அகதிகள்……………(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

Tamil-refugees-Indiaகுமுறி எழும்

கடல் அலையும்

கரைதாண்டாதது போல

பொங்கி வரும் எங்கள்

கண்ணீராலும் பயனில்லை…

உறுப்புகளை இழந்து

உதிரம் சொட்ட சொட்ட

A Tamil refugee collects her belongings after fire broke out in a Tamil refugee camp in Vavuniyaஓடிக்கொண்டிருக்கிறோம்

உயிர் பயத்தால் அகதிகளாய்…

பெற்ற பிள்ளைகளின்

பிணத்தைகூட புதைக்காமல்

காகங்களுக்கும் கழுகளுக்கும்

இறையாய்  விட்டுவிட்டு

ஒடிக்கொண்டிருக்கிறோம் அகதிகளாய்…

இல்லாத கடவுளிடம்

உயிர் பிச்சை ஏந்தி

இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம்

கால சக்கரத்தில்

சுழன்று கொண்டிருக்கிறோம்

அகதிகளாய்….

வரலாற்று சுவடுகள்

எழுதி கொண்டு இருக்கின்றன

எங்கள் வேதனையான வாழ்வை

எந்த பாவமும் செய்யாத

நாங்கள் பரித்தவிக்கிறோம்

அகதிகளான எங்களின்

நிலையை  எண்ணி….

ஏன் வாழ்கிறோம்

என்று  தெரியாமலேயே

நகர்கிறது எங்கள்

வாழ் நாட்கள்……

இயற்கையால்

ஆசிர்வதிக்கப்பட்ட எங்கள் பூமி

அலைகழிக்கப்படுகிறது ஆயுத்த்தால்…….

எதிர்கால மானுடமே

சர்வதேச அரசியல்

சூழ்ச்சியால் வஞ்சிக்கப்பட்ட

மக்களின் கண்ணீரை

மறவாமல் பதிவு செய்!!

– சிவாலெனின்

சுங்கை,பேராக்

TAGS: