தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

indian-mujahideenதில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ளதாவது:-

ஒரு பயங்கரவாத சம்பவத்தில் கைது செய்யப்பட்டு மகாஹாஷ்டிரா சிறையில் இருக்கும்

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளளனர்.

மேலும், இந்திய முஜாகிதீன் மற்றும் சிமி அமைப்புக்கள் இணைந்து, மக்களவை தேர்தலில் போது தில்லியின் முக்கிய இடங்களை தாக்க முடிவு செய்துள்ளதாகவும் உளவுத்துறை கூறி உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு தில்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்ப்பில் தொடர்ப்புடைய முக்கிய குற்றவாளி என சந்தேகத்தின் பேரில்  யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா அக்தர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யபப்ட்டனர்.

இந்நிலயில் அவர்களை விடுவிக்க கோரி தில்லியில் தேர்தல் சமயத்தில் அச்ம்பாவிதங்களை ஏற்படுத்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தில்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

TAGS: