இறப்பு! …..(ரமணா தேவி த/பெ ஆனந்தன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

Ria Munk on her Deathbed, Gustav Klimt (1912), Oil on canvasஆண்டவனின் விசித்திர கட்டளை,

வலியின் பெரும் ஊற்று,

ஏற்க மறுக்கும் உண்மை,

தவிர்க்க முடியா பிரிவு,

                                                                 

மானுடனின் முடிவில்லா கேள்விக்குறி,

பரம்பொருளின் ஒரே பதில்,

மாற்ற முடியாத மறைப்பொருள்,

மனித ஆட்டத்தின் முற்றுப்புள்ளி,

 

ஒரு கூட்டின் இழப்பு,

ஒரு சிரிப்பின் ஊனம்,

ஒரு மனத்தின் துடிப்பு,

ஒரு வாழ்வின் எல்லை,

 

ஓர் ஆத்மாவின் மறைவு,

ஓர் அன்பின் அடக்கம்,

ஓர் இதயத்தின் அமைதி,

ஓர் உருவின் அழிவு,

 

 கலைக்க இயலா தூக்கம்,

நிரந்தரமான/நீடிக்கும் நெடிய ஓய்வு,

பூலோகத்தின் முற்றுப்பெறாத் தொடர்க்கதை,

வெற்றியாளனின் அழியா சரித்திரம்,

 

ஓர் உள்ளத்தின் உதயம்,

ஓர் உயிரின் புதுக்கோலம்,

ஒரு புதுஉறவின் சங்கமம்,

புவிப் பயணத்தின் இறுதிநாள்,

 

மொத்தத்தில்,

தூரம் அறியா பிரியாவிடை!!!

 

ramana devi– ரமணா தேவி த/பெ ஆனந்தன்

மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம்,      

ஈப்போ வளாகம்

TAGS: