அறிவுச்சுடர்கள்…! – (செ.குணாளன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

kavibg01அறிவியல்

தொழில் நுட்பம்

விவசாயம்

பொறியியல்

இன்னும் இன்னும்

பல பரிணாமங்களை

எங்கள் இதயத்தில்

பக்குவப்படுத்திய

ஆசான்களுக்கு

ஒரு தினம்

மாணவர்கள் கொண்டாடும்

ஆசிரியர் தினம்…!

 

தடைகளை உடைத்து

படிகளை கடந்து

பார்ப்புகழ் காண

கைப்பிடித்து

கூட்டிச் சென்ற

எங்கள்

“மூன்றாம்”

புகழுக்கு

முன்னெடுக்கும்

முதல் நாள்….!

 

கற்றவர் உள்ளமெல்லாம்…….

வெற்றியின் பாதைக்காட்டி

குருவெனும் கர்வமில்லாத

கற்றல் கற்பித்தலில்

மாணவ தோணிகளை

கரைசேர்த்த

மாலுமிகளான

நீங்கள்……,

அறிவுச்சுடர்கள்

எங்கள்

ஆன்மாவிற்கு தூன்கள்…..!

 

ஆசிரியப்பாவில்

ஆற்றல் எனும்

தென்றல் வீசியதால்

நாங்கள் புகழெனும்

உச்சத்தை சுவாசிக்கின்றோம்

கல்வித்தந்த ஆசானை…

வாழ்நாளில்

நேசிக்கின்றோம்….!

 

நாங்கள் பள்ளியில்

கற்றக் கல்வி

வாழ்க்கைப் பயணத்தில்

புகழை தந்தது,

அள்ளி அள்ளி…!

 

மேதினில் நாங்கள்

மேன்மைக்காண

மேதினம்கூட நீங்கள்

கூடுதல் வகுப்பெடுத்த

தியாகத்தை..

பார் புகழும்,

எங்கள்

நா அதற்காகத்

தொழும்…..!

 

தியாகத்தின்

ஊற்று இங்கே

அறிவெனும்

ஆசான் அறுவி …!

 

மானுடம்

செழிக்க நாளும்

மன வேறினில்

எழுச்சி ஊற்றாய்…!

 

கல்வியின் தாகம்

தீர்க்க

தண்ணீரை

தேடிய போதெல்லாம்

அறிவெனும்

தடாகமாய்

வந்து நின்று…..!

பண்பாட்டு நிலத்தை

உழுத

பகுத்தறிவு

சுடரும் நீதான்…!

 

சுதந்திர நாட்டுக்குள்ளே

தந்திர வலைகள்

வீசும்

மந்திர வீனர்தம்மை

மாணவர் பற்றிக்கொள்ளா

மருந்தினைத்

தந்த மருத்துவம்….,

மாணவர்களின்

மனதில்

வாழும்

மகத்துவம்…!

 

புன்பட்ட

எளியோர்

வாழ்வில்

பண்பட்ட

இதயம்

தந்து

கண்கண்ட

“தெய்வமானாய்”

உயர், சூரியனின்

கதிருமானாய்

என்றும்..

எங்கள்

அகத்தில்

உதிரமானாய்…!

 

வாழ்க வாழ்க

அறிவுச் சுடர் தந்த

ஆசான்களின்

புகழ் வாழ்க…..!

TAGS: