-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
உண்மையை சொன்னால் சுடும் என்பதற்கு இங்கே சிலர் சொன்ன கருத்துக்களே சாட்சி .
கலை அவர்களே எனக்கு தாய்மொழி தமிழ் கிடையாது!!!!
உமது இன மொழி அடையாளத்தை வெளிப்படையாக சொல்லவேண்டியது தானே ?
நாங்கள் இந்துவாக இந்தியனாக வாழ்ந்து அந்நியரிடம் நிறைய இழந்துவிட்டோம் ..ஏமாந்துவிட்டோம் .. இனிமேலும் ஏமாற ஏமாற்ற முடியாது .
உன் இனம் மொழி அடையாளத்தை மறைத்து வாழ்வது அசிங்கமில்லை ?
அப்போ ஏன் இங்கு வந்து அசிங்கம் பண்ணுகிறிர்?
எந்த விழாவிற்கு எப்படி போக வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்த அளவுக்கு உங்களுக்கு தெரியவில்லை அதை நினைத்து வேதனை படுகிறேன் தைபுசதில் தினத்தில்
தமிழ் கடவுளை வணங்க தமிழர்கள் எப்படி வருகின்றனர் என்று ரோந்து பணியில் இருக்கும் வேறு இன காவல் அதிகாரிகளை கேட்டு பாருங்கள்!!!
உண்மையான தமிழர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் .. உம்மைபோன்றோர் செய்யும் சதியும் தமிழர்போல செய்யும் அநாகரிகம் . தைபுசத்தில் ராவ் என்றொரு நாதாரி காளிபடத்தை காவடியில் வைத்து தனது புகைப்படத்தையும் ஒட்டி அவனுடைய தொலைபேசி எண்களையும் கொட்டை எழுத்தில் போட்டு நான் பார்த்ததில் 20% அவனுடையது .. சுடுகாட்டு காளி மண்டையோடுமாலை !!!
இப்படி அன்னியனே திட்டமிட்டு அசிங்கம்பன்னுகிறான்.. இதை யார்தான் சரிபண்ணுவது..
மங்கையின் கருத்தைக் கண்டு பெயரில்லாதவரும், கலையும் கொதித்துப் போய் விட்டனர் போலும்!. தங்கை மங்கை, தைப்பூசத்தில், தமிழர்கள் மட்டும் கூடுவதில்லை. அங்கே நடக்கும் அட்டகாசங்களுக்கு தமிழர்கள் மட்டும் பொறுப்பல்ல. அங்கே அநாகரீகமாக உடுத்திக் கொண்டு வருவதற்கு தமிழர்கள் மட்டும் காரணமல்ல. தென் இந்தியர்களின் 3 மொழிகளையும் பேசும் தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவருமே தைபூச திருவிழாவில் கலந்துக் கொண்டு அவர்தம் தெய்வத்தை செவ்வனே வணங்கி விட்டுச் செல்வதும் உண்டு. இவர்களே, அட்டகாசமான வழிபாடுகளிலும் ஈடுபடுவதுண்டு. ஆகையால், நல்லது நடந்தால் அது தெலுங்கு, மலையாள வம்சாவளி மக்களுக்கும், கெட்டது நடந்தால் அது தமிழர்களால் என்பதும் எவ்வகையில் நியாயம்?. மங்கை நீங்கள் தன் நிலையில் மட்டும் நின்று, தாங்கள் அறிந்ததை மட்டும் கொண்டு, தமிழர் அல்லாதார் அனைவரும் சரியான சமய நெறியில் நிற்கின்றனர் என்பது அறிவுடமையாகாது. இதிலிருந்து தாங்கள் பலதரபட்ட மக்களிடையே கலந்து வாழ்வதில்லை என்பது நன்றாக தெரிகின்றது. ஆதலால், இந்நாட்டில் எழும் சமய குறைகளுக்கு தமிழர்கள்தான் முழுக் காரணம் என்று மீண்டும் எழுதுவீர்களானால் அப்புறம் எம்மிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வர்ணாஸ்திரம் என்ன கூறுகிறது ,பிரமா அவர் நெற்றியில் இருந்து படைத்தவர்கள் தான் பிராமணர்கள் ,தோல் பட்டையில் இருந்து படைக்கப்பட்டவர்கள் சத்திரியர்கள் அரசர்கள் ,வயிற்றில் இருந்து படைக்கப்பட்டவர்கள் வியாபாரிகள் ,பிரமாவின் காலில் இருந்து படைக்கப் பட்டவர்கள் தான் சூத்தரர்கள் ( வேசியின் மக்கள் ) என்று
இந்து மதத்தில் கூறும் போது நம்மை வேசிமக்கள் என்று
கூறும் ஒரு மதத்தை போற்றி உங்களால் எப்படி புகழ
முடிகிறது ,ஒரு கூட்டத்தில் தந்தை பெரியாரிடம் ஒருவன்
கேள்வியை இப்படி கேட்டான் ,எப்படி நெற்றியிலும் ,வயிறிலும் ,தோல்லி லும் ,காலிலும் மனிதன் பிறக்கமுடியும்
இந்த நாலு ஜாதிதான் இருக்கிறது என்றால் மகாத்மா காந்தி கூறிய 5 ஆம் ஜாதியான அரிஜன் எப்படி பிறந்தான் ,அதிர்க்கு தந்தை பெரியார் கூறிய பதில் அவன் தான் முறையா ஒரு மனிதன் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தான் என்றார் .
கற்பனையில் கடவுள் கதைகளும் வேதங்களும் இந்த அறிவு வளர்ந்த காலத்தில் நாம் நம்பிக்கொண்டு இருந்தால் மற்ற இனத்தோடு பொருளாதாரத்தில் போட்டி போட்டு முன்னேற முடியாது ,எந்த சாமியும் தமிழர் சாமிகள் இல்லை என்பதற்கு வள்ளுவரின் திருக்குறளே ஒரு சான்று ,ஏன் வள்ளுவர் காலத்தில் எந்த சாமியும் தோன்ற வில்லை எந்த ஒரு நைனாவும் சிந்தித்தானா . ஏன் என்றால் 2000 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவிற்கு வரவில்லை அதனால் இந்து (திருட்டு ) மதம் இந்தியவிற்கு வரவில்லை , பாரசீகதிலிருந்து ஆடுகளையும் மாடுகளையும் மேய்துகொண்டு சிந்து நதி வழியாக வந்த நாடோடி கூட்டம் வடப்பகுதியில் இருந்து தென் பகுதிவரை தங்களின் மதத்தை பரப்ப முதலில் சோமபானம் என்ற போதை பானத்தை அரசர்களுக்கு கொடுத்து தக்காளி நிறத்தில் இருக்கும் தங்கள் மகள்,தங்கைகளை கொடுத்து அரசர்கள் தங்களின் அந்த புறத்தில் சல்லாபத்தில் ஈடு பட விட்டு ஆரியர்கள் கோயில் குருக்களாகவும் இருந்து தமிழர்களை வேசிமக்கள் என்று கூறி ஜாதிகளை uruvaakiyavan biramanan
சிங்கம் நைனா ,பலர் வணக்கும் சிவனை வெங்காய சிவன் என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்தீர் ,நன்றி சிவன் யார்
அவரின் உடையில் இருந்து தோற்றத்தில் இருந்து ஆறறிவு
படித்த மனிதர்கள் யாரும் அவரை வணங்கு வார்களா ,கழுத்தில் பாம்பு தலையில் கங்கை , புலி தோல் உடை எது எல்லாம் இருக்க கூடாதோ அவற்றை எல்லாம் உள்ள சிவன் கடவுள் என்றால் விநாயகர் யாரு ,முருகன் யாரு
சிந்தியுங்கள் சிங்கம் நைனா .அப்புறம் பார்வதி ஒரு குடும்பமே கடவுளா .அரசியல் வாதியின் குடும்பமே அரசியல் வாதியாக இருப்பது போல இந்த குடும்பமா .சிங்கம் நல்ல சிந்து பாருங்கள் மீண்டும் உறுதியாக சொல்லுகிறே வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றுமே
இருக்காது அதுபோல இந்த சாமிகளின் கதைகள் சரியா நைனா .
சிந்தியுங்கள்
தமிழ் பித்தரே, தங்களுக்கு வேத பண்பாடும், பிராமனத்துவமும் பிடிக்கவில்லை, வேருக்கின்ரீர், எதிர்க்கின்ரீர் என்பது கண்கூடு. அதனால்தான், தமிழர் ஏன் தங்களுக்கு என்று ஓர் அறிவார்ந்த சமயம் இருக்கும் பொழுது, நம்மவர்களை அவமதிக்கும் வேறொரு நம்பிக்கைச் சார்ந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும். இதுவே எம்முடைய ஆதங்கமும் கூட. அனைத்து வகையிலும் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனுக்கு தனக்கென்று ஓர் உன்னத சமய முறைமையை வகுத்துக் கொள்ள தெரியாமலா வாழ்ந்திருப்பான்?. நமக்கும் ஓர் உன்னத சமய நெறி இருந்தப்பா. நாம்தான் அதனை வாரி அனைத்துக் கொள்ள தவறிவிட்டோம். அந்நெறி வேதத்திற்கும், வைணவ சமயத்திற்கும் எதிர்ப்பாகவும், போட்டியாகவும் விளங்கியதால் சைவ நெறியை வேரறுக்க வேண்டி திட்டமிட்டு சமய கீழறுப்பு வேலையை செய்தவர்கள் வேத பரம்பரையில் வந்த பிரமர்களே. அப்படி வந்ததுதான், நடராஜர் சிலையையோ, சிவன் சத்தி படத்தையோ வீட்டில் வைத்து வணங்கினால் வீடு ஆட்டம் கண்டு போய் விடும் என்னும் பொய்யான கூற்று பரவப் பட்டது. சிவன் சுடுகாட்டு சாமி அதனால் கருமக் கிரியை செய்ய ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை வைத்து மோட்ச தீபம் போடுங்கள் என்று நம் மதியை மயங்க வைத்தனர். பரம்பொருளின் அருவுருவமாகி நிற்கும் சிவலிங்கத்தை அமங்கல வழிபாட்டுக்கு வழியை காண்பிக்க சிவ துரோகிகளால்தான். அதையும் நம் நம் மக்கள் அறிவிழந்து செய்தனர். வேற்றொரு தெய்வத்துக்கு மோட்ச தீபம் போட்டால் அந்த தெய்வம் அவர்களுக்கு மோட்சம் அளிக்காதா என்ன?. போடலாம் அல்லவா!. திட்டமிட்டு செய்த சிவதுரோகத்தினால் இன்று நமக்கென்று ஒரு வழிபட்டு முறையோ, இறை தத்துவ நூல்களோ இல்லை என்று நம்ப வைத்து விட்டனர் சிவ துரோகிகள். அதனை இன்று நம்மவர்களுக்கு எடுத்துச் சொல்ல கிளம்பிய போர் படையினருக்கு ஆதரவு தாருங்கள் என்று பிச்சை கேட்கின்றேன்.
