-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
நமசிவாய.
ஆஸ்தீகர்க்கு வணக்கம்,மனிதனையும் ஆதியையும் ஒப்பிடுவது தவரு அதாவது ஐயா நீங்கள் குறிப்பிட்ட 8 குணத்தார்,ஒரு சமாதியடைந்த யோகிக்கு பொருந்தும்,பக்தி முதலா,த்யானம் முதலா என்ற கேள்விக்கு விளக்கம்,உண்மை எது என்று அறியா முன் எப்படி அதன் மீது உணக்கு பக்தி வரும்.முதலில் த்யானம் பழகவும் பின் எதன் மீது பக்தி செய்யலாம் என்ற முடிவுக்கு வரலாம்,முடிந்தால் திருக்குறளில் மாணவர் வாழ்கை,இல்லறத்துக்கு முன் பக்குவபடுவது,இழ் வாழ்கை,துரவு இப்படி சமுதாயத்திற்கு நேரடி பயன் தரும்(அறம்) தலைப்பில் மானாடு நடத்தினால் பயனாக அமையும்,இது என் தாழ்மையாக அவா,மக்களுக்கு குறையாக காணப்படுவது அறம் இல்லாமை.இந்த அறத்தை தமிழ்பள்ளியிலே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.தயவு செய்து அதிலும் நாகரீகத்தை நூழைந்துவிடாது தடுத்தல் நலம்.எனக்கு நாயன்மார் என்றால் என்ன என்று தெரியவில்லை,ப்லீஸ் வாழ்க நாராயண நாமம்.
வணக்கம் ஐயா. தங்களின் கட்டுரை , ஒரு கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் , அதற்கான தக்க ஏதுக்களையும் தாங்கியுள்ளது. கடவுளின் எண்குணத்தை உணர்ந்து தெளிந்தால், பரம்பொருளின் ஐந்தொழில்களையும் அறிந்து உய்த்துணர்ந்தால், நம் தமிழர்களின் நிலை கண்டிப்பாக உயரும். சிவபெருமானையும் உயிரின் குணத்தையும் அறிந்து அனைவரும் செயல்பட்டால் மட்டுமே நாம் நம் நெறியை மேலோங்கச் செய்ய இயலும். பரவலாக மதம் மாற்றம் நடைபெறுவதை நிறுத்தி, நம்மவரைக் காப்பாற்றலாம். சைவ சித்தாந்தத்தைச் சிறப்பாக நிறுவலாம்.
காயி அவர்களே, முதலில் திருமுறைகளை ஓதுங்கள். அதன் பொருளை அறியுங்கள். உங்களின் கேள்விகளுக்குப் பதில் கிட்டும். ஆதி அந்தம் எதுவென்று தெரியும். உங்களைப் பற்றியுள்ள சந்தேகம் விலகும். இயன்றால் ஐயா குறிப்பிட்ட மாநாட்டிற்குச் சென்று , ஐயம் தெளியுங்கள்.
இஸ்லாம்,க்றிஸ்துவர் போன்று நாமும் செல்ல வேண்டும் போல் அமைகிறது நோக்கம்.அப்போது ஆலயம் தமிழர் செல்ல கூடாத ஸ்தலமோ,ஆமாம் அங்கே சென்றால் மனம் கெட்டுவிடும்,அங்கே நிறைய சாஸ்திரம் கடைபிடிக்க படுகிறது.வேதத்தை கொடுத்த குரு(காயத்ரி),சூர்யன்,ஷக்தி,மஹா,விஷ்ணு,ஷிவா,முருகர்,கணேசர் இப்படி நிறைய வழிபாட்டு ஸ்தலம் கண்டு மனம் கெட்டுவிட போவுது.நீங்கள் யாரும் கோவில் பக்கம் போவது இல்லை தானே பேஸ் பேஸ்.வேதம் சாஸ்திரம் வழி ஆலயம் எழுப்பபட்டு வழிபாடு நடந்து வருகிறது.வாசல்கள் காவல் கோபுரம் பூதங்கள் கலசங்கள் கருங்கல் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் யாகம் தேர் திருவிழா பஜனை வேத பாராயணம் ஸ்தோத்ரம் பூனூல்கல்யாணம் இப்படி நடைபெறும் புனிதம் நிறைந்த இடத்திற்கு வந்து கெடுவதை தவிர்ப்பது சிறப்பு.மனிதர்க்கு இணையாக தெய்வமும் பிறக்கும் இறக்கும் அழியும் போன்ற அமங்கல வாசகத்தை தவிர்ப்பது நன்று.குரான் சொல்கிறது இறுதியில் இஸ்லாமும் கிறிஸ்துவம் மட்டும் தான் இருக்குமாம் மற்ற எல்லா மதமும் அழிந்துவிடுமாம் நம் கடவுள் நம்பிக்கை இப்படியே போய்கொண்டு இருந்தால் அது வுன்மயாகிவிடும் காலம் வெகு தூரமில்லை.இஸ்லாம் கிறிஸ்துவம் ஹிந்து முடிவில் மஹா விஷ்ணு பத்தாவது அவதாரம் எடுப்பார் முடிப்பார்,வாழ்க நாராயண நாமம்.
நீங்கள் கூரும் தமிழ் நாயன்மார் பாடல் வழி இறைவனை அடைந்தனர் வை நோட் நீங்களும் நடராஜர் வைத்து ஆடல்(பரதம்),சங்கீதம்(பாடல்) யியற்றி இறைவனை அடைய கூடாது.இப்படி மாதி யோசித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.வுங்கள் கனவு காவியம் ஆகும் திண்ணம்.வாழ்க நாராயண நாமம்.
எங்கேயோ வெகு தொலைவில் இருந்து கடவுள் ஒருவன் நம்மை ( remote control ) இயக்கி கொண்டிருப்பதாக மனிதன் நம்பிவிட்டான் ! அதன் வெளிபாடுதான் சமயம், மதம்,தெய்வ வழிபாடு ,சிறு தெய்வ வழிபாடு, ஆளுலுயா,அல்லா,கர்த்தர் இப்படி ஏகப்பட்ட இறை வழிபாடுகள் ! தன்னை அறியாதார் தலைவனை அறியாதார் ( திருமூலர் ) .
பார்ப்பனர்களின் ஏஜெண்டுதான் திராவிடம் ..
அங்கங்க சந்துல சிந்துபாடுகிறது .. பாபா பஜன் !!
அடேய் உண்மைலேயே உங்களுக்கு பாபமேல பக்தியா???
வசூல் பண்ணுறதுதான் உங்களின் நோக்கம் . வாடகை அதிகமுள்ள கடைவரிசையாக தேடிபிடிகிரிங்க எண்டா ?
இதுல அறியாத தமிழனும் சேர்ந்திகிறான்!
ஐயா நாகப்பன் ,தர்மலிங்கம் ,தேனீ நம் தமிழர்களை நேர்வளிபடுத்த மென்மேலும் தாங்கள் கற்றறிந்ததை எம் தமிழ்மக்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டுகிறேன்
வந்துட்டான் அய்யா ,இவன் ஒருத்தன் கடவுளின் எஜன்ட் .முருகன் தமிழ் கடவுள் அதை மற்றும் எடுத்துக்கொண்டு இந்து சமயத்தில் ஒரே கடவுள் கொள்கையை ஏன் பரப்பகூடாது என்று தந்தை பெரியாரிடம் ஒருவன் கேட்ட
போது ,இந்து மதத்தில் எல்லா கடவுள்கள் ஒன்டோரோடு
ஒன்று மலமும் ஈயும் போல் கலந்து விட்டது அதை பிரித்து எடுத்தால் நாறும் அதனால் அது தேவையற்ற செயல் ,கடவுள் நம்பிக்கை இல்லாமல் ரஸ்சியாவில் கோடி கணக்கில் சிறப்பாக வாழும் போது தமிழனுக்கு கடவுள்
இல்லாவிட்டால் எந்த நட்டமும் இல்லை வெங்காய நைனா
வந்துட்டான் அய்யா ,இவன் ஒருத்தன் கடவுளின் எஜன்ட் .முருகன் தமிழ் கடவுள் அதை மற்றும் எடுத்துக்கொண்டு // தமிழ் பித்தன் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று சொல்லலாமா ? வெங்காய பெரியார் நாயகருக்கும் தமிழனுக்கு என்னையா சம்பந்தம் ? முதலில் ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழர் இல்லையே ! தமிழர் மரபு, பண்பாடு, தமிழ் மொழி அழிப்புக்கு, தமிழன் பெயரிலேயே செய்தவர்தான் இந்த ராமசாமி நாயக்கர் என்ற பெரியார் !ஆரியனை விரட்ட தமிழனை பயன்படுத்தி ,திராவிடன் என்ற பெயரில் தமிழனை அடக்கி ஆள்கிறான் இந்த திராவிடன் என்ற திருட்டு கம்மனாட்டி ! 2009 ஈழ போருக்கு பிறகுதான் திராவிடன் என்ற திருட்டு கும்பலின் செயல் அம்பலத்துக்கு வந்தது ஐயா !
சடக்கு தெரிகிற்து…இலக்கு தெரியவில்லை. விளக்கு கையிலுண்டு. கண்களில் விழிகள் இல்லை. மீட்ச்சி நெஞ்ஞில் உண்டு…மோட்ச்ஹம் விழிகளைத் திறந்துவிட மறுக்கிற்து.
பல இயக்கங்கள், விழிப்புணர்வு கடைகள், தியான மையங்கள் போன்றவை அனைத்தும் மோட்சத்தைக் காட்டுவதாக செயல்படுகின்ற்ன. அவைகளுக்கான தலைமையாளர்கள் அதை நாடிச் செல்வோர்களை வெறும் தலையாட்டிகளாக பதப்படுத்தப்பார்க்கின்றன. பதப்(பட்டுப்)போன சிலர் வெளியில் அவர்களுக்காக பிரச்சாரங்கள் செய்கின்றனர்.
ஆலயங்கள் கம்பீரத் தோற்றத்துடன் மிளிர்கின்றன. ஆலயத்தலைவர்கள் ஆண்டவனின் பிரதினநிதிகளாக காட்டிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்குக் கிடைக்கும் நிதிகளுக்காக. அவர்களுக்கான ஏகப்பட்ட மரியாதைகள் சிலரால் தடபுடலாக்கப்படுகின்றன.
ஆக, இந்தச் செயல்பாடுகள் ஒரு குழுமத்துக்கான பாதுகாப்பான ஒரு மையத்தை உருவாக்கிக்கொடுக்கின்றன. அவர்களை யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. மக்களை ஒரு குழிக்குள் தள்ளி அவர்களை ஒன்றுசேர ஒருமித்த குரலில் ஒரே கூக்குரலாக அரோகரா என்ற கோசத்தை மட்டும் ஒலிக்கச் செய்துவிடுகிறார்கள்.
பலம் உள்ளவர்கள் பயில்வானாகிவிடமுடியாது. பலத்துக்கான பாலத்தை சரியாக அமைத்துக்கொண்டவர்கள் பலம் சேர்ந்த பயிவானாக ஆகிவிடமுடியும்.
ஆக, இதனால் நாம் தெரிந்துகொள்வது நல்வினையை தீவனையிலிருந்து நாம் காப்பாற்றமுடியாது. தீவினை நல்வினைக்குள் ஊடுருவுவதை நம்மால் தடுக்கவும் முடியாது.. இன்னும் நிறைய சொல்லலாம். சொல்லிப் பயனில்லை.
(குக்கலைப் பிடித்து நீவிக் கூண்டினில் அடைத்துவைத்து
மிக்கதோர் மஞசள் பூசி மிகுமணம் செய்தாலுந்தான்
அக்குலம் வேறதாமோ அதனிடம் புணுகுண்டாமோ
குக்கலே குக்கலல்லால் குலந்தனில் பெரியதாமோ)
ஐயா, ஆறு. நாகப்பன் அவர்களை அடியேன் நன்கு அறிவேன்.
உங்கள் முயற்சி வெற்றி அடைய பிரார்திக்கின்றேன்.
மகேந்த்ரா,நடராஜர் 10,கேட்டதுண்டா,பாடியதுண்டா.நவக்கிரகம் வழிபாடு மூடனம்பிக்கை எல்லாம் மூடனம்பிக்கை ஆனால் நீங்கள் சொல்வது (முடனம்பிக்கயாய்) தெரியுதே.யாம் வேறு அங்கே வரணுமா,பரவாயில்லை அது வுங்கள் நம்பிக்கை தொடருங்கள்,அப்போது நீங்கள் சொல்வதை பார்த்தல் ஆதி என்பது ஆன் ,அப்படிதானே.நிறைய வாசகர் கேட்டிருந்தனர் கடவுள் ஆனா பெண்ணா என்று,மறந்து விட்டேநே,,சிவா ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பீரே பித்தனிடம் பேசுவது முடியாத விவாதம்.வாழ்வதற்கு புகழுடன் வாழ்வதற்கு “அறம்” வேண்டும்.சமாதி அடைய வழி எதற்கு,ஞானி ஆக வழி எதற்கு யோகி ஆக வழி யாருக்கு வேணும் மனிதனாய் வாழவே ஆசை படுகிறேன்,இறைவன் கொடுத்துவிட்டார் சொர்கத்தை நம் பூமியிலே,வுணவை இலையில் போட்டு விரதம் சொன்னால் சரியா.இந்த பூமியில் என்ன இல்லை,எல்லாம் கை வசம்.ஆதி நம்மை பூரனமாக் படைத்தது விட்டார்,அதை பாதுகாத்து,வுடம்பை வுரமாக்கி நீண்ட காலம் சுகமாய் வாழமுடியும்.இறைவன் கொடுத்த கீதயை படித்தாலே போதும்.இப்போது சிவாச்சரியறாய் வாழ்பவர் வசதி பெற்றபின் வீட்டில் வெங்கடாஜலபதி வுருவம் டைமன் கல் பதித்த படம் வைத்து வழிபடுகின்றனர்,திருப்திக்கு சென்று மொட்டை போடுகின்றனர்,வண்டி வாகனத்தில் பாலாஜி,வியாபார ஸ்தலத்தில் பாலாஜி,சிவா மானுடர் கர்மாவை மன்னித்தபின் மக்கள் ஆதியை தேடி விரைகின்றனர் வுதயத்தை தேடி.தெற்கிலே மயானம்தான் வுள்ளது வடக்கிலே சொர்க்கம் வுள்ளது.ஏன் இந்த பிடிவாதம்,நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஏன் வாழ்த்துக்கள்,விழா மங்களகரமாய் தொடங்கி நிறைவை பெற நாராயணன் அருள் புரியட்டும்,வாழ்க நாராயண நாமம்.
டேய் தமிழர் நந்தா முடுடா சோணகிரி
நயன் மார்களின் வரலாற்றை படியுங்கள் பரம் பொருளான சிவா பெருமானின் பெருமைகள் புரியும் .
“அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து”
(குறள் 1: திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்) )
பொருள்: ஒப்பற்ற இறையாகிய சிவபரம்பொருள், ஆணவம் இன்றி எவ்விடத்தும், எக்காலத்தும் – கால தேசங்களால் குறைவின்றி நிறைந்து, பிறப்பின்றி போக்குவரவின்றி (பிறப்பு இறப்பு இல்லாமை) நிலை பெற்றிருக்கும் வியாபகப் பொருள்.
எங்கும் நிறைந்திருக்கும் பரமனாகிய சிவபெருமானே எல்லா உயிர்களுக்கும் கால தேச கட்டுபாடின்றி அருள்புரிய உடையவராவார் என்பதனை நாம் உள்ளூர உணர்ந்தாலே நமது பக்தி நெறி செம்மையுறும். சித்தாந்தம் இவ்வாறாயின், ஒரு கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குள், ஒரு குறிப்பிட்ட செயலுக்காக எம்பெருமானால் படைக்கப்பட்டு செயலாற்ற வந்த தெய்வம், பரமனால் கொடுக்கப்பட்ட அந்த செயலை மற்றுமே, அந்த கால-தேசத்திற்கு உட்பட்டு மட்டுமே செய்யும் ஒழிய மற்றதைச் செய்ய இயலா. கொடுப்பவனும், பெறுபவனும் ஒன்றாகா. இதுவே பரம்பொருளாகிய கடவுளுக்கும், தெய்வத்திற்கும் உள்ள வேற்றுமை, இடைவெளி என்று அறிந்தால் பல தெய்வ வழிபாடு நமக்கு தேவை அற்றதாகி விடும். சித்தாந்தம் அறிந்த பலரும் இதனை எடுத்துச் சொல்ல பயந்தனர். முனைவர் அவர்கள் உள்ளதை உள்ளவாறு எடுத்துச் சொல்லி, நம்மவர்களை அறிவார்ந்த (ஞான) சமய வழியில் நிறுத்த வேண்டி எடுத்த ‘சத்திய சோதனையே’ 2-ம் உலக சைவ சமய மாநாட்டின் கருப்பொருளாக அமைந்தது. செம்பருத்தி வாசக பெருமக்கள் அனைவரும் இம்மாநாட்டில் சந்திப்போம், சிந்திப்போம்.
அடியே பார்பன சிறுக்கி .. இது சைவ சமயத்தை பின்பற்றும் தமிழர்களுக்கான விழிப்புணர்வு பிரசுரம் . இதற்கு நீர் ஏன் பதறுகிறாய் ? உமக்கு கல்லாகட்ட முடியாது என்கிறபயமா ?
உனக்கே ஒரு சொந்த மொழிகிடையாது … இதுல வாயைகொடுத்து சு.புண்ணாகாதிர்.. நாறாயனாவ ஏன் கண்ட கண்ட இடத்திலெல்லாம் கூவிகூவி விற்கிறாய் ? சந்துல ஒரு பாபா செண்டரைதிறந்து வை நல்லா சில்லறை சேரும் ..தட்டில் போருக்குவதட்கு பதில் கொஞ்சம் டீசன்டாடா இருக்கும் .. திறக்க காசு இல்லன்னா தொக்குன் லோனுக்கு விண்ணபி கிடைக்கலாம் .. ரொம்பபேர் கடனை வாங்கி என்ன பிசினஸ் பண்ணுவதென்று தெரியாமல் பாபா பிசினஸ் பண்ணுகிறார்களாம் …. இப்படி வீம்புக்கு கருத்து சொல்லாம பொழைக்கிற வழியபாரும்.. வாழ்க காபாலிகன் வாழ்க அவன் நாம்ஷ் உஷா உஷ்ஷா கீஈ சுவாகா
கடவுளை கானும் முன் பக்தி வருமா,கடவுளை காண வழிகள் உள்ளது,எல்லா ரெக்கோட்டும் ஆகாயத்தில் பதிவாகியுள்ளது.த்யானம் செய்து தெரிந்துகொள்ளுங்கள்,முன்னோர் ரிஷிகள்,துறவி,சித்தர் இவர்கள் அனுபவம் போன்றவை அங்கே பதிவாகியுள்ளன,அதுவே சிரந்த வழி.(நாயன்மார் என்பவர் யார்)வாழ்க நாராயண நாமம்.
பேசு,ஆம்பளை மாதிரி பேசு,இல்லே பொம்பள மாதிரி பேசு,இரண்டும் கலந்த மாதிரி பேசுர.தொண்டையிலே முடிமுலைச்சிரிச்சா போய் பாயாசம் தேடு இல்லென்னா சாப்பிமுடியாது ஓய்,திருடனுக்கு தான் திருட்டு புத்தி வரும்.நாங்க தட்டு காசு சேர்கிரோம் ஆனா நீயோ வாய்கரிசி போடும் காசை தின்னு வயிறு வலக்குறீர்.இரண்டும் கலந்தவனே நாங்க கொடுக்கும் அர்சனையை வாங்கி கண்ணில் ஒத்திக்கொண்டு தலையில் கொட்டிக்கொள்ளும் ஜடமே நீரேல்லாம் பேசுவாய் நாராயணனை பற்றி.மாட்டு சானத்தை மூத்திரத்தையும் கலந்து உடம்பில் பூசித்திரியும் உமக்கே இவ்லோன்னா,சந்தனம்,பன்னீர்,பச்சைகற்பூரம்,வாசனை திரவியம் பூசும் பட்டாச்சாரியர்க்கு எவ்லோ இருக்கும்.சிவாவுக்கு நாய் வாகனம் இல்லை,இருந்தா அதன் மலத்தையும் சிரு நீரையும் பூசித்திரிவீர்,நாராயண நாராயண.
ஆதி என்றால்,பிறப்பு இரப்பு அழிவு போன்ற சிறுமை படுத்தும் வாசகமாக அமைகிறதை ஏன் வுனரவில்லை.வாருங்கள் அய்யா என்பதற்கும் வாடா போடா போன்று புரிகிறது.சிவாவுக்கு மாத்திரம் நடுவர் தேவையோ,ஸ்ரீ சிவா சித்திரம் படம் உண்மையா பொய்யா.ஶ்ரீ லிங்கம் உண்மையா பொய்யா,அர்தநாரீ எப்படி,வாழ்க நாராயண நாமம்.
தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல வாழ்வை வழங்கும் திருக்குறளில் சிவன் காணுமே, கடவுள் என்ற எழுத்தை காணுமே தெய்வம் என்ற ஒரு வார்த்தையை
தவிர ,திருவள்ளுவர் என்ன நாத்திகனா ,அவருக்கு பிறகு இந்த
ஆரிய கூத்தடிகளால் உருவாக்கப்பட்ட இந்து மதம் அவர்களுக்கு வருமானத்தை ஈட்டி தந்தது , நீ அவன் புகழ்
பாடுவதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது ,நீ தான் இந்து மதத்தின் பிரதிநிதி கூறிக்கொள்ளலாம் கிராக்கன் தலைவன் மா தான் இப்போது இந்து மதத்தலைவன் ,சும்மா தேவை இல்லாததை எழுதி உன் நேரத்தை வீண் அடிக்காமல் மாவை விளக்கி ஒரு இந்துவை உன்னால் ஏன் உன் சிவனால் கொண்டுவரமுடியுமா ,வந்துண்டாண்ட என்று நான் கூறியது இந்து கட்டுரையின் மூல காரனை புரியுதா நைனா .
காயு உமக்கு நான் ஆம்பளை (ஆண்) என்று நிருபிக்க சொல்கிறிரா?
பூச்சோங் பத்து14 வா .. நல்லா சிறப்பா நிருபிக்கிறேன் .. ஆத்துல வேரயாராச்சும் இருந்த அவாளையும் அழைச்சிகிட்டு வா ..ஒகே வா ..
சிந்து வெளிபள்ளதாக்குக்கு பரதேசியாக வந்திர்கள்… இன்றும் சொந்த அடையாளத்தை மறைத்து தமிழன் போர்வில் வாழ்கிறாய் முட்டாள் ..
நீங்கள் சிந்திபதைபோன்று நாம் தமிழர்கள் சிந்தித்தால் போர்வைல் வாழும் உம்மைபோன்றவர்நிலை ?
டமில் பீத்தன் [tamil biththan ] அவர்களே! பலர் வணங்கும் சிவபெருமானை ‘வெங்காய சிவன்’ என தங்கள் வர்ணித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரிய கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வள்ளுவப் பெருமான் இதையெல்லாம் போதிக்கவில்லையா?
அவனா நீ,எம் வீட்டு ஆம்பளைங்கள நான் இப்படி தேருபொருக்கும் 4+5 கிட்டே விட எம் பெத்தவங்க எனக்கு கதுகுடுகலடி,வுனக்கு கத்துகுடுதாங்க்களோ பேஸ் பேஸ்.நாராயண நாராயண.
பாத்திங்களா இதுங்க லட்சணத்தை! முனைவர் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆனால் இங்கே கருத்து பரிமாற்றம் எதைப்பற்றி நடக்குதுன்னு? நம் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? வேதனையாக உள்ளது!
என்ன இது உரையாடல்கள் அநாரிகமாக போய் கொண்டிருக்கின்றது. இது ஒரு சமய சம்பந்தப்பட்ட கட்டுரை. தயவு செய்து நாவடக்கமும் கருத்தடக்கமும் காக்க.
தமிழ் பித்தரே நீர் போற்றும் தமிழுக்கு தலைமகனாக விளங்கிய சிவபெருமானை இவ்வகையில் நிந்திப்பது சிவநிந்தனை, சிவத்துரோகம். அகரம், உகரம், மகரம் உன் நாவை விட்டு நீங்க வேண்டி சிவநிந்தனை செய்யாதீர். அடக்கம் அறிவுக்கு அழகு.
தமிழ் பித்தரே, நீர் கட்டுரையாளரை நேரிடையாக அறியாதவர் என்பது உமது கருத்தில் இருந்து நன்றாகத் தெரிகின்றது. ஆதலால் உமது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்ரீர். அவரை அறிந்தால் நீர் கூறிய கருத்துக்கு வருத்தப்படுவீர். 2-வது உலக சைவ சமய மாநாட்டில் ஓர் ஓரமாக அமர்ந்து அங்கே பேசப்படுபவனவற்றை கேட்டறிந்து மீண்டும் தங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யவும்.
காயீ , ஏனைய்யா இந்தப் புலம்பல்? உமக்குத் தெரியாத உண்மையை முதலில் அறிந்து கொள். அதற்குப் பிறகு விதண்டாவாதம் பேசு. இல்லது பிறவாது, உள்ளது அழியாது என்ற தத்துவம் உமக்குக் கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை. முதலில் திருக்குறளையாவதுப் படித்து பாரும். உண்மைப் பொருளை விளங்கிக் கொள்ளவும். அல்லது தேனீயார் கூறிய திருவருட்பயனைப் படித்துத் தெளிவடையவும். வாழ்வதற்கு அறம் வேண்டும் என்பது உமது கூற்று. அது எந்த அறத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள் என்று தெரியுமா? கீதையை இறைவன் கொடுக்கவில்லை என்ற உண்மையும் நீ அறியாய். கீதை ஒரு நன்னெறி நூல். கடவுள் தொடர்பான பல அலசல்களை முதலில் செய்யவும். அதை விடுத்து , பிதற்ற வேண்டாம்.
சிவ பிரசாதத்தில் மரக்கறியில் கிராம்பு,ஏலக்காய் இருந்ததை மரந்து கடித்துவிட்டேன் சித்தரே,ஆதலால் வுவவாமையால் துப்பிவிட்டேன் பொதுவில்,இது இயற்கையே வேணுமென்ரே உமிழ வில்லை,யார் மனதையும் அசௌகரிய படுத்தி இருப்பின் வருந்துகிறேன்.திட்டி இருப்பின் வேறு ஆனால் மணம் வருந்தும் படி வருந்தியது ஜீரணமாகவில்லை சித்தரே,வாகர் பெருமக்களே.நாராயண நாராயண.
நீங்கள் எல்லோரும் உண்மையிலே ஹிந்துக்கள என்று எனக்கு சந்தேகம் வருகிறது . தமிழர்களுக்கும் ஹிந்துக்களுக்கும்
இங்கே கலகம் எதற்கு ?? இதற்க்கு முன்பு ஒருமுறை இதே தலைப்பில் நான் சொன்ன கருத்துக்கு ஒருவர் தமிழர்களையும் ஹிந்துக்களையும் கலக்காதிர்கள் என்று சொன்னார் . இங்கே மூவினத்தவரும் உள்ளனர் தமிழ்,தெலுகு,மலையாளம் . மாரியம்மன் கிராம தெய்வம்,முருகன் தமிழ் கடவுள் என்று மார்தட்டும் தமிழர்கள் எதற்காக அடுத்த இன கடவுளை வணக்குகின்றனர்? இந்த நாட்டில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் மட்டும்
வாழவில்லை ஆந்திர , கேரளா போன்ற அண்டை மாநிலத்தில் இருந்தும் இங்கே வந்து வந்து கொண்டிருகின்றனர் .
