வாருங்கள் தோழர்களே
நாம் ஒன்றிணைவோம்
இனத்தை மொழியை மதத்தை
தள்ளி வைப்போம்
வர்க்கமாய் ஒன்றுபடுவோம்
உழைக்கும் வர்க்கமாய்
இளைய தலைமுறையாய்
களத்தில் இறங்குவோம்
நாற்காலியை எதிர்ப்பார்த்தல்ல
நம்பிக்கையான மக்களுக்கான
அரசாங்கத்தை எதிர்ப்பார்த்து…..
நாற்காலி அவசியமற்றது
நம்பிக்கையான அரசாங்கத்திற்கு
அஃது அர்த்தமானது
வாருங்கள் தோழர்களே
ஓட்டுப் போட்டோம்
ஏமாந்தோம்
தெருவில் இறங்கியும்
போராடினோம்
ஆதிகார வர்கம்
ஜனநாயகத்தை குழிதோன்டி
புதைத்தது…..
வாருங்கள் தோழர்களே
ஜனநாயகம் ஒருபோதும்
புதைக்கப்படாது
ஆதிகார வர்க்கத்தின்
ஆழுமையை உடைத்தெறிவோம்
பழைமைவாத அரசை
மாற்றி அமைப்போம்
புதிய வர்க்கத்தின் ஆளுமையால்
ஆதிகார வர்க்கதை
ஆளும் முதலாளித்துவ
அரசை துடைத்தொழிப்போம்
நம்பிக்கையான மக்களுக்கான
அரசை உருவாக்குவோம்
வாருங்கள் தோழர்களே!!!
(சிவாலெனின்-சுங்கை)
எழுச்சி மிகு கவிதை தோழா! காலம் கனியும் மக்கள் சிந்திப்பர் மீது எடுப்போம் வளம் பெற செய்வோம் இந்திய திருநாட்டை! இந்த நற்ப்பணி தொடர வாழ்த்துக்கள்! நன்றி!