வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
வசந்தகால பூக்களைபோல
கூடி மகிழ்ந்த
உற்றார் உறவினர்களையும்
கூவிதிரிந்த குயிலை
குறைத்து குழையும்
நம் வீட்டு நாயையும்
பால் கறக்கும் பசுவையும்
பக்கத்து வீட்டில்
நட்ட பவள மல்லி செடியையும்
எப்படி காட்டுவேன் உனக்கு…….
உன் வருகையை எதிர்பார்த்து
காத்திருந்த அனைவரையும்
இழந்து விட்டேன் என்று
எப்படி சொல்வேன்…..
நீ பிறந்தால்
மாற்றி சுற்ற துணி
இல்லை எண்ணிடம்
உன்னை பாராட்டி
சீராட்டி வளர்க்க
எந்த வசதியும் இல்லாத
அவபாக்கியவதி நான்…….
நம் மாடமாளிகைகள்
தரைமட்டம் ஆனது
உனக்காக கொடுக்க
எதுவுமில்லை என்னிடம்………
மரண ஓலமும்
அபாய குரலும்தான்
தாலாட்டாக இருக்கும் உனக்கும்
ஒருவேளை நீயும்
நானும் உயிரோடு
இருந்தால் நிச்சயம்
சொல்வேன்
இந்த நிலைக்கு
உன் தாய்
பேசிய மொழியென்று!!!!!
– சிவாலெனின்(சுங்கை,பேராக்)