அடுத்தவர் நம்பிக்கையை அசிங்க படுத்த யாருக்கும் உரிமை கிடையாது . பெருமாளை , நரசிம்மரை ஆஞ்சநேயரை,
பாபாவை வணக்குபவர்க்கு தெரியும் அவரை எப்படி வணங்க வேண்டும் அவருக்கு உண்டான பூஜை என்ன என்று அதே போல் ஐயப்பனை , பகவதி அம்மனை வணக்குபவர்களுக்கு தெரியும் அவரை எப்படி வணகுவது என்று ஏன் என்றால் அவரவர் தலைமுறை தலைமுறையை வணக்கிய தெய்வங்கள் . நடுவில் சிலர் புகுந்து இது சரி இல்லை அது சரி இல்லை என்பதற்கு எந்த தகுதியும் கிடையாது . அடுத்தவர் வீட்டு கதை உங்களுக்கு வேண்டாம் . உயர்வோ தாழ்வோ அவரவர் கடவுளை முறையாய் வணங்க முயற்சி செய்யுங்கள் . எந்த கடவுளாக இருந்தாலும் நிந்திப்பதை விடவும் .
மலேசியா என்ன வுங்க அப்……..நாடா,போங்கடா போங்க,பிழைக்க வந்த பயலுக்கு பெச்சபாறு.இதனால்தாண்ட சீனரிடம் கை ஏந்தும் நிலை இன்று,போக போக பாரு வுங்க அடையாளமே இல்லாம பொய் நடுத்தெருவில் நின்று சீனருக்கு டாய்லெட் டிசூ விக்கப்போர.உன் அடையாலம் என்ன தெரியாதா மலாய் காரன் படம் போட்டு காட்டிட்டான்,வெல்லை காரனுக்கு டோய்லட் வாலிய தூக்கிட்டு போரத,நாராயண நாராயண.
ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கூரும் ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, இஸ்லாம் சம்பந்த பட்ட நூல்கள் தமிழ் மொழியில் அதிகம் உள்ளது. இறைவனின் வேதமாம் திரு குரான் கூட தமிழில் உள்ளது அதை வாங்கி வாசித்தால் உண்மை நிலை புரியும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
ஒன்றேகுளம் ஒருவனே தேவன் என்று இருந்த தமிழர்களை பல கடவுள் வழிப்பாட்டிற்கு அடிமையாக்கிய பெருமை ஆரிய வந்தேறி பார்பனர்களை சேறும்.
சமயம் தொடர்பான ” சொந்த” கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சமய அறிஞர்களின் நூல்களில் காணப்படும் கருத்துக்களை ஆதாரமாக கொண்டு கருத்துக்களை பதிவு செய்யவும். ஐயம் இருப்பின் சமய அறிஞர்களை அனுகி விளக்கம் பெறவும். 2ஆம் உலக சைவ சமய மாநாடு வெற்றி பெற தில்லைக் கூத்தன் அருள்புரிவாராக!!!!!. இன்பமே சூழ்க!
நாங்க சீனன்கிட்ட கை ஏந்துகிறோம் .. நீரோ எங்ககிட்ட தட்டேந்தி சிள்ளரைபோருக்கிறாய் பொருக்கி …
நாங்க மலம் அல்ல வந்தோம் சரி நீ என்ன புடுங்க வந்தியா பாப்பாத்தி ?
இது சைவ தமிழர்களுக்கான அறைகூவல் நீர் ஏன் பதறுகிறாய் ?
மங்கை உமக்கும் சேர்த்துதான் நீர் தெளுங்கசியோ சேட்டா பொண்ணோ எமக்கு பிரச்சனை இல்ல சரியா .. தமிழர்களை நேர்வழிக்கு வழிகாட்டும் கட்டுரை .. தெளுங்கர்கலையோ மலையாளிகலியோ யாரும் இங்கு தமிழர்களின் கலாசாரத்தையோ வளிபாட்டுமுரையையோ யாரும் திணிக்கவில்லை சரியா ?
அல்லது தெலுங்கில், மலையாளத்திலோ செய்தி போடவில்லை .அப்படி போட்டிருந்தால் ஒருவேளை மற்றவர்களை கவர்வதற்கு என்று எடுத்துகொள்ளலாம் .. பார்பான் பதறுவதில் ஒரு நியாயம் உள்ளது ..
(மங்கை )இங்கே மூவினத்தவரும் உள்ளனர் தமிழ்,தெலுகு,மலையாளம் . மாரியம்மன் கிராம தெய்வம்,முருகன் தமிழ் கடவுள் என்று மார்தட்டும் தமிழர்கள் எதற்காக அடுத்த இன கடவுளை வணக்குகின்றனர்?
அதிலிருந்து சைவ சமய தமிழர்களை நேர்வழிக்கு வழிகாட்டத்தான் இந்த கட்டுரை ..அன்னியர்கள் இது சரி இல்ல அதுசரி இல்ல சொல்ல தகுதி இல்லை ..
சைவ சமயத்தைப் பற்றியும் பரம்பொருளான சிவபெருமானைப் பற்றியும் மேலும் சீவன் முத்தர்களான நாயன்மார்களைப் பற்றியும் அறியாதவர்களுக்கு இந்த மாநாடு பெரிதும் துணை புரியும். தெரியாமல் பிதற்றுவதை விட தெரிந்து பேசினால் வாதத்தில் வலு சேரும். எனவே, இங்கு தவறான கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அன்பர்கள் மாநாட்டிற்கு வாருங்கள். பேசுவதைக் கேளுங்கள். திருகலாகிய உங்கள் சிந்தை திருத்தப்படும். திருச்சிற்றம்பலம்.