மங்கை அவர்களுக்கு ,ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.அதற்க்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் ?? ஆதி தமிழர்களின் நுன்அறிவுக்கு ஓர் எல்லை இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைய நவின விஞ்ஞான உலகில், ரத்த மாதிரிகளை தரம் பிரித்து அதன் குணாதிசியங்களை உலகிற்கு கூறி வரும் வேளையில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன் அதை கண்டுபிடித்து விட்டான். அதன் வழி வந்ததுதான் தாலி கட்டுதல். அந்த தாலி கட்டுதலிலும் ரத்த வகையை அறிந்து, பெரியப்பா, அத்தை, சித்தப்பா, அக்கா, தங்கை, கொழுந்திய என்று உறவு முறைகளை வகுத்து வைத்ததான். இதன் உண்மை தெரியாதவர்கள் அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாவா? என்று கேட்டு வைத்தனர். இதன் பிறகு வந்ததுதான் இரு தலைச்சன் பிள்ளைகள் திருமணம் செய்ய கூடாது. செவ்வாய் தோசம் போன்ற கட்டுப்பாடுகள். காரணம் அன்றைய சூழ்நிலை காடுகள் நிறைந்த காட்டு பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாகவே பாதுகாப்பு கருதி வாழவேண்டிய கட்டாயம். ஒரு ஊரை எடுத்துக் கொண்டாள் எல்லோரும் உறவினராகவே இருப்பர். ஆதலால் அவர்கள் அதனை சார்ந்தே கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டியதுவாகிற்று. ஓர் ஆதாரம் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் நாட்டை பிடிக்க வந்த வெள்ளையனுக்கு அம்மை நோய் என்றால் பயம். காரணம் கண்ணுக்கு தெரியாத ரத்த கிருமிகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தமிழனோ என்றோ அதற்கான நிவர்த்தியை கண்டுபிடித்து விட்டான் அல்லவா? அன்றைய தமிழர்களின் வாழ்கை முறை அக வாழ்கையை ஒட்டியே வாழ்ந்து வந்தனர். உதாரணம் இடுகாட்டில் பிணத்தை சுற்றி உடைக்கப் படும் சட்டியில் மூன்று ஓட்டைகள் போடுவார்கள். அதன் அர்த்தம் மாயை எனும் புற வாழ்கையில் வாழ்ந்து அக வாழ்கையை இழந்து விட்டோம் என்பதுதான். இப்படி இன்னும் நிறையவே எழுதிக் கொண்டு போகலாம். சற்று சிந்தித்து பாருங்கள் மங்கையே இப்படி அறிவாற்ந்த தமிழர்கள் உங்கள் இனத்தவரின் வருகைக்கு முன் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று. இன்றும் உங்கள் இனத்தவர் பலர் மூட நம்பிக்கை என்ற பழக்க வழக்கத்திற்கு பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். காரணம் உண்மை தன்மை தெரியததால் உங்களுக்கு சொல்லி தரவில்லை. வீட்டினுல் நகம் வெட்டுதல். நகம் ஒரு அளவுக்கு மேல் வளர்ந்து விட்டால் தேவையற்றதாகிவிடும். அதன் இடுக்கினுள் அழுக்கு (கிருமி) சேர்ந்து விடும். நகம் வெட்டும் போழுது ஒரு சில நகங்கள் தெறித்து துரத்தில் விழும். அன்றைய குடிசை வீடுகள் அறை இல்லாமல் படுக்கை இடம், சமையல் இடம், தானியம் சேமிப்பு, குழந்தை தொட்டில் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். தெறித்து விழும் நகம் சாப்பாட்டு சாதத்திலோ? குழந்தையின் வாயிலிலோ விழுந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்து பாருங்கள். வீட்டின் மூலையில் எங்காவது விழும் நகம், தவழ்ந்து வரும் குழந்தையின் மென்மையான தோலை பதம் பார்த்தால்? நகத்தின் அழுக்குகள் ரத்தத்துடன் சேர்ந்தால்? இந்த மூட பழக்கம் அன்றைக்கு மட்டும் அல்ல இன்றைக்கும் கடை பிடிக்க வேண்டிய ஒன்று. –எனக்கு கடவுளுக்கும் தெய்வத்திற்கும் வித்யாசம் தெரியாது என்றால் உங்களுக்கு அதிகம் தெரியுமோ ??— இயற்கை எனும் இறைவன் இந்த உலகில் நடத்தும் எவ்வளவோ அற்புதங்கள் நம் கண் முன்னே நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் தான் ஆணவம் என்ற அகங்காரத்தில் அவையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். இயற்கையின் நியாயப்படி மனிதர்களில், பெண்களின் வாழும் ஆயுசு வயது அதிகமாகவும், ஆண்களின் வாழும் ஆயுசு குறைவாகவும் இருப்பதை காணலாம். இயற்கையாக முதிர்ச்சி அடைந்து இறக்கும் மனிதர்களை கணக்கிலெடுத்தால் இந்த உண்மையை காணலாம். இதன்படி பார்த்தால் உலகில் பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால் இயற்கை இவ்விருவரையும் சரிசமமாகவே வைத்திருக்கின்றது. அது எப்படி?. இப்படி பட்ட இயற்கையை, ஒரு மொழி உச்சரிப்பின் வழியும், யாகம் வளர்ப்பதிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது எப்படி சாத்தியமாகும். கடைசியாக ஒரு வார்த்தை, ஒரு கவிஞரின் பாடல் ”இறவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?”. இதைதான் நாங்களும் கேட்கின்றோம். எங்களிடமிருந்து பறிக்க பட்ட மனித உரிமைகளை எங்களிடம் விட்டு விடுங்கள். இது காலத்தின் கட்டாயம். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இது வெடிக்கும். இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் மனித நாகரீகம் 4000ம் வருடத்திற்கு உட்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழரின் நாகரிகம் அதற்கும் அப்பாற்பட்டது. உங்கள் வருகைக்கு முன்பே நாங்கள் நாகரிகம் அடைந்து விட்டோம். இந்தியாவிற்குள் நீங்கள் நுழைந்த ஆண்டை யாரும் துல்லியமாக கணிக்கமுடியவில்லை உங்கள் மகா பாரத கதையையும், ராமர் கதையைின் ஆண்டுகளையும் கணிக்க முடியவில்லை. அதற்கு முன்பே நாங்கள் நாகரிகம் அடைந்து விட்டோம். மகா பாரதத்தில் அய்வருக்கு ஒரு மனைவி என்று வரும். வானத்தில் உலவும் தேவனை பார்த்து கற்பமுற்றால் என்று வரும். இவையெல்லாம் உங்களின் வரலாறுகளை ஆராய்ந்தால் உங்களின் வாழ்கை ஒழுக்க நெறி உண்மை தெரிய வரும். எங்களின் நாகரிகத்தை பார்த்து வாய் பிளந்த நீங்கள் அதற்கு பிறகே உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டீர்கள். உங்களின், இந்தியாவினுள் தமிழ் நாட்டு (தென் நாடு) பிரவேசம் ஏறக்குறைய 3000ம் ஆண்டுகள் இருக்கலாம். இப்போதைக்கு இது போதும். நன்றி வணக்கம் மங்கையே. நன்றி தோழர்களே.
ஆசிரியர் அவர்களுக்கு 8-7-2014 @ 18.11- க்கு வலையேற்றிய கருத்தை நீக்கி விட்டு திருத்தப் பட்ட இக்கருத்தை வலையேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் பித்தரே, தங்களுக்கு வேத பண்பாடும், பிராமணத்துவமும் பிடிக்கவில்லை, வெறுக்கின்ரீர், எதிர்க்கின்ரீர் என்பது கண்கூடு. அதனால்தான், தமிழர் ஏன் தங்களுக்கு என்று ஓர் அறிவார்ந்த சமயம் இருக்கும் பொழுது, நம்மவர்களை அவமதிக்கும் வேறொரு நம்பிக்கைச் சார்ந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும்?. இதுவே எம்முடைய ஆதங்கமும் கூட. அனைத்து வகையிலும் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனுக்கு தனக்கென்று ஓர் உன்னத சமய முறைமையை வகுத்துக் கொள்ள தெரியாமலா வாழ்ந்திருப்பான்?. நமக்கும் பகுத்தறிவால் வந்த ஓர் உன்னத சமய நெறியும், இறை தத்துவமும் இருந்தப்பா. நாம்தான் அதனை வாரி அனைத்துக் கொள்ள தவறிவிட்டோம். அந்நெறி வேதத்திற்கும், வைணவ சமயத்திற்கும் எதிர்ப்பாகவும், போட்டியாகவும் விளங்கியதால் சைவ நெறியை வேரறுக்க வேண்டி திட்டமிட்டு சமய கீழறுப்பு வேலையை செய்தவர்கள் வேத பரம்பரையில் வந்த பிராமணர்களே. அப்படி வந்ததுதான், நடராஜர் சிலையையோ, சிவன் சத்தி படத்தையோ வீட்டில் வைத்து வணங்கினால் வீடு ஆட்டம் கண்டு விடும் என்னும் பொய்யான கூற்று பரவப் பட்டது. சிவன் சுடுகாட்டு சாமி அதனால் கருமக் கிரியை செய்ய ஆற்றங்கரையில் ஒரு சிவலிங்கத்தை வைத்து மோட்ச தீபம் போடுங்கள் என்று நம் மதியை மயங்க வைத்தனர். பரம்பொருளின் அருவுருவமாகி நிற்கும் சிவலிங்கத்தை அமங்கல வழிபாட்டுக்கு வழியை காண்பிக்க சிவ துரோகிகளால்தான் முடியும். அதையும் நம் மக்கள் அறிவிழந்து செய்தனர். வேற்றொரு தெய்வத்துக்கு மோட்ச தீபம் போட்டால் அந்த தெய்வம் அவர்களுக்கு மோட்சம் அளிக்காதா என்ன?. போடலாம் அல்லவா!. ஏன் போடவில்லை?. திட்டமிட்டு செய்த சிவதுரோகத்தினால் இன்று நமக்கென்று ஒரு வழிபட்டு முறையோ, இறை தத்துவ நூல்களோ இல்லை என்று நம்ப வைத்து விட்டனர் சிவ துரோகிகள். நமக்கென்று அறிவார்ந்த தருக்க நெறியால் தோற்றுவிக்கப் பட்ட சைவ சித்தாந்தம் உள்ளதப்பா. அதனை இன்று நம்மவர்களுக்கு எடுத்துச் சொல்ல கிளம்பிய போர் படையினருக்கு ஆதரவு தாருங்கள் என்று தங்களைப் போன்று உள்ள பல தமிழர்களிடம் பிச்சை கேட்கின்றேன். 2-ம் சைவ சமய மாநாட்டுக்கு வந்து தங்கள் தங்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.
