தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல்! அமைச்சர் சிதம்பரத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

chithamparammmராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு அருகே கடந்த சில தினங்களுக்கு முன் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் வீடுகளின் அருகே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் வீடுகளை சுற்றி சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து, காரைக்குடியை அடுத்த மானகிரியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் அருகே பொலிஸார் சோதனை நடத்தினர்ர். அப்போது, அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிடந்தன.

அதில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை அகற்ற வேண்டும்.

மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம்

போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அந்த துண்டு பிரசுரத்தில், இவன் தமிழர் விடுதலைபடை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே சிதம்பரம் வீட்டுக்கு இரண்டு அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சிறப்பு அதிரடி பொலிஸாரின் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

TAGS: