வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
எவ்வளவுதான் முயன்றாலும்
கண்ணீரை நிறுத்த முடியவில்லை
இதுதான் நல்ல மனித நேயமிக்க
நீதிமான் நெருடலோ !
நீதியை நெருப்பில் வைத்து
வேக வைத்தாய் !
நீதிபதிகளை நிலுவையில் வைத்து
நீதி தேவதை கண்களை கலைத்தாய் !
நீதி நிலைக்க பல நீராதிபதிகளை
நிஜத்துக்கு கொண்டுவந்தாய் !
உயர்ந்த மனிதன் சிங்க குரலோன்
கர்ஜனை கர்பால் உன் மென்மையும்
மேன்மையும் மாண்பும் மனித
உலகம் மதிக்கும் !
நீதி தேவதை உன்னை மீண்டும்
தருவாள் நாங்கள் மீட்கப்படுவோம் !
ஜனனம் என்பது உன்னிடம் உள்ளது
மனித ஜனநாயகம் ஜெய்க்கும் !
மீண்டு வா தலைவா! மீண்டும் உன் தர்மம்
தலை காக்கும் விரைவாய் வா மகனே !
உன் உடல்தான் காணோம் உன்
உயிரை எங்களிடம் தான் விட்டு சென்றாய்
அதை உள்ளளவு காப்போம் தோழா !
நீ மனிதரல்ல நல்ல மகாத்மா
உன் ஆத்மா பூப்போல மேலும் மலரும்
உங்கள் குளம் குளிரும் எங்கள் மனம்
அழுவதை நீ விரும்பாய் உனது
பிரிவு மரணமல்ல மருவி வரும் மானிடம்.
வானமும் பூமியும் அகிலமும் உன்னை
வாழ்த்தி உள்ளது நீ சொர்க்க அவையில் வாழ
சென்றவன் உலகம் உன்னை சீராட்டும்
பாராட்டும் உன் சம கால உறக்கம்
உன் உறவை தாலாட்டும்.
உன் வரவை
நாங்கள் மீண்டும் மீண்டும் வரவேற்ப்போம் !
வா தலைவா வா !
– பொன் ரங்கன்
மறக்கும் முன் இறக்க
முயற்சிக்கிறேன் நீ
மறக்கும் அந்த சேதியால்
தினம் தினம் சாக எனக்கு
குருதி இல்லை.அது உணர்வற்ற
ஜடமும் அல்ல நான் நல்ல ஜனனம்.
இனத்தின் இதயங்கள் இதயங்களாய் துடிக்கும் வரை ,இதயமுள்ள கண்களின் இமைகள், இமைக்கும் வரை, உனது வரவை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருப்போம் , திக்கெட்டு திசையில் எங்கோ ஒரு திசையில் , உன்னை காத்துக்கொண்டிருக்கும் , பார்த்துக்கொண்டு இருக்கும் கண்கள் ,பிறவிப்பயன் அடைந்தது போல் ,எங்கள் கண்களும் காதுகளும் அடையும் என்ற நம்பிக்கையில் ,[ பொன் ரங்கன் ], கவி அலை போல் நாங்களும் வழிமேல் விழி வைத்து காத்திருப்போம் , உன் வரவிற்காக .