தொண்டு என்ற பெயரில் அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்
http://www.newindianews.com/view.php?203604Y2203OmDfc4eaKmOlJ4cbeM6AKaddccyMQUdbcdxlOI0e437DmY2e034A40o23
ஆன்மீகத்தின் விடைகள் ஆளுக்கு ஆள் மாறக்கூடியவை. சுயமான தேடல் மூலம் கண்டடைய வேண்டியதே ஆன்மீகம்.
நாம் இன்னொருவருடைய ஆன்மீகத்தில் தலையிடக்கூடாது. நம் ஆன்மீகத்தில் இன்னொருவர் தலையிட அனுமதிக்கவும் கூடாது.
இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்
ஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.
ஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.
பாவம் மங்கை! அறியாமல் உளறுகிறார். தெய்வத்திற்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை அவருக்கு! மாநாட்டிற்கு வாருங்கள். தெளிவு பிறக்கும். அதை விடுத்து காலி புட்டி போல (Tin Kosong) போலே பேசுதல் அழகல்ல..
ஆஹா,நீர் தமிழன் என்று யார்சொன்னது,தமிழ் பேசுவான் எல்லாம் தமிழனா,சிறு தெய்வ வழிபாட்டிலிருந்து குரங்குபோல் தாவி சிவவழிபாட்டுக்கு வந்தார் தானே.ஹிந்துக்களில் ஆறு சாஸ்திரம் நான்கு வேதம் இதிகாசம் புராணம்.ஆறு சாஸ்திரத்தில் ஒன்று சிவ வழிபாடு,அதை யார் திசை திருப்ப கொச்சை படுத்த நினைப்பின்,சக்ரவும் பின் சங்கும் தான் பதில் சொல்லும்.ஒரு தாய் வயிற்றில் பிறந்தது ஆறு குழ்ந்தை அதில் ஒன்று சிவா,பினாங்கில் துலுக்கனுக்கு தேள் கடிச்சா கிள்ளான் துளுகர்க்கு நேரிகட்டிக்குமாம் அதுபோல.தான் தனது என்று கொக்கரிச்ச எல்லாம் அழிந்து போச்சா,ஆணவத்தை விடு அமைதி கொள்.யாம் இங்கு மரியாதையோடு அழைக்கபட்டொம் வுமக்கு எம் கையால் மாட்டு சாணம் கொடுக்க.ஆனால் நீர் ஆட்டு மந்தயை போல் ஓட்டி வரபட்டனர் .ஏன் என் வாயை கிலருகிரீர்,கலை நீர் எம்மை அவேசபடுதிநீரோ அல்லது யாம் வும் கோவத்தை கிளரிநோமோ ஏன் வீணே மங்கையை வம்புக்கு யிலுக்குரீர் விடும்மையா.என்னை த்ரோகி பட்டம் வாங்கி கொடுக்காமல் விடமாட்டீர் போல்,புனித காரியத்திற்கு செயல்படும் மனிதற்கு நான் இடஞ்சல் தருவது தர்மம் அல்ல.நன்மையும் தீமையும் பிறர்கொடுக்க வாரா,வாழ்க நாராயண நாமம்.
நாயன்மார் என்றால் என்ன,மரக்கறி சைவ வுணவு பின் சைவ சமயம் ஆனது போல் ஏதாவது கதை வுள்ளதா.எதுவும் நடக்கலாம்,நீங்கள் தான் சொல்வீர் வாதம் இல்லாமல் வேதம் இல்லை என்று.மக்கள் மாநாட்டுக்கு வாதத்திற்கு வாசகர் கருத்தும் வுதவும் பொருட்டு,கலை நீங்கள் சொல்வது தவறு தெலுங்கற்கு ஜீவநாடி ராமர்,மலையாளிக்கு கிருஷ்ணர்,வாழ்க நாராயண நாமம்.
ஒரு நல்லது நடகனும்ன்னா இவ்வளவு பிரச்சனையா? தேவ தேவ மகாதேவா மயக்கமே வருது எனக்கு!
காலி புட்டியை தான் நிரப்ப வேணும்,நிறை குடம் தளும்பாது.போங்க போங்க போய் நிரபிக்கோங்க.இலக்கணத்தை திருப்பி பாருங்க கையேடு கொண்டு போங்க மரக்கறி மாநாட்டுக்கு.ஏண்டா வாய கின்ரீங்க்க,அதையும் சீனர்கிட்டெ விட்றாதிங்க வித்ராதீங்க்க நாராயண நாராயண.
காயீ , காயீ , பாவம் ஐயா நீர். சைவ சித்தாந்தம் என்றால் என்னவென்று அறியா உம்மிடம் எதைப் பேசினாலும் தகாது. மரக்கறி உணவிற்கும் சைவ சமயத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளும். தமிழ் இலக்கணத்தைப் பற்றி பேசும் நீர், தொல்காப்பியத்தைப் புரட்டும். விளங்காவிட்டால் , மீண்டும் படியும், விளங்கும் வரை படியும். உம்மைப் போன்றோர் கண்டிப்பாக உண்மை விளக்கம் என்ற நூலை வாங்கிப் படியும். அப்படியும் விளங்காவிடில், பரவாயில்லை, ஏனெனில் அது உம் ஊழ்வினை ஐயா.
