் முதல் நாளாம் ,தை பொங்கல் திருநாளாம் , கவி அழகில் பெருமை சேர்த்த கவிக்கு, நெஞ்சார்ந்த தமிழர்கள் பெருநாள் வாழ்த்துகள் .
நன்றி.தோழரே…
நன்றி . தமிழ்லை
பொங்கி எழும் பொங்கலை போல்,நம் குடும்பத்தோடு ஒற்றுமையாக வாழ்வோம். வாழ்துகள்.