கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,
நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும் போது குஜராத்திற்கு வரும்படி நான் அவரை அழைக்கிறேன். அங்கு அவரது மகன் குமாரசாமியை விடஒரு படி மேலே நான் நன்றாக அவரை பார்த்துக் கொள்வேன் என்றார்.
மேலும் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த்தை சந்திப்பது குறித்து பேசிய மோடி, நடிகர் ரஜினிகாந்தை இன்று (13.04.2014) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேச இருக்கிறேன். நாளை தமிழ்புத்தாண்டு என்பதால் நடிகர் ரஜினியை சந்தித்து நேரில் வாழ்த்து கூற உள்ளேன். அதனால் தான் அவரை சந்திக்க உள்ளேன் என குறிப்பிட்டார்.
மோடியும்,ரஜினியும் தமிழர்கள் இல்லை,எதற்கு தமிழ் புத்தாண்டு
சொல்லிகொள்கிறார்கள்,தமிழனை கிண்டல் பண்ணுகிறார்களா ?
தேனியும் , கயீ இருவரும் கவனிக்கவும்.
தமிழா தமிழ் என்று எருமை தமிழ் நாட்டு எருமை பிறவிகளை எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள் ..இவர்கள் எந்த ஜன்மத்திலும் திருந்த மாட்டார்கள் ….