-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
சிங்கம் ஆண் சிங்கமா அல்லது பெண் சிங்கமா என்று கேட்தற்கு காரணம் உண்டு , நீர் பெண் ஆண் சிங்கம் என்றால் பிராமணனை போன்று உழைத்து தீனி யை தேடாமல் பெண்
சிங்கம் போன்ற உழைப்பாளியின் (தமிழன் ) வருமானத்தில்
பிழைப்பு நடத்தாது .தமிழனை டமில்என்று எழுதும் உமக்கு 5 அறிவுதான் இருப்பதை ஒப்புகொண்டீர் நன்றி .மக்யாய் நீர் என்ன சொர்கத்திற்கு போயிட்டு வந்த மாதிரியும் மறுபடியும் பிறந்த மாதிர்யும் ஹன்ட புளுகை சொல்லுகிறாய் ,மக்காய் உன்னை போல உள்ள சில சூல்சிகாரர்கள் சூழ்ச்சியால் ஏமாந்து என் தமிழர் சமூதாயம் பணத்தை வாரி உன் போன்ற அயோக்கியங்களுக்கு மற்றவர் உழைப்பில் வாழ நினைக்கும் நயவஞ்சர்களுக்கு வாரி வாரி வழங்கி ஓடாய் போனார்கள் ,நான் தமிழர்களின் எதிர் காலத்தை எண்ணி பார்கிறேன் ,2050 தில் எந்த ஒரு தனம்பிக்கையில்லாமல் வாழமாட்டன் ,அப்போ என்ன செய்ய போகிறாய் மக்காய் .தேனீ அதிகமான ஆலயங்கள் இருந்தால் தானே அதிகமான பூசாரிகள் அதிகமான கோயில் தலைவர்கள் அதிகமான சாங்கியங்களை செய்யும் பிராமணர்கள் வாழமுடியும் ,கோயில்கள் எல்லாவற்றை யும் பள்ளிக்கூடாமாக மாற்றிவிட்டால் ஏமாற்று பேர் வழிகள் எங்கு போவார்கள் நைனா .
கோவில்கள் எல்லாவற்றையும் பள்ளிக் கூடங்களாக மாற்றி விட்டால் நமது சமயம் சுலபமாக அழிந்து விடும். இந்நாட்டிலும் சரி எந்நாட்டிலும் சரி நமது சமயம் அழியாமல் இருப்பதற்குக் காரணமே நமது ஆலயங்கள்தான். அது நமது சமயத்தின் சின்னங்கள். வழிபாட்டு இடங்கள். ஆலயத்தை அழிப்பது நமது தாயை இழிப்பதர்க்கு ஒப்பாகும். வேண்டாம் இந்த வீர விளையாட்டு.
அடியே தேனீ MRR பற்றி பேச உனக்கு உரிமை கிடையாது ,போயி வேலைய பாரு
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
(6.98.1) – திருநாவுக்கரசர்
One of the signs of decline of the Saivites is the fact that a submissive and slave mentality has come to prevail. Under the notion of “Samarasam” they have lost their capacity to struggle against the tides and live only by TRUTH. In order to seek out truth and live in it one has to be brave and adventurous. And this requires the destruction of submissiveness and cowardice. A good model for us in this regard is Appar and his struggles must be retold and his philosophy reanalyzed in order to make Saiva Siddhantha