வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
மனிதனின் மனமாற்றத்தால்….
மண்ணகத்தில்…
மனிதனை
மாற்ற நினைத்த…
மதங்களும்..
மன்றாடுகின்றன…!
மணங்களால் இணைக்கபட்டவையும்…
மதங்களால்..
முறிக்கப்படும்…
முட்டாள்தனத்தின்..
முதல் பாதிப்பில்..
மழலை செல்வங்கள்…!!
மலையகத்தை ஆளும் கட்சியும்…
மாற்றம் தேடிய கட்சியும்…
மேடை பேச்சாக்கி…
மோதிக் கொள்ளும்…
மல்யுத்தமல்ல…
மதங்கள்….!!!
மறைமுக விளம்பரத்திற்கும்…
மதியில்லா பேச்சிற்கும்….
மத்தியில்…
மீள வழியில்லாமல்..
மிரண்டு கிடக்கும்…
மழலைகள்….!!!
மௌனமாய்…
முகவரிக்குள் சில…
மாயங்கள்…!!!
மாறாத தாயிருக்க…
மதம் மாறிய தந்தையிருக்க..
மாற்றம் தேவை என்ன…
மகனாக அவன் வாழ….!
மாற்றம் தேவை….
மதங்களுக்கு அல்ல….!
மதியிழந்த…
மனிதனின் மனதிற்கு…!!!!
-ஆதிநேசன் ,கிமிஞ்செ..நெ.செம்பிலான்.