KAYEE உங்களுக்கு என்ன பிரச்னை ,
ஓம் நம சிவாய
புனையும், புலியும் ஓர் இனத்தை சார்ந்தவை . புனையை துரத்தினால் துாரத்தில் நின்று நம்மை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டுத்தான் செல்லும். புலியிடம் நம்முடைய ஜம்பம் பலக்காது. புலி அடிப்பதற்கு முன்னால் கிலி அடித்து விட்டது என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட. புலியின் பார்வை ஒருமித்த பார்வையுடன் கூரிய பார்வையாக இருக்கும். இறைவனை காணும் நமது பார்வையும்,சிந்தனையும் அது போல் இருக்க வேண்டும் என்று உணர்த்தவே சிவனுக்கு புலி தோல் ஆடையும், புலித்தோல் மேல் அமர்ந்து தியானம் செய்வதும் நமக்கு ஓர் உண்மையை உணர்த்தவே. எதோ ஒன்றிரண்டு காரணங்கள் மட்டுமே எனக்கு தெரியும். நானும் உங்களைப் போல் ஒருவனே. நன்றி வணக்கம்
தமிழ் பித்தரே, தாங்கள் பார்க்கும் சிவனுடைய படம் ஓர் ஓவியரின் கற்பனைக்கு உட்பட்டதே. எப்படி புராணக் கதைகளை இயற்றி ஒவ்வொரு காரணக் கதைகளை சொல்லி வைத்தனரோ அதைப் பின் பற்றியே வந்ததுதான் அந்த ஓவியரின் கற்பனை. இப்ப தாங்கள் நிந்திக்க வேண்டியது அந்த ஓவியரின் கற்பனையையும் அதற்க்கு மூலமாக இருந்த புராணங்களையுமே. ஆறு மேம்பட்ட சமயங்கள இந்தியாவின் பல திசைகளிலும் அவ்வட்டார மக்களால் பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் அவற்றை ஒற்றுமைப்படுத்த வந்தவையே சிவா மஹா புராணக் கதைகள். இதுவும் ஒரு பிராமணரால் இயற்றப்பட்டதே. அப்புறம் இந்த புராணக் கதைகள் எப்படி இருக்கும் என்பதனை தாங்களே யோசித்துப் பாருங்கள். புராணங்கள் நமக்கு பக்தி நெறியை வளர்க்க வந்தது. ஆனால் அதுவே நமக்கு பிழையான பக்தி நெறியை ஏற்படுத்த வழிவகுத்து விட்டது. இதனை தாங்கள் புரிந்துக் கொண்டால், புராணக் கதைகளை புறந்தள்ளி விட்டு சரியான இறைநெறியை அறிந்து வணங்குவீர். இறைவன் தங்களுக்கு அருளொளியை காட்ட பிராத்திக்கின்றேன்.
இடுகாட்டில் பிணத்தை சுற்றி உடைக்கப் படும் சட்டியில் மூன்று ஓட்டைகள் போடுவார்கள். அதன் அர்த்தம் மாயை எனும் புற
வாழ்கையில் வாழ்ந்து அக வாழ்கையை இழந்து விட்டோம் என்பதுதான்.
இழவு வீட்டிற்கும், இடுகாட்டிற்கும் அய்யர்கள் வராத போது இதன் தத்துவத்தை யார் சொல்லி கொடுத்திரப்பார்கள். சிந்தியுங்கள் தோழர்களே.
வைணவர்கள் எவ்வாறு சமணர்களையும், பௌத்தர்களையும் வெறுத்தனரொ அவ்வாறே சைவர்களையும் வெறுத்தனர் என்பது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் என்பவரின் வரிகள் நமக்கு உணத்துகின்றன:
“அறியார் சமணம், அயர்த்தார் பௌத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் – வெறியாய்
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று”
தமிழ்நாட்டின் ஆலயங்களில் சிவநெறியை வளரவிடாமல் பட்டாச்சாரியகள் எனப்படும் வைணவ பிராமணர்கள் துரோகம் இழைத்தனர். இவர்களே சிவநெறிக்கு புறம்பான, எதிரான பல கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவர்தம் சைவ சமயத்தில் இருந்து மறக்க வைத்து மரபு வழிச் சார்ந்த தெய்வ வழிபாட்டினில் நிலைக்க வைத்து விட்டனர். ஆலயங்களில் இவர்கள் கோலோச்சியதால் இவர்களின் மடைமாற்றும் கைங்காரியம் நன்றாகவே நடந்தது. அப்படி மாறியதுதான் மதுரையில் இருந்த சொக்கநாதர் ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமாக மாறியது, காஞ்சியில் இருந்த ஏகம்பரீஸ்வர் ஆலயம் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயமாக மாறியது. ஆகையால், தமிழர் சமயத்தையும், சைவ சித்தாந்தத்தையும் நன்கு அறிந்த கட்டுரையாளர் முனைவர் அவர்களுக்கோ அல்லது எம்மைப் போன்றோருக்கோ, மங்கையோ, சமயத்தில் ஒன்றுமே அறியாத காய் போன்றோரோ பாடம் புகட்ட வேண்டியதில்லை.
உண்மை இறைஒளியை காண, தியானம் செய்யவும். ஆயிரம் காலத்து வணகத்தைவிட அறை நிமிட உருக்க உணர்தலே மேல்.
இன்னும் ஒரு கடவுளா….?…..அந்த கடவுள் யாருக்கு சொந்தம் …??!!
என்ன ஓர் அருமையான பெயர். சிவத்தையும், காணபத்தியத்தையும் ஒருங்கே பெற்ற சிவாகணபதி கடவுள் ஒன்றுதான். அவரை உள்ளத்தால் உணர்ந்து அறிவால் வழிபடுவது எதனால் என்பதனை உணர்த்தவே 2-ம் உலகளாவிய சைவ சமய மாநாடு எதிர்வரும் 26 & 27, ஜூலை, 2014 மிட்லாண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. கலந்துக் கொள்ளுங்கள்.
மங்கை,விரண்டாவாதிகளிடம் பேசுவது செவினடிடம் சங்கதிபேசுவதற்கு சமமே.இப்போ சிவனுக்கு உருவம் இருக்கு என்பர் அடுத்து இல்லை என்பர்.உலகம் முழுதும் இவன்களை பார்தாலே கொன்று குவிக்கின்றனர்.நம் நாட்டில் நீதி மண்ரத்தில் சத்திய பிரமாணம் உற்பட எதற்கும் பகவத் கீதையையே தேர்ந்தெடுக்கபடடதை இவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.இன்று இவர்களின் அரசியளையே சீனர்களிடம் விபச்சார வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துரானுங்க.புதுமை புதுமைன்னு பேசுறானுங்க ஆனா 3000/4000,வருஷத்துக்கு முன் வாழ்ந்த குரங்கு வாழ்கையை பேசுறானுங்க,குரங்கு காலத்து வாழ்கையை நாகரீக வாழ்கை என்று கூறும் இவர்கள் நாகரீகம் எப்படி பட்டது தெரியவில்லையா,ஆனா ப்ராமணல் பூசை செய்யும் ஆலயத்தில் வந்து சாமி அர்ச்சனை,யாகம் செய்யுங்கள் சொல்லி கேட்கின்றனர்.ப்ராமணர் யார் வாசலையும் தேடி போவதில்லை.தன் இனத்தை,சாதியை கேவலமாக கருதும் மணிதன் பிணத்தை விட கேவலமானவன் காரணம் அவன் தன் தாய் தந்தையரையே கேவலத்திற்கு காரணமாக கருதுவதால்.புலித்தோலையே ஆடையாக கொள்ளும் ஈசன் சைவராம் அங்ஙனம் சைவ சமயல்(மரக்கறி) செய்து வந்தமைக்கு சைவ சமயம் வந்ததாம் என்று ஒரு தமிழ் சித்தர் பொன் மொழி,ஆகையால் இவை என் விளக்கம் அன்று.ப்ராமணரிடம் வேதம் கற்க வந்ததாம் சைதான் அதற்கு மறுப்பு கூரியமைக்கு வேதம் பொய் என்று பறைசாற்றியதாம்.இந்து மதத்தின் ஆரு சாஸ்திரத்தில் ஒன்று தான் சிவ வழிப்பாடு.சிரு தெய்வ வழிப்பாட்டை அவமதித்து சிவ வழிப்பாட்டை தேடி சேர்ந்தவரே சிலர்.இன்று சிவ நெரியையே மாசு படுத்தி மக்களையும் குழப்பி வருகின்றனர்.தென்னாட்டுடைய சிவன் மயான பூமி காரர்.காளி அவதாரத்தை கண்டால் விளங்கும்,சிவனை மிதித்து கொண்டிருக்கும் காட்சி.இதை காலத்துக்கேற்ற மாதிரி கருத்து கூறுகின்றனர்.ஆனால் என்றும் உண்மையே வெள்ளும்.சிவனின் தலையில் சிறு மண்டை ஓடு இருப்பதை கண்டீரா.காசிக்கு போனதுன்டா,அகோரர்கள் யார் தெரியுமா,தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது மங்கை.தலைமையை எதிர்பான் சைதான்.சைதான் கதை தெரியுமா,சிவனுக்கும் தாழ்த்தப்பட்ட பென்னுக்கு பிறந்ததுவே சைதானாம் மலையாள நம்பூதிரி பக்கம் பேசப்படுகிற செய்தியை பட்சி கூட்டம் பேசிக்கொண்டது,உமக்கு தெரியுமா மங்கை.இறப்புக்கு சிவபுராணம் பாடபட கூடாதெண்றால் திருமணத்திற்கா பாட போகின்றனர் நாராயண நாராயண.
மலத்தில் விழுந்து விட்ட ஒரு காசுவை எடுத்து கழுவி பாக்கெட்டில் வைத்தால் அந்த மலத்தின் வாடை இருக்கத்தான் செய்யும் ,அந்த ஒரு காசு நமக்கு தேவையில்லை நம்மால் பல காசுகளை சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு சிலர் அந்த காசு பழைய காசு 1000ஆண்டு அல்லது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
நாற்றம் அடித்தாலும் பரவாயில்லை அந்த காசுக்கு முத்தம் கொடுத்து போற்றி பேசுவார்கள் ,ஆனால் அறிவுள்ளவன் சிந்தனை வேறு மாதிரி இருக்கும் , அதுபோல புனிதமான
நமது சைவ மத சிவன் இந்து (ஆரியர்களின் ) வருகையால்
ஆவர்களுடைய மத கடவுள்களும் கலந்து மலமும் ஈயும்
போல இணைத்து விட்டது ,மலத்தில் விழுந்த காசை எடுத்து கழுவி அல்லது கழுவாமல் நைனாக்கள் பூஜை
போட்டாலும் போடாவிட்டாலும் அது உங்கள் விருப்பம்
அதைபற்றி யாரும் குறை கூறமாட்டார்கள் ஆனால் பெற்ற தாய் தந்தையையே வணங்கும் என்னைபோன்ற நன்றி உள்ள பிள்ளைகளிடம் கட்டாய படுத்தாதீர்கள் நைனா .
ஏய் தமிழா
தமிழனும் தமிழில்தான் பேசுகின்றான்
தமிழனாயிருந்து மாற்றானாய் மாறிய
எதிரியும் தமிழில்தான் பேசுகின்றான்
பார்த்தாயா தமிழின் வலிமையை
ஓசையான தமிழுக்கே இவ்வளவு வலிமை என்றால்
ஆதி தமிழர் மரபணுவில்
வந்த உன்னிடம் எவ்வளவு திறமை ஒழிந்திருக்கும்
உன்னையே நிர் சிந்தித்துப்பார்
ஆரிய மாயையில் முடங்கிக் கிடக்கும் நீ
உடைத்தெரிந்து விட்டு வெளியில் வந்து பார்
உன் நடத்தையால்
துாற்றிய உலகம்
உன்னை மதிக்கும்
சிந்திப்பாயா தமிழா?
தேனீ நீங்கள் உங்கள் கட்டுரையில் புராண கதைகளை குறைகூருகிரீகள் ஆனால் பிறகு சரியான இறைநெறியை
காண சொல்லுகிறீர்கள் ,எல்லா புராண கதைகளிலும் மதத்தை பற்றியும் பெருமையாக கூறியிருக்கலாம் ஆனால் அத்தனையும் வட நாட்டு கலாச்சார பின்னணி தானே ,மகாபாரத்தில் பாஞ்சாலி (பஞ்ச் என்றால் இந்தி மொழியில் 5) ஐவருக்கு பத்தினி (மனைவி ) இப்போதும் பஞ்சாப் மாநிலத்தில் 4 அயிந்து சகோதரர்கள் ஒரு மனைவியை திருமணம் செய்து கொள்கிறார்கள் ,நாம் தமிழர்கள் அப்படியா இருக்கிறோம் ஒருவனுக்கு ஒருத்தி (கோவலன் கண்ணகி ) ஒருசிலர் சைடில் கோவலன் மாதிரி மாதவியை வைத்துகொள்கிறார்கள் இது நமது கலாசாரம் ,நடந்து கொண்டு இருக்கிற கலாசாரம் , ராமயணத்தில் தசரத ராஜாவுக்கு 62 ஆயிரம் பெண்டாட்டி ( அப்படி என்றால் அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களும் ராமனின் அப்பாவின் பெண்டாட்டியா , அப்பனுக்கு 62,000 பெண்டாட்டி மகன் ராமனுக்கு ஒரு பெண்டாட்டி இருந்தும் ஏன் அவள் மீது சந்தேகம் வந்து தீயில் குதித்து நீ பத்தினி என்பதை நீருபித்து காட்ட சொன்னான் ராமன் . இதை நினைத்து பார்த்த அசிங்க மாயில்லை உண்மையை எடுத்து சொன்னால் நான் நாத்திகன் .தேனீ நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் மனைவியிடம் நீ கற்ப்புக்கரசி என்று நிருபிக்க நெருப்பு இறங்க உங்களால் முடியுமா ,முடியாது அல்லவே அதனால் புராணங்களை விட்டு தள்ளி விட்டு நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள் .
அறம்,அறத்தை தெரிந்துக்கொள்,அறத்தின் வழி நட,பின் ஒழுக்கம் பற்றி பேசு.சட்டம் படிக்காதவன் நீதிமன்றத்தி் வழக்காடுதலுக்கு சமம்.கல்வியை வளர்த்துக்கொள் தகுதியை வளர்துக்கொள்.யார் நாஸ்தீகன்(காபீர்) ஒரு சிவா பக்தரை இகழும்போது எந்த ஒரு ஆஸ்தீகரும்(ஹிந்து) வேடிக்கை பார்திருக்கமாட்டார்.சக்கரமும் சங்கும் பக்தனை காக்கும்.நாங்கள் ஆஸ்தீகர் பார்பதற்கு முட்டால் போல் புராணம் பேசுபராக தோனும்,யார் இகழ்ந்தாலும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்.பறவை எவ்வளவு உயரம் பரந்தாலும் கடைசியில் ஓய்வுக்கு பூமியை நோக்கி தான் வரவேண்டும்.மாற்றான் மனைவியை இகழ்ந்து பேசுவது தன்னையே கேட்டுக்கொள்வதற்கு சமமே.அன்னாக் டாரா(கண்ணி) பார்பவர்க்கும் கிடைத்ததை வைத்து வாழ்பவர்க்கும் வித்யாசம் இருக்கு.கண்ணிப்பெண் என்றால் எதை குறிக்கிறது தெரியுமா நோக்கு,ஆதலால் தீயில் இரங்கி சாதித்தது சத்திய காலம்.அக்காலத்து மக்களை இழிவது அறியாமை என்றே கருதி விட்டுவிடுவோமாக,குருகிய புத்தி என்றே கருதுவோம்.அறியாமையை கண்டு புண்ணகை செய்வோம்.அவர் விதியை நோக்கி செல்வதை அறிந்து.அசுரனை ஆடவிட்டு பண்ணகைத்து பார்பார் கொஞ்சம் நேரம் ஆடவிட்டு அவர் கதையை முடிப்பார்.நாராயண நாராயண.
உழவன் உங்களை போல பல பட்சை தமிழர்கள் இன்னும் கனவு உலகத்தில் தான் வாழ்கின்றிர்கள் . நிஜத்துக்கு வாருங்கள் . உங்களுக்கு சீனர்களின் வரலாறு தெரியுமா? நீங்கள் கால் வைக்கும் முன்னே அவர்கள் தடம் இருக்கும் . இங்கே நமக்குள் வாதம் நடப்பதால் தான் அடுத்த மதத்து காரன் கூட நமக்கு நாட்டமை பண்ண வந்து விட்டான். முதலில் நீங்கள் வணங்கும் தெய்வம் யார் ? அவரை எப்படி வணக்குவது .அந்த தெய்வத்தின் புராணம் என்ன ? என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் எட்டாம் அறிவு நிகழ்ச்சியை பார்த்து இங்கே தர்க்கம் செய்ய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . முதலில் தமிழ் பெயர்கள் எது என்பதை தெரிந்துகொள்ளவும் . தமிழில் ஆயிரம் புராணம் இருக்கலாம் அதை யார் யாரோ தமிழ் படுத்தி வராலாறை மாற்றினால் உண்மையாகாது . அன்று தொட்டு இன்று வரை பகவத் கிதையை கை வைத்து உண்மை சொல்ல சொல்கிறார்களே தவிர திருக்குறள் மீதோ இல்லை சிலபதிகரத்தின் மீதோ அல்ல . விட்டால் பத்மநாத கோவில் தமிழர்களக்கு சொந்தம் . மைசூர் அரண்மனை தமிழர்களுக்கு சொந்தம் அங்கோர்வாட் தமிழர்களுக்கு சொந்தம்,சிங்கபூரை கண்டு பிடித்ததும் நாங்கள் தான் என்று சொன்னாலும் சொல்விர்கள் . இந்தியாவின் ஆதி நாணயத்தில் எந்த மொழி இருந்தது என்று பாருங்கள் . என்னை பொறுத்தவரை எனக்கு நான் வணங்கும் பெருமாளும் அந்த ஜடாமுடியும் ஒரே சக்தி படைத்தவர்கள் என்றே சொல்வேன் . கடவுளை நிந்தித்து பிரமகத்தி தோஷம் பெற எனக்கு விருப்பம் இல்லை . கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் மதம் மாறினாலும் அவன் கர்மாவை அவன் தான் சுமக்கவேண்டும் . சிவனுக்கு முன் பின் ஹிந்துக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் (கூகுளே) . சமஸ்க்ருதம் ஒரு பொக்கிஷம் அதை அறிஜணன் கூட படிக்கலாம் தமிழ் நாட்டில் இயற்க்கை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சமஸ்க்ருதத்தில் தான் அந்த மருத்துவத்தை படிக்கின்றனர் . அவர்கள் சிரத்தை எடுத்து படிக்கின்றனர் . கடவுள் ஒருவரே அவருக்கு தெரியும் யாரை யாருக்கு பிறக்கவைக்க வேண்டும் என்று அப்படி பிறந்த பின் தான் எப்படி வாழ்வது , யாரிடம் உபதேசம் பெறுவது என்று தெரியாமல்
ஏனோ தானோ என்று வாழ்கின்றனர் மத பிதா குரு தெய்வம் என்பதின் அர்த்தம் கூட இன்று மாறிக்கொண்டு வருகிறது . குழந்தையும் தெய்வமும் ஒன்றா என்று வேறு மதத்துக்காரன் கேள்வி கேட்கிறான் . அவனுக்கு குழந்தைக்கும் பிள்ளைக்கும்
உள்ள வயசு வித்யாசம் கூட தெரியவில்லை .
( பிள்ளைகள் நிறைய குறும்புகள் செய்வதால் அவர்களை பிசாசு என்கிறான் .
நம்மிடம் தெளிவு இல்லை என்றல் நம் பழமொழியை வைத்து நம் கண்ணை குத்த பார்க்கின்றான் . குத்து விளக்ககின் பயன் பாடு கூட தெரியாத சில ஜடங்கள் பத்திரிக்கை அறிக்கையில் இறந்த ஒருவரின் படத்திற்கு இரு புறத்திலும் குத்து விளக்கு வைத்தது போல அறிக்கை வெளியிடுகின்றனர் . இது தான் தமிழ் சமயமா ?? முதலில் அமங்கலதுக்கு குத்துவிளக்கை உபயோகிக்க மாட்டார்கள் . பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்காமல் இன்னும் பத்து வருடத்தில் சீனர்களை விட முனேறிய சமுதாயமாக வாழ முயற்சி செய்வோம் .
kaayee நீங்கள் சொன்ன கருத்தில் ஒரு திருத்தம் . காளியை தேவியை ( பார்வதி ) அடைய அஷுரன் சிவன் உருவில் வந்ததால் அமையார் அவனை காலால் மிதித்து துவம்சம் செய்தார் . காளியின் காலடியில் இருப்பது சிவன் உருவில் உள்ள அஷுரன் .
அப்படியே ஆகட்டும்.அரக்கரை வீழ்திய கெகன் மாதாவுக்கு ஜெய்.யாம் கருதினோம் தென்திசையில் ஜடமாகிய ஜீவனற்ற ஜடத்தின் பிணத்திலிருந்து ஜீவன் வெளிபாட்டை வடக்கு நோக்கி கிளம்புவதாக புரிந்துகொண்டோம் சிவ புராணத்தில் குறிப்பிட்டது போல மணிதனுக்கு பின் பேயாய்,கணங்கலாய்,அசுரராய் முனிவராய்,தேவராய் அது போல் காளியாக ரூபம் தோற்றமோ என்று மயங்கிவிட்டோம் நாம் மங்கையே.வாழ்க நாராயண நாமம்.
மக்காய் , எந்த சாமியை எப்படி கும்பிடுவது என்று சொன்னவன் யார் மனிதன் தானே , மற்றவன் சொல்வதை
கேட்டு அப்படியே நடப்பவன் மதத்தை பின் பற்று கிறவன்
ஆங்கிலத்தில் ( foolowers ) என்று கூறுவார்கள் சமஸ்கிரதத்தில்
ஆஸ்திகன் .எதை கேட்டாலும் அதில் உண்மை கண்டு அறிவுக்கு வேலைகொடுத்து பொய்யை பரப்பும்
ஆஸ்திகனுக்கு எதிர்ப்பு கொடுப்பவன் நாஸ்திகன் ஆதாவது
நாளும் தெரிந்தவன் . எந்த சாமியாவது உன்னிடம் கூரியதா என்னை கும்பிடு என்று பூசாரிகள் உண்டியல் காசுக்காக்
சாமியை கும்பிட சொல்கிறார்கள் , நான் இறந்த பிறகு என் கர்மத்தை நானே சுமப்பேன் என்று கூறும் நைனா ,ஒன்றை மற்றும் புரிந்து கொள் நீ இவ்வுலகில் கஷ்டப்பட்டு உன்னையே உருக்கி வணகுவது எதனால் நீ இறந்த
பிறகு சொர்க்கம் போய் சேரத்தானே ,அங்கே ஊர்வசியும்
ரம்பையும் ஆடும் நடனகளை கண்டுகளிக்க தானே . இலாத சொர்கத்தை யார் கண்டார் ,அல்லது இறந்து சொர்கத்திற்கு போயிட்டு வந்த எவனாவது உன்னிடம் சொன்னான .முடி வெட்ட காசு இல்லாமல் இருக்கும் சடாமுடியும் ,காலை தொக்கி நடனம் ஆடும் பெருமாளும் இந்த சாமூதயதிர் க்கு என்ன செய்தார்கள் ,மக்காய் உன் தாய் தந்தையை விடவா ,நைனா இப்போதாவது உன்னை பெற்றவர்களை நினை ,சொர்க்கம் நரகம் என்று ஒன்றுமே இல்லை பயம் வேண்டாம் , நீ பயந்து பயந்து அன்றாடம் செத்து மடிவதை விட ஒரு தூக்கு கயிற்றில் தொங்குவதே மேல்.
இங்கே காய், மங்கை, தமிழ் பித்தர் போன்றோருக்கு தனித்தனியாகவே பதில் கருத்து எழுத வேண்டியுள்ளது. உழவரின் கவிதையை ஒட்டி அதற்கும் தனியே கருத்து எழுத விரும்புகின்றோம். தொடரும்.
காயின் சமய அறிவு நீரின் மேல் தங்கி இருக்கும் எண்ணையைப் போன்றதே. நிலையற்றது. ஆழமற்றது. அதனாலே, பிறரை, பிற சமயத்தாரை, அவர்களின் நிலைத்தன்மையை அறிந்து ஏற்றுக் கொள்ள இயலாமல் வாய்க்கு வந்தபடி தூற்றுகின்றார். பிறரும் அவ்வாறு செய்தால் விதண்டாவாதக்காரன், குரங்கு என்றெல்லாம் கூறி மரத்துக்கு மரம் தாவுகின்றார். தானே உயர்குலத்தானும், தமிழர் தாழ்குலத்தானும் என்று கருத்துரைக்கும் இந்த அறிவிலியை திருத்த முடியாது. ஏதோ தனக்கு இருக்கும் கொஞ்ச தமிழ் அறிவை வைத்துக் கொண்டு இங்கே வந்து எல்லாம் கற்றறிந்த ஞானிப் போல் காட்டிக் கொள்வதில் பயனில்லை. இந்த காய், தானென்ற அங்கங்காரமும், ஆணவமும் பிடித்த பிராமணருக்கு எடுத்துக் காட்டு. இவர் சொல்லும் வேதமும் வேதாந்தம் தமிழன் போற்ற வேண்டியதும் இல்லை, பின் பற்ற வேண்டியதும் இல்லை. காரணம் அது தமிழர் சமயம் அல்லவே!. தன்னை இகல்வானின் சமயத்தை ஒரு தமிழன் பின்பற்றிச் செல்வானால், உழவர் சொன்னது போல்
“ஆரிய மாயையில் முடங்கிக் கிடக்கும் நீ
உடைத்தெரிந்து விட்டு வெளியில் வந்து பார்”
என்றே சொல்லவேண்டும். அந்த வேத, வேதாந்த பண்பாட்டிலிருந்து தமிழர் விலகி, தமிழரின் சமயத்தில் தனித்து நிற்க முடியும். இதை தடுத்து நிறுத்த எந்த ஆரியக் கொம்பனுக்கும் அருகதை இல்லை. சமய அடிமைகளாக ஆரியனுக்கு வெண்சாமரம் வீசிய காலம் 20-ம் நூற்றாண்டோடு முடிந்து விட்டது. வஞ்சக உணர்வு உடைய பிராமணரால் தமிழர் சமயம் மறைக்கப் பட்டது. மறக்கடிக்கப் பட்டது. 21-ம் நோர்றாண்டு தமிழர்கள் அவர்தம் சமய நெறிகளை மீட்டெடுக்கும் காலம் துவங்கி விட்டது. அதன் முன்னோடியே தமிழ் நாட்டிலும், மலேசியாவிலும் தமிழர் காணும் சமய உரு மாற்றம். சிவநெறியும், சைவ சித்தாந்தமும் அதன் தனித்தன்மையை நிலை நிறுத்தும் காலம் வந்து விட்டது. வேதம் பொது என்றும், சைவ ஆகமம் சிறப்பு என்றும் கூறும் நிலை தேவையற்றது. வேதத்தில் அவர்களுக்கு சைவ ஆகமங்கள் கூறும் இறைநெறி இல்லை என்பதால் இதனை அங்கே எடுத்துக் கொண்டு போய் வைத்துக் கொண்டு தமிழரை அடிமடையாராக்கியது போதும். சைவ ஆகமங்கள் இல்லாது வேதம் தனது வேள்விக் கலாச்சாரத்தை மட்டுமே கொண்டு, தமிழர் சமய பண்பாடாகிய திருமேனி வழிபாடும், திருக்கோவில் வழிபாடும் செய்ய இயலாது. காரணம் வேதத்தில் இதற்க்கு நெறிமுறை வகுக்கப் படவில்லை. ஆகையால், சைவ தனித்து இயங்கவல்லது. அதுவே தமிழருக்கு சமய வழிகாட்டும் நெறியும் ஆகும். காய் போன்றோர், தமிழர்கள் அவர்தம் சமயத்தை நிலை நிறுத்துவதை தடுப்பதிலோ, அவதூறு சொல்வதிலோ, அட்டகாசமாக நிந்திப்பதைப் பற்றியோ நாங்கள் கவலைக் கொள்ளப் போவதும் இல்லை. அதனை ஒரு பொருட்டாக நினைக்கப் போவதும் இல்லை. எங்களின் சமய நெறி சரியான நெறி என்பதனை அறிந்து அதில் நிற்பதால் உமக்கும் ஏதும் நட்டமோ? இல்லை என்றால் நடையைக் கட்டு.
மங்கையை போன்ற அறிவார்ந்த பிராமண வம்சாவளி மக்களும் நிறையவே இருகின்றனர். சமயத்தை அறிந்து, கலை கலாச்சாரத்தை பேணிக் காப்பதும் வரவேற்கத் தக்கதே. இறை வழிபாட்டை பொருள் அறிந்து வீட்டுக் கிரியைகளையும், ஆலயக் கிரியைகளையும் செவ்வனே செய்வதும் சிறப்புக்குரியது. இருந்தும் அவரும் மேல்குலத்தோர், தாழ்குலத்தோர் என்ற வருணாசிரம அடிப்படையில் தமிழர்களைக் காண்பதும், கணக்கிடுவதும் கண்டனத்துக்குரியது. தாங்கள் மந்திரலாயத்தில் இருந்தீர்கள் என்பதனால் தங்களின் பரம்பரை வழியை தாங்கள் சொல்லி நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை. மொழியால் வேறொருவராக இருந்துக் கொண்டு தான் கற்ற தமிழைக் கொண்டு தமிழரின் கர்ப்பையே சூரையாடுவதர்க்குச் சமம் தாங்கள் செய்யும் தமிழர் நிந்தனை. வேண்டாம். ஒரு பெண்மணியாக இருந்துக் கொண்டு பொது விடத்தில் கருத்து எழுதும் போது வார்த்தைகளை சரியான முறையில் உபயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள். தமிழர்களை ஒட்டு மொத்தமாக நிந்தித்து எழுத வேண்டாம். தங்களுக்கு இருக்கும் சமய அறிவைப் போல எங்களில் சமயத்தைக் கற்றோருக்கும் உண்டு. தாங்கள் வேதத்தையும், வேதாந்தத்தையும் உயர்த்திப் பிடிப்பது போல், தமிழர்கள் சைவ ஆகமங்களையும், திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் போற்றி வழிபடுவது எங்கள் சமய ஈடுபாடு. இதனை பொய் என்று உரைக்கவோ, குறை கூறவோ உங்கள் பாட்டன் முப்பாட்டனுக்கும் தகுதி இல்லை. தங்களுக்கும் அந்த தகுதி இல்லை. நீங்கள் உங்கள் வேத நெறியில் செல்லுங்கள். நாங்கள் எங்கள் சைவ ஆகம வழியில் நிற்கின்றோம். யாருக்கும் பிரச்சனை ஏதும் வராது. அதை விடுத்து எங்களை அவமதிப்போர் வீட்டு வாசலில் வந்து நின்று ஏவல் செய்வோம் என்று கனவு காணாதீர். காலம் மாறி விட்டது. காட்சியும் மாறியே ஆக வேண்டும். இல்லையேல் வலுகட்டாயமாக மாற்றப் படும். யார்-யார் எதை வைத்து தனது உண்மையை உரைப்பது என்பது அவரவர் உரிமை. அதை பகவத்கீதை வைத்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. அதனை திருக்குறள் மீது தன் கையை வைத்து சத்தியம் செய்ய எந்த தமிழர் நீதிமன்றமும் தடுக்க இயலாது. இந்நாட்டில் அத்தகைய பண்பாடு இல்லை. இருந்தால் அதனை மாற்றி அமைக்க எங்களுக்கு வெகு நேரம் பிடிக்காது. சமயத்தை அறிந்த அளவுக்கு சட்டத்தையும் அறிந்து வைத்திருக்கின்றோம். எந்த பிராமணருடன் சம அளவில் நிற்க உட்கார எமக்கும் தகுதி உள்ளது. அறிவீராக.
தமிழ் பித்தரே, எந்த ஒரு சமயமும் தன்னகத்தே அந்த சமயத்திற்கான தத்துவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அது இறை தத்துவத்திலிருந்து உயிர், உலக தத்துவங்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டும். அவ்வாருடையதே முறையான சமயமாகும். அவ்வாறு தத்துவத் துறையைச் சார்ந்து இராத சமயங்கள் தானே வலுவிழந்து தடம் தெரியாமல் போய் விடும். இந்தியாவில் தோன்றிய சமய தத்துவங்கள் பல. வடக்கே ஆரியரால் தோற்றுவிக்கப் பட்டது வேதாந்தம் எனும் சமய தத்துவம். தென் இந்தியாவில் வாழ்ந்த தமிழர்களுக்கு இறைவன் சிவபெருமானால் அருளப்பட்டதுதான் சைவ ஆகமங்கள். அதனை அடிப்படையாக கொண்டு வகுக்கப் பட்டதுதான் சைவ சித்தாந்தம். வேதாந்தம் “பிரம்மம்” (இறைவன்) ஒன்றே உள் பொருள் மற்றவை எல்லாம் மாயை என்ற தத்துவ நியதியை வகுத்தது.பிரம்மத்தை மாயை எனும் மற்றொரு பொருள் மறைத்ததால் உயிர்கள், உலகம் தோன்றிற்று என்ற தத்துவத்தையும் மேலும் வகுத்தது வேந்தாந்திகள். தென்னாட்டில் வாழ்ந்த தமிழ் ஞானிகள் மேற்கூறிய வேதாந்த தத்துவம் பிழை என்று நிருவினர். பிரம்மம் ஒன்றே உள் பொருள் என்றால் “மாயை” எனும் மற்றொரு பொருள் எங்கிருந்து வந்தது என்று கேள்விக் கேட்டு முதல் கூறிய தத்துவம் பிழையென்று நிறுவினர். அடுத்து பேராற்றல் உடைய பிரம்மத்தை ஏன் மாயை எனும் பொருள் மறைக்க வேண்டும்?. அப்படியானால் மாயை எனும் பொருள் பிரம்மத்தை விட வலிமையானாதாக இருக்க முடியுமா என்று வினவினர் சித்தாந்திகள்?. பிரம்மத்தில் இருந்து சீவ ஆன்மா தோன்றியது என்றால் அந்த சீவ ஆன்மாவிற்கும் பிரம்மத்தைப் போன்றே பண்புகள் இருந்திருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு சீவ ஆன்மாவும் வெவ்வேறு பண்புகளை கொண்டிருக்கின்றன அல்லவா அது எப்படி என்று சித்தாந்திகள் வேதந்திகளிடம் வினவியதால், அதற்கு பதில் அளிக்க இயலாத வேதாந்திகள் அது சொல்லவொணாதது (அநீர்வஷினியம்) என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த வேதாந்தத்தின் தத்துவத்திற்கு சரியான பதிலை அளித்தது தென்னாட்டு தமிழர்களின் சைவ சித்தாந்தமே. தொடரும்.
தமிழ் பித்தரே, சைவ ஆகமங்கள் வகுத்த தத்துவம். பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (உலகியல்) அனைத்தும் உள் பொருள். என்று இறைவனோ அன்றே மற்றிரண்டும் அநாதிப் பொருளாகவே (தோற்றம் அழிவு அற்றது) இருந்தன என்று சித்தாந்திகள் சைவ சித்தாந்தத்தை நிறுவினர். இதனை விளக்கி கூறும் நூல்களே 14 மெய்கண்ட சாத்திரங்கள் ஆகும். இவை தமிழர்களின் சமயமாகிய சைவ சமயத்தின் இறை தத்துவ அல்லது கோட்பாடு நூல்களாகும். இத்தத்துவமானது வேதாந்திர்க்கு எதிர்ப்பாகவும், முரணாகவும் இருந்ததினால் வேத கலாச்சாரத்தில் இருந்தவர்கள் இச் சைவ சமயத்தை வேரறுக்க எண்ணி சிவநெறியை படிப்படியாக தென் இந்தியாவில் இருந்து மறைத்தனர். வேதத்தையும், வேதாந்தத்தையும் பாலூட்டி, சீராட்டி வளர்த்திட தமிழரையே பகடைக் காயாக பயன்படுத்தினர். இவ்வாறன தமிழரின் சமய நெறியை தமிழர்கள் யாரும் கற்றறிவது கிடையாது. காரணம் இந்த சமய தத்துவங்களை கற்றுத் தருவதற்கும் இந்நாட்டில் போதிய சமய ஆசிரியர்கள் இல்லை. இதனை கற்றறிந்த ஒரு சில தமிழர்களும், இதனை தமிழரில் உயர் சாதியினர் எனப்படுவோரே கற்க வேண்டும் மற்றவர் கற்கக் கூடாது அல்லது தமிழரில் தாழ்ந்தோர் எனப்படுவோருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று தங்களுக்குள்ளாகவே ஒரு நியதியை வைத்துக் கொண்டனர். இது பெரும்பாலும் கோலாலம்பூர் வட்டாரத்தில் நடந்தது. ஆக தமிழன் தன சமயத்தை மறந்தான் ஏமாந்தான், பார்பனர் காலடியில் கவிழ்ந்து நின்றான். இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்பொழுது தமிழருக்கு பகையானவர்களுக்கு கசக்கின்றது. எங்கே தமது சமய தலமைத்துவத்திர்க்கே கேடு வந்து விடுமோ என்று அஞ்சி நடுங்கி நம் தமிழர்களை மீண்டும் மூளை சலவை செய்ய இச்செம்பருத்திக்குள் புகுந்து வேலை செய்கின்றனர். தொடரும்.
தமிழ் பித்தரே, மேற்கூறியது போல் நமது இறை தத்துவங்களை உணர்ந்து இறைவனை அன்பால் உருகி உணர்ந்தாலே அவன் உம்மனதிர்க்குள் தானே வந்து புகுவான். உம்மை தாய் தந்தையருக்கு நல்மகனாக வழிநடத்துவான். நம்புக. நமது வழிபாட்டு கிரியைகள் இறைவன்பால் நமது பக்தியை சரியான முறையில் கொண்டு செல்லவே வந்தன. ஆனால் அவற்றில் ஆரியரின் வேள்விக் கலாச்சாரம் உட்புகுந்து செங்கோல் செய்யும் பொழுது, திருமூலர் திருநாவுக்கரசர் போன்றோர் கூறிய நீர், மலர் பச்சிலைக் கொண்டு செய்யும் தமிழரின் எளிமையான வழிபாடு நீங்கி அதிக செலவினங்களைக் கொண்டு செய்யும் வேள்வி வழிபாடே இன்று நம் ஆலயங்களில் வேரூன்றி நிற்கின்றது. இதற்கு சப்பைக் கட்டும் தந்திரமாக நம்மை வயப்படுத்தி வைத்திருப்பவர்களே ஆலய அர்ச்சகர்கள். அதற்கு உறுதுணை புரிவது நமது புராணங்கள். நற்பண்புகளை வளர்த்திட எழுதிய புராணங்கள் நம்மை நாறடித்து விட்டன. ஒருவரின் சமய கடவுளரை போற்றி மேம்படுத்திக் காட்டவும், மற்றவரின் சமயக் கடவுளரை தாழ்திக் காட்டவும் மென்மேலும் பல புராணக் கதைகள் உருவாகித் தரப்பட்டன. இவ்வாறு வந்ததே சிவன் காளியை நடனத்தில் தோற்கடித்தாக ஒரு புராணம் தென்னாட்டில் வந்ததும், அதனை எதிர்க்க இன்றையை கல்காத்தா பகுதியில் வாழ்ந்த சாக்த சமயத்தினர் சிவனை தன் காலால் மிதித்து காளி வெற்றிக் கொண்டதாக மற்றொரு புராணத்தை நிறுவினர். இவ்வாறான புரனங்கள் உமக்குத் தேவையா தமிழ் பித்தரே. புராணத்தை விட்டுத் தள்ளுங்கள். இறைவனை உணர்வால் உணர்ந்துக் கொண்டு அவன் திருவடிபேற்றை பெற முயலுங்கள். அதுவே உமது பிறப்பின் வெற்றி.
தமிழ் பித்தரே, புராணத்தில் இருந்து நாம் நீங்க வேண்டும் என்பதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் கூறிய ஒரு கதையை தங்களுக்கு சமர்பிக்கிறேன்.
“கட்டுத்தறியிலே ஓர் கன்றுக் குட்டி கட்டப்பட்டிருக்கின்றது. அது வெளியே போவதற்காகக் கட்டு அவிழ்த்து விடப்படுகின்றது. என்றாலும், அந்தக் கன்றுகுட்டி அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை; காரணம், தான் இன்னும் கட்டப்பட்டு இருப்பதாகவே கன்றுகுட்டி நினைக்கின்றது. அந்த நிலையில் அதன் கட்டை அவித்து விட்டவன், தன்னுடைய கரத்தால் அதனை தட்டியோட்டி வெளியிற் போகும்படி செய்கின்றான்.”
— சிலந்தியும், சிவனும்”
அதுபோலவே புராணப்பிடியில் சிக்கிண்டு கிடக்கும் நம் தமிழர்களை நாம் விடுவிக்க முயல்கின்றோம். அதற்கே இந்த 2-ம் உலகளாவிய சைவ சமய மாநாடு. வாருங்கள். வந்து கேளுங்கள். உணர்வீர்கள்.
தேனீ உங்கள் கட்டுரை சிறப்பாக இருந்தது வரவேற்கிறேன் ,ஆனால் நான் சைவ மதமும் தேவையில்ல ஆரியர்களின்
சூழ்ச்சி மதமும் தேவை இல்லை ,சுருங்க சொன்னால் மனிதனுக்கு மதமே தேவையில்லை ,நான் சிறுவனாக இருக்கும் போது கடையில் வாங்கிய முட்டையை சப்பி கொண்டு இருந்த போது திடீரென்று வாயில் இருந்த மிட்டாய் கீழே மண்ணில் விழுந்தது உடனே விழுந்த அந்த
மிட்டாயை என் பணியனால் துடைத்துக்கொண்டு இருந்த போது என் தந்தை அந்த மிட்டாயை பிடுங்கி வீசி எறிந்தார் , அப்பா அந்த மிட்டாய் நல்ல சுவையாக இனிப்பாக இருக்கிறது என்று நான் கூறினேன் ,சுவையான மிட்டாயில் அசிங்கமான மண் பட்டுவிட்டது ,நீ என்ன தான் துடை த்தாலும் மண் போகாது கழுவினால் முட்டாய் கரைந்து விடும் , உனக்கு மிட்டாய் வேணும் என்றால் கடையில் போய் புதிய மிட்டாய் ஒன்றை வாங்கிக்கொள் என்றார் .அதுபோல நம் தமிழர் சைவ சமயத்தில் ஆரியர்களின் இந்து மதம் கலந்து சமய மதத்தை கெடுத்து வைத்துள்ளது ,இந்து மத கடவுள்களை தமிழர் மதமான சைவ மதத்தில் இருந்து பிரித்து எடுத்தால் அப்புறம் சாமிகளின் சண்டைதான் வரும் .ஒன்றை மற்றும் பிரமான மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ,ஆரிய கூத்தாடியே உன் மதம் இந்த நாட்டில் மட்டும் அல்ல எந்த நாட்டிலும் சரி குறைந்துகொண்டு கொண்டுதான் போகிறது ,அன்றாடம் இந்து மதக்காரர்கள் இஸ்லாம் மதத்திலும் ,கிறிஸ்து மதத்திலும் சேர்ந்த வண்ணம் உள்ளனர் , எவண்டா சொன்னான் பிறப்பால் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று எல்லாம் ஆரியனின் சூழ்ச்சி , ஆமாம் காவடிகளை எடுப்பதுவும் அலகு தமிழன் ,ஏன் பிராமணன் இதை செய்வதில்லை , இதற்கு பதிலை தேனீ இடமிருந்து எதிர்பார்கிறேன் .
காயீ ,மங்கை போன்றோரின் அறிவுக்குப் பொருந்தாத பிதற்றலைவிட தேனியின் வாதம் எவ்வளவோ மேல். தமிழர்களில் 90% ஏன் குழப்பத்திலும் பின்தங்கிப்போவதற்கு முந்துகின்றனர் என்பதும் இங்கு நடத்தும் பேதையரின் வாதங்களே சாட்சிப் பொருளாகின்றது. ஆணவத்திமிரில் எவன் எப்படிப் போனாலும் போகட்டும்.தமிழன் நாயாய் பேயாய் உழைத்து வைத்திருக்கும் கொஞ்சம் பணத்தையும் மத த்தின் பெயரால் மொட்டையடித்து காலாகாலத்திற்கும் அவனை நடுத்தெருவில் விடாமலிருந்தால் சரி. யாரப்பா அங்கே? காசு பிடுங்காத, புராணச் சேற்றிலே தள்ளிவிடாத, அறிவுக்கு பங்கம் விளைவிக்காத, பொன்னான நேரத்தைக் கொள்ளையடிக்காத , பாரம்பரியம் அது இது என்று சொல்லி காலைவாரிவிடாத, அறிவுக்குச் பொருந்தாத ஆனால் உணர்வுக்குப் பொருந்தும் ஓரு பரம்பொருளைத் தயவுசெய்து காட்டி உதவுங்கள்; உயர்த்துங்கள் எங்கள் தமிழ்குடியை!
அருமையானதொரு பழையப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.”நினைப்பதற்கு நேரமில்லை…………..நாலுபுரம் துன்பம் வந்தால் நாத்திகற்கும் கடவுளுண்டு. கடவுளுக்கே துயரம் என்றால், அந்த கடவுளுக்கும் கடவுளுண்டு.” எவ்வளவுதான் நாத்திகம் பேசினாலும், கலைஞர் கருணாநிதி போன்று தோளில் மஞ்சள் துண்டை போடும் காலம் நாத்திகர்களுக்கு வராமல் போகாது. ரத்தக்கண்ணீர் என்கிற ஒரு பழைய படம். எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆரைப் பார்த்து கேட்பார், ‘எங்கடா போயிட்டு வர்றே?’ அதற்கு எஸ்.எஸ்.ஆர்: ஜீவகாருண்ய சங்க கூட்டத்திற்கு போய் வருகிறேன்.’ எம்.ஆர்.ராதா: அப்படீன்னா? எஸ்.எஸ்.ஆர்: உயிர்களைக் கொல்வது பாவம். அதனை மக்களுக்கு விளக்குவதே கூட்டத்தின் நோக்கம். எம்.ஆர்.ராதா: ஏண்டா, மூட்டைப்பூச்சி கடிச்சா என்னடா பண்ணுவே? எஸ்.எஸ்.ஆர். முகத்தில் ஈ ஆடவில்லை.
தமிழ் பித்தரே, இறை நம்பிக்கை என்பது யாரும் வற்புறுத்தி வருவது கிடையாது. அது ஊற்றுக் கண் போன்று, தானே உயிரில் ஒன்றாகி ஊறி வருவது. அவ்வாறு தங்களுக்கும் வரும் வரை காத்திருப்பேன்.
கருப்புச் சட்டை போட்வனெல்லாம் பகுத்தறிவுவாதியா? சிவப்புக் கொடி பிடித்தவனெல்லாம் கம்யூனிஸ்ட்டா? மஞ்சள் துண்டை அணிபவரெல்லாம் நாத்திகவாதி இல்லையா? சிங்கத்தின் கண்டுபிடிப்பு படு பயங்கரமாக உள்ளது. நல்ல ஞானம். நல்ல கண்டுபிடிப்பு. நாத்திகன், பகுத்தறிவாளன் ஆத்திகத்தில் விழ அது என்ன அவ்வளவு பெரிய அறிவுச் சுரங்கமா? எப்போ பிணம் விழும், அதைக் கொத்தித் திண்ணலாம் எனும் கழுகு குணம் ஏன் தான் இந்த ஆத்திகக் கூட்டத்திற்கோ தெரியவில்லை. இந்த உலகத்திலே ஆத்திகர்களாலே நடந்ந அழிவுகளே அதிகம். ஒவ்வொரு மதத்தவனும் அடுத்தவன் மதத்தை அங்கீகரிப்பதில்லை. இவர்களில் யார் ஆத்திகர்? இந்த தமிழர்களில் சிலருக்கு எதற்கெடுத்தாலும் கலைஞர் கருணாநிதி எனும் ஒருவர் கட்டாயம் வேண்டும் குறைசொல்வதற்கு. இல்லையெனில் இவர்களின் தலையே வெடித்துவிடும்!
மீண்டும் மீண்டும் மீன் கதைத்தான் நம் சித்தருக்கு,ஆண்டவன் அருளிய வேதங்களை,சாஸ்திரம்,இதிகாசம், புராணம் இவைகளை சீர்திருத்துவதாக வந்துவிட்டாரையா நம் சித்தர் மக்கள்.யாம் கூறிய இறைவன் அருள் மறையாது,காணாது போகாது.காலங்கள் மாறும் ஆனால் உண்மை மறையாது ஓய்.திருவல்லுவம் கூறுகிரது கல்வி அறிவு இல்லாதவா கீழ் சாதியர் என்றும்,கல்வி கற்றவா மேல் சாதி(உயர்ந்தோர்) என்று பிரித்து உல்லாரே.வேதமும் திருக்குறளும் ஒன்ரே,வேதத்தை குறை கூறுபவா் திருக்குறளை சிருமை படுத்துவதற்கு சமம்.எதை எதையோ பேசுகிறீர் அதில் திருக்குறளையே காணாம்.திருக்குறள் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது ஆதலால் அதையே சில தமிழர் மாற்றவேண்டும் என்று துடிக்கின்றனர்.அதில் அறம் போதிக்கபட்டுள்ளது ஆதலால் ஏற்க முடியவில்லை.அறத்தை கற்றுக்கொண்டு சபைக்கு வாரும்,அறம் தெரிந்தவனின் கருத்தே சபையேறும்.காட்டுகத்து கத்தினால் காதுதான் நோகும்.தேனீ கூரிய கருத்து தனிப்பட்டது அவறுக்கு மாத்திரம் புரிந்தது.ஒரு கற்றவர்க்கு அழகு பிறர்க்கு புரியும்படி விவரிப்பது.அதில் தோல்வி கண்டவரை என்ன சொல்வது,தானே புலம்பிகொண்டிறுப்பது தான் மிஞ்சும் பின் பலர் கூறுவது போல் பாஞ்சாலி கதையும் பித்தரின் மனைவியை சோதித்து பார் போன்ற சமர்பணமே மிஞ்சும்.மெய் கண்ட சாஸ்திரமென்றால் தமிழர் புராணமோ.இவர்களுக்குத் தான் புராணம் என்றால் மூட நம்பிக்கையாயிற்றே.தாய் தந்தை தெய்வமாம்,ஆனால் தெய்வம் என்பது மூடநம்பிக்கை.அப்போது தாய் தந்தையும் மூடநம்பிக்கை.இருந்த போதும் தான் மதிக்கும் பெற்றோரை யாம் மதித்து போற்றும் நாராயணனுக்கு நிகர் மதித்ததிற்கு நன்றியே.அப்போது அவறுக்கு தெய்வத்தின் மீது நன்மதிப்பு இருப்பது வாழ்த்துக்குரியது.மூக்குப்பொடி போதை பித்தர் தமிழனா.தமிழ் சித்தர்கள்,சித்தர்கள் என்றால் போதை பித்தர்களே.சித்தர்களை சுற்றி நிரைய கஞ்ஜா செடி இருக்குமாம்.கஞ்சா இழைகலை சேர்த்து புகைபோட்டு நூகர்ந்து போதையேரிய பின் ஆழ்ந்த தவம்.போதை இறங்கிவிட்டால் மீண்டும் மூட்டம் பின் தவம்.போதை பித்தரையே ஏன் இந்த தமிழ் சித்தர் உதாரணத்திற்கு வைக்கிறார்,.ஒரு புணிதமான ஆலய நிர்வாகத்திலிருந்து விலகி தெருவுக்கு வந்து காட்டுகத்து கத்தினால் அவர் கருத்து சபை ஏறுமா,நிர்வாகத்தில் இருந்துக் கொண்டே தன் கருத்தை கூறியிறுப்பின் ஞாயம் அப்படி தானே மங்கை.இல்லாத ஊருக்கு வழி சொல்வதற்கு சமம்.சில ஜன்மங்ளுக்கு அவர் மொழியில் பதில் சொல்லவேண்டியிறுக்கு,அதற்காக எல்லா தமிழரையும் கொச்சை படுத்துவதாக அர்தம் அல்ல.குரு ஒருவர் யோகா மூலம் கோடி கோடியை சம்பாரிக்கிறார் என்று புகார்,அது பணம் இருப்பவர் தகுதி பெற்றுக்கொள்கிறார் ஆனால் ஈபோர் தமிழ் பள்ளியில் வருமை கோட்டில் வாழும் மாணவரிடம் பணம் கேட்டு வியாபாரம் செய்கின்றனர் பெ.ஆ.சங்கமும்,பள்ளி நிர்வாகமும் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.ஒரு நீல நிற டாக்சியில் டிக்கிவரை மாணவர்களை நிரைத்து சவாரி செய்வதை கண்டு அதிர்ச்சி நமக்கு.எப்பிங்காம் தமிழ்பள்ளிவேன் பிறண்டு மாணவர்கள் நிலை ஈபோர் தமிழ்பள்ளிக்கு வெகு தூரமில்லையோ.தமிழ் என்ற பெயரில் நடத்தபடும் எல்லா சங்தியிலும் அராஜகமே.அறம் செய்ய விரும்பு.அறம் செய்ய சொல்லவில்லை ஆனால் அறம் செய்ய விரும்பகேட்கின்றனர்,செய்வோமாக.வாழ்க நாராயண நாமம்.
காவடி என்பது காவு + அடி என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்ப்பு. பண்டைய நாளில் தமிழர்களின் மரபில் ஒன்று, தான் வணங்கும் தெய்வத்திற்கு பயிரிடும் விளைச்சலில் இருந்து ஆலயத்திற்கும் தெய்வ வழிபாட்டுக்கும் தேவைப் படும் தானியங்களையும், பழ வகைகளையும் காணிக்கையாக கொண்டு சென்று தானமாக வழங்குவது நமது பண்பாடாக இருந்து வந்தது. இதனை நீண்ட தூரம் சுமந்து செல்வது சிரமம் என்பதனால் ஒரு கோலின் இரு நுனிப்பகுதியிலும் தொங்க விட்டு சுமந்து செல்வார்கள். இதுவே காவடி என்பதின் அர்த்தம். பின்னர், அவர்தம் தெய்வத்திற்கு நேர்த்திக்கடனை (வேண்டிக் கொண்டதற்கினங்க) காணிக்கை செலுத்தும் முறையாக மாறியது. இது முதன் முதலில் சிவ வழிப்பாட்டில் இருந்த வழக்கம். பின்னர் முருக வழிபாட்டிற்கும் சென்றது. இன்று எந்த தெய்வத்திற்கு காவடி எடுக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இல்லாமல் எல்லா தெய்வத்திற்கும் காவடி எடுக்கும் முறை வந்து விட்டது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை. இன்றோ, எதற்கு காவடி எடுக்கின்றோம் என்ற ஒரு காரணமும் இல்லாமல் ஆட்டக் காவடி, அலங்கார காவடி, வண்ண விளக்கு காவடி, அலகுக் காவடி, அசிங்க காவடி என்று விவஸ்தைக் கெட்டத் தனமாகி போய் விட்டது. இதற்கு ஆலய நிர்வாகங்களும் வக்காலத்து வாங்கி வளர்த்து விட்டனர். இவ்வாறு காவடி எடுக்கும் வழக்கத்தில் எவ்வொரு பக்தியும் கிடையாது. இது ஒரு வெளிப்புறக் காட்சியே அன்றி இறையன்பு கொண்டு செய்வது கிடையாது. இங்கே காவடி எடுப்பது என்ற கிரியைக்கு மட்டும் மனம் செல்கின்றதே ஒழிய இறைவனை நினைபதர்க்கு மனம் நாடுவது இல்லை. இறை அன்பு என்று சொல்லிக் கொண்டு எதனை இறைவனோ அல்லது அவர்தம் சமய நெறிகள் புறக்கனிக்கின்றதோ அதனையே செய்வேன் என்று அடம் பிடிக்கும் நம்மவர்களை என்னவென்பது!
ஐயா தமிழன் அவர்களே! யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என் அறிவுக்கு எட்டிய கருத்தையே வெளிப் படுத்தினேன். தவறாயின் பொறுத்தருள்க.