உண்மையை சொன்னால் சுடும் என்பதற்கு இங்கே சிலர் சொன்ன கருத்துக்களே சாட்சி . கலை அவர்களே எனக்கு தாய்மொழி தமிழ் கிடையாது . இருந்தும் எந்த விழாவிற்கு எப்படி போக வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்த அளவுக்கு உங்களுக்கு தெரியவில்லை அதை நினைத்து வேதனை படுகிறேன் தைபுசதில் தினத்தில்
தமிழ் கடவுளை வணங்க தமிழர்கள் எப்படி வருகின்றனர் என்று ரோந்து பணியில் இருக்கும் வேறு இன காவல் அதிகாரிகளை கேட்டு பாருங்கள் . நாங்கள் தமிழர்களோடு அனுசரித்து போகிறோம் . எங்கள் தாய்மொழியை சிறுக சிறுக இழந்து கொண்டு வருகிறோம் சிங்கை அரசாங்கம் பிற மொழி பேசும் இந்தியர்களை மதித்து அவரவர் தாய்மொழியில் திரைப்படங்களை ஒலிபரப்பு செய்கின்றனர் ,
அஸ்ட்ரோ இந்த நாட்டில் 19 வருடமாக உள்ளது . எங்கள் மொழிக்கு ஒரு அலைவரிசை தந்திருப்பார்கள ?? தமிழர் அல்லாத இந்தியர்கள் நிறைய பேர் நல்ல பதவிகளில் உள்ளனர் . ஆனாலும் நண்டு கதை போல இருக்கு இன்றைய நிலை . திறமை உள்ளவர்க்கு உலகமே சிவப்பு கம்பளம் விரிக்கும் . ஏன் தமிழர்களுக்கு விரிக்காதா ? ஒரு சீனரை ஹிந்து சமய தலைவராக தெர்தேடுதிருக்கின்றனர் என்றால் குறை எங்கே வந்தது என்று பாருங்கள் ஒரு பொருளையும் விட்டு வைபதில்லை . சைவ சமயம் என்பிர்கள் அப்படி என்றால் என்னவென்று உங்கள்
பிள்ளைகளுக்கு தெரியுமா ? பிராமணர்களை பாபர்களை போல நடத்தாதிர்கள் கேவலமாக பெசாதிர்கள் . தெய்வ வழிபாடுகளில் குளறு படி கிடையாது . செய்யும் வேள்விகளிலும் பொய் கிடையாது நாங்கள் உங்கள் வீடு வாசலில் வந்து ஓமம் , யாகம் செய்ய சொல்லி தொந்தரவு செய்யவில்லை . அப்படி செய்ய சொல்பவர்கள் உண்மையான வேதம் படித்தவர்களாக இருக்க முடியாது . ARS எனக்கு கடவுளுக்கும் தெய்வத்திற்கும் வித்யாசம் தெரியாது என்றால் உங்களுக்கு அதிகம் தெரியுமோ ?? தெரியும் என்றால் தாரளமாக விளக்கவும் .. தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் உங்கள் மாநாட்டிற்கு போகட்டும் .
மேலே உள்ள கட்டுரையின் ஒரு பகுதி .
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
அதற்க்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் ??
மங்கை! சரித்திரன் நீர் படிக்க வேண்டும் நாங்கள் அல்ல! மூவ்வாயிரம் ஆண்டு! எந்த மூவ்வாயிரம் ஆண்டு, 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட எங்கள் சரித்திரம் தமிழ் நாட்டில் வந்தேறிகளால் திட்டம் போட்டு அழிக்க பட்டது.ஒண்ட இடம் கொடுத்த பாவத்திற்காக எங்கள் இனத்திற்கு கிடைத்த வெகுமதி அது! உலகிற்கே வாழ கற்று கொடுத்த இனம் எங்கள் இனம்! 18 சித்தர்களும் தமிழர்கள் அவர்களின் தலைவனும் தமிழ் கடவுள் முருக பெருமான்! இன்று நீர் கூறும் இளைய சமுதாயத்தின் குளறுபடிகள் தற்காலிகமே! உங்கள் சமய வரலாறு என்பது உங்களைப்போல் உள்ளவர்கள் குறித்தது அதை நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை!
உண்மையை சொன்னால் சுடும் என்பதற்கு இங்கே சிலர் சொன்ன கருத்துக்களே சாட்சி .
கலை அவர்களே எனக்கு தாய்மொழி தமிழ் கிடையாது!!!!
உமது இன மொழி அடையாளத்தை வெளிப்படையாக சொல்லவேண்டியது தானே ?
நாங்கள் இந்துவாக இந்தியனாக வாழ்ந்து அந்நியரிடம் நிறைய இழந்துவிட்டோம் ..ஏமாந்துவிட்டோம் .. இனிமேலும் ஏமாற ஏமாற்ற முடியாது .
உன் இனம் மொழி அடையாளத்தை மறைத்து வாழ்வது அசிங்கமில்லை ?
அப்போ ஏன் இங்கு வந்து அசிங்கம் பண்ணுகிறிர்?
எந்த விழாவிற்கு எப்படி போக வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்த அளவுக்கு உங்களுக்கு தெரியவில்லை அதை நினைத்து வேதனை படுகிறேன் தைபுசதில் தினத்தில்
தமிழ் கடவுளை வணங்க தமிழர்கள் எப்படி வருகின்றனர் என்று ரோந்து பணியில் இருக்கும் வேறு இன காவல் அதிகாரிகளை கேட்டு பாருங்கள்!!!
உண்மையான தமிழர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் .. உம்மைபோன்றோர் செய்யும் சதியும் தமிழர்போல செய்யும் அநாகரிகம் . தைபுசத்தில் ராவ் என்றொரு நாதாரி காளிபடத்தை காவடியில் வைத்து தனது புகைப்படத்தையும் ஒட்டி அவனுடைய தொலைபேசி எண்களையும் கொட்டை எழுத்தில் போட்டு நான் பார்த்ததில் 20% அவனுடையது .. சுடுகாட்டு காளி மண்டையோடுமாலை !!!
இப்படி அன்னியனே திட்டமிட்டு அசிங்கம்பன்னுகிறான்.. இதை யார்தான் சரிபண்ணுவது..