வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
எம்.எச்.370…….
புறப்பட்டாய்…
பயணிகள் 227 பேரை சுமந்து….!
பணி செய்யும் 12 பேரை கலந்து…!
பிராத்திக்கிறோம் 239 உயிர்களை …!
பார்க்க மாட்டோமா மீண்டும் என அழுது..!!!
பரிதவிக்கிறோம் நாங்கள்…
எங்கே நீ..?
பறந்தாய்
பார்வையை கடந்தாய்…
பாசத்திற்கு ஏங்கும் உறவுகளை உணர்ந்து..
பூமிக்கே திரும்பி வாராயோ…!
புன்னகைக்க நாங்கள்..
எங்கே நீ..?
வதந்திகளால்…
வதைக்கப் படுகின்றன…!
உறவுகள்….!
வரமால் இன்னும்..
எங்கே நீ…?
பதினான்கு நாட்டு குடிமக்கள்..
பார்க்காமல் பேதங்கள்..
பலநாடு நீட்டும் உதவிகள்…!
பதுங்கி இருக்கிறாய் நீயோ..
எங்கே நீ..?
பகைக்காக செய்த சதியா…?
பலம் இழந்து விழுந்த விதியா..?
பலவகையில் ஆய்வுகள்…
புரியாமல் தவிக்கிறோம்…
புரியவைக்கும் பதிலே…
எங்கே நீ..?
குழந்தைகள் இரண்டை
கூட்டி சென்றிருக்கிறாய்..
கொண்டு வந்து விடுவாயென…
காத்திருக்கிறோம்…
எங்கே நீ…?
வேண்டுதல்களை
வாழ வை….!
தேடல்களில்..
தென்படு…..!
எங்கே நீ என்று……..!!!
-ஆதிநேசன்
கிமிஞ்செ,நெ.செம்பிலான்.
உள்ளத்தால் உறவாகி உலகமே இன்று உருக்கம் கட்டும் நிகழ்வு இது
அமாம்! ஈழ தமிழன் செத்த பொது கேட்க ஒரு நாதியும் இல்லை…ஒரு விமானம் காணாமல் போனது உலகமே நாடக மேடை என்பது உறுதி……..
தமிழினம் சுயநலமற்றது…..ஈழத்திற்காக உருக தமிழர்கள் மட்டுமல்ல நார்வே,ஐக்கிய சபை அனைத்தும் தனது பணியை செய்தது….அன்று தமிழர்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் மலேசியாவில் இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்?…ஆதங்கத்தை காட்டும் நேரமல்ல இது…நம் நாட்டு தமிழரும் அந்த விமானத்தில் இருப்பதை…ஓருயிர் தானே என்று உதறி தள்ளி விட முடியுமா…?இனம்,மொழி,மதம் எல்லாவற்றையும் கடந்த இந்த உருக்கத்தை…கொச்சைப்படுத்தும்…முன்பு உங்கள் தமிழ் சொற்களின் தவறுகளை திருத்த முயலுங்கள்…பிறரை குறை கூறுபவர் தன் குறையை மறந்திட கூடாது…தன் குறையை திருத்த முடியாதவர் பிறரை குறை சொல்ல கூடாது… Radio KL
தமிழனின் இறப்பை கேட்க ஆளில்லை என்பதற்காக, இன்னொரு உயிரை பற்றி கவலை பட தேவையில்லை என்னும் அளவிற்கா நாம் தரம் இறங்கி விட்டோம்?? உயிரின் மதிப்பு அனைவருக்கும் ஒன்றே.. நம் குடும்பத்தில் ஒருவர் அதில் பயணியாய் இருந்திருந்தால் இப்படியா பொறுப்பின்றி பேசுவோம்?? மற்றவரின் துன்பம், நம்முடைய துன்பம் என எண்ணுவோமாக..
இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.. நீ திரும்பி வருவாய் என MH 370…