இவ்வாறான தத்தம் தெய்வத்திற்கு நேர்த்திக்கடனை செலுத்தும் தமிழரின் மரபு திசை மாறிப் போனாலும் அது நமக்கே உரிய மரபு வழிப்பாடு. இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இன்று நெறிமுறைத் தவறி செய்யப்படும் காவடி ஆட்டம் கேலிக்கூத்தானது என்பதில் தவறேதும் இல்லை. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதும் ஆகும். இவ்வாறான காவடி எடுக்கும் மரபோ, தெய்வழிப்பாடோ வேள்வி வழிப்பாட்டை தனது கலாச்சாரமாக கொண்டுள்ள பிராமணர்களிடம் இல்லை. அவர்கள் அக வழிப்பாடு முறையில் நிற்பதனால் இவ்வாறான கேலிக்கூத்துக்களை கண்டு நகைப்பதில் ஆச்சரியமில்லை. இவ்வாறான காவடி எடுக்கும் முறைகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. இதில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
THENI மூடுரேயா கொஞ்சம் வெண்ண
7 நாகப்பா சும்மா இருக்க மாட்டியா கண்ணா ,,என்ன விளையாட்டு இது ?
எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடுவோம். ஆனால் இறைவழிபாட்டின் முடிவில் ஒரே சொல்லை சொல்லுவோம்.அது ‘
இறைவா தமிழன் உருப்பட வேண்டும், உயர வேண்டும்’ .என்பது.இந்த சொற்கள் தாரக மந்திரமாக உருவாகி
நம்மை ஒன்றுபடுத்தும்.உருப்பட என்பதன் பொருள் வறுமை இல்லாத,அறியாமை இல்லாத,குடிகாரன் இல்லாத, திருடன் இல்லாத,கொலைகாரன் இல்லாத தமிழினம் உருவாக வேண்டும் என்பது.
singam கடைசியில் நீ ஒரு மிருகம் என்பதை ஒப்புகொண்டதற்கு நன்றி , சிங்கத்திற்கு 5 அறிவு தான் என்பது
யாவரும் அறிந்ததே அதனால் நீ உன் 5 அறிவுக்கு பட்டத்தை எழுதினாய் ,தமிழன் ,தேனீ ஏன் 6 அறிவு உள்ள எல்லோரும்
உன்னை மன்னித்து விட்டார்கள் , நீ காட்டில் மிருகத்தை
பிடித்து உண்ணும் குணம் மனிதனுக்கு கிடையாது ,ஆமாம் சிங்கம் நீ பெண் சிங்கமா இல்லை ஆண் சிங்கமா ?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பர் முன்னோர். குற்றமே கதியென இருப்போரை விட்டு நண்பர்கள், உறவுகள் விலகி ஓடும். அன்பர் சிங்கத்திடம் இருக்கும் பணிவு தெய்வ குணமாகும்.அதற்காக உங்களை மதித்து வணங்குகிறேன். எனது எழுத்தின் மிதமான கடுமைக்காக நானும் இப்போது வருந்துகிறேன். மன்னியும் நண்பரே!
நண்பர் டமில் பித்தன் அவர்களே! சிங்கத்திற்கு ஐந்து அறிவா? அல்லது ஆறு அறிவா என்கிற ஆராய்ச்சி வேண்டாம். நான் கூறும் கருத்துக்கள் பயன் உள்ளதாயின் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஒதுக்கித் தள்ளுங்கள். அதை விடுத்து தனி மனித விமர்சனம் செய்து நேரத்தை வீணடித்துக் கொள்ளாதிர்கள். சிங்கம் ஆணாய் இருந்தால் என்ன பெண்ணாய் இருந்தால் என்ன? ஒரு பழைய பாடல், “சிங்கத்தின் கால்கள் பழுத்துப் பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?”
தண்ணீர்மலை அவர்களே, தமிழன் உருப்பட வேண்டுமாயின், உயர வேண்டுமாயின், தேவைக்கு அதிகமான கோவில்களைக் கட்டிக் கொண்டு, தேவைக்கு அதிகமாக ஆலயக் கிரியைகளுக்கு பணத்தை செலவளிப்பத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்து மிச்சப்படும் பணத்தில் ஒவ்வோறொரு ஆலயமும் ஒரு தமிழ் மாணவரை பல்கலைக்கழகம் வரை படிக்க பண உதவி செய்தால் இந்நாட்டில் நிச்சயமாக தமிழன் உருப்படுவான், முன்னேறுவான். 2,000-க்கும் அதிகமான பதிவு பெற்ற ஆலயங்கள் இந்நாட்டில் உள்ளன.ஒரு வருடத்தில் 2,000 ஏழை மாணவர்கள் பட்டதாரிகளாக ஆவர். செய்வார்களா?. ஆலய நிர்வாகங்கள் செய்யுமா?. அர்ச்சகர்கள் ஒப்புவார்களா? நமக்கு சிந்தனையில் மாற்றம் வேண்டும். .நிச்சயமாக மாற்றம் வேண்டும்.
நிர் தமிழ் பித்தான இல்லை bithana எனக்கு தெரியாது . நாங்கள் சேவிப்பது ஷனதன தர்மத்தை . அதை பற்றி உங்களிடம் சொன்னாலும் புரியாது சமயத்தை வின்ஞான தோடு ஒப்பிட்டு அதை மற்றவர் நாட்டவர் சொந்தம் கொண்டாட எங்களுக்கு விருப்பம் கிடையாது . உமது வயிறு வலிக்கு அடுத்தவர் மருந்து சாப்பிட முடியாது . நிர் தான் சாப்பிட வேண்டும் . எனக்கு மறு ஜென்ம நம்பிக்கை உண்டு . சொர்கமும் நரகமும் நாம் வாழும் இந்த பூமியே தவிரே வேறொன்றும் இல்லை . தூக்கு போட்டு கொண்டு பிரேத ஆத்மாவாக அலைய எனக்கு அசை இல்லை . உங்களை போன்றவர்களுக்கு மாநாடு மிக முக்கியம் சென்று வாருங்கள் . செட்டி நாட்டு உணவையும் உண்டுஉங்கள் .
நடிகவேள் MR ராதா தனக்கே உரிய பாணியில் தெய்வ வழிபாட்டை நக்கல் செய்வதிலும், கிண்டலடிப்பதிலும் பலே கில்லாடி. ஆனால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் சிந்திக்க வேண்டிய விஷயம் இருக்கும். சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் MRR – ன் நகைச்சுவை புரியும்.
மங்கை,கரையான் கஸ்டப்பட்டு வீடு கட்டுமாம்,ஆனால் பாம்போ அதை(கரையானை) தின்று பின் அங்கேயே தங்கிவிடுமாம்.அது போல் தான் இவர்களும்.தமிழ்பள்ளி தமிழ்பள்ளி என்று அதையும் ஒரு வழிப்படுத்திவிட்டனர்.இப்போ செழிப்பா ஆலயங்கள் தெரிந்ததால் அதன் மீது பாம்பு படையெடுக்க கிலம்பிவிட்டது,ஜாக்கிரதை ஆலய நிர்வாகத்துக்கு,புற்று பக்கம் சிரியாநங்கை போன்ற செடிகளை நட்டுவையுங்கள் அல்லது கீரிபில்லையை நடமாட விடுங்கள்.மூட நம்பிக்கை என்பவர்க்கு,இப்போ நாட்டில் எவ்வளவோ வாவாசான் பள்ளிகல் மிக வசதியுடன் அமைக்கபட்டு சிரப்பாக நடத்தபடுகிறது நம் டெக்ஸ் பணமும் வீணாகிறது பயன்படுத்தாமைக்கு,அங்கே எல்லா தாய்மொழியும் போதிக்கபடுகின்றது.இது மூடநம்பிக்கை இல்லையா.தெழுங்கர்க்கு போதுமான பணம் கொடுக்கபட்டுவிட்டது அவர் தம் தாய்மொழி பள்ளிகள் அமைத்து நடத்த,இனி அவர்களின் ஓட்டு முலுமையும் பி.என்,கே.வரும் காலத்தில் மலையாளம்,சமஸ்கிரதம்,ஹிந்தி போன்ற தாய் மொழி பள்ளிகள் அமைய இறைவன் அருள் புரியட்டும்.அன்மையில் நடந்த தேர்தலில் பி,என்,எப்படி ஜெய்தது ஏன்னா பேராக்கி் தெலுங்கர் அதிகம் என்று அறிக.ஒரு தெலுங்கர்க்கு ஆபத்தில் எவர் உதவினாலும் உயிறுள்ளவரை நன்றிகடன் படும் இவர்கள்,தன் இனத்துக்கு மொழிக்கு உயிர் கொடுத்த பி.என்னுக்கு தலை வணங்குவர்.உலக தெலுங்க அமைப்பே நம் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் நன்றி கூறி அடிமைபடும்.ராமர் வம்சமாச்சே,வீரனல்லவா.மங்கை சொல்வதுபோல் ஆன்மீகம் வராவிட்டால் பரவாயில்லை செல்வந்தர்கலாகவாவது சீனர் போல் வரலாமே.எதிலேயா பேர் போட்டிறுக்கீர்,நண்டு,மீன் கதை தான்.விமர்ச்சனம் பகுதியை பார்தால் இவன் இவ்வளவு சம்பாரிக்கிறான்,அவன் அதிகம் சுருட்டுகிறான் இவையே நடமாடும்,குடும்ப அரசியலில் வல்லவர்கள்,பொது அரசியலில் 0 ,அரசியல் சொல்லி வீட்டைவிட்டு வெளியே வந்தால் மீண்டும் வீடு திரும்பும் போது ஏதாவது சுருட்டிக் கொண்டுப்போக வேண்டும்.சமுகம் எப்படி முண்ணேறும்.வீட்டு சொத்து தனி மணித சொத்து வளறும்,தமிழ் பள்ளிக்கு/புகலுக்காக தான் கற்ற தமிழ்பள்ளிக்கு வருகின்றனர் சில முன்னால் மாணவர்கள்,அங்கே நிரைய நாற்காலிகள் முக்காலிகலாக இருந்ததை கண்டு தலைமை ஆசிரியரிடம் சந்திப்பு நடத்தி,நாட்காலிகள் ஸபோன்ஸர் செய்வதாக கூரினர் ஆனால் தலைமைோ நாட்காலிகள் வேண்டாம் பணம் மட்டும் தாரும் என்றது,அதை கேட்டு அதிர்ந்த முன்னால் மாணவர் திட்டத்தை கை விட்டனர்,மறந்தனர்.முன்னால் மாணவர் சந்திக்கும் போது ஏதை பேசுவர்,சிலர் வசதியாக இருப்பர் எதையாவது கற்ற பள்ளிக்கு செய்திட துடிப்பர்,பணம் பணம் என்று பேயாய் அலைந்தால் எப்படி.மற்ற மொழி பள்ளிக்கு நிலம் பட்டாபோட்டு தந்தால் போதும்,மற்றவை சுயமாய் செய்து கொள்வர்.தண்ணுடயது என்று மார்தட்டியது யாவும் பிறர் கைக்கு போய்விட்டது.அறம் தெரியாதோர் ஆன்மீகத்தை பேசகூடாது.வாழ்க நாராயண நாமம்.
நண்பர் தமிழன் அவர்களே! உங்கள் கருத்தில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக நீங்கள் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்திவிடுமோ என்கிற மன உளைச்சலால், மன்னிப்பு கேட்க முயல்கிறீர்கள். இது உங்களது பெருந்தன்மையையே காட்டுகிறது. தொடரட்டும் உங்களது பணி. நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்ல முயலுங்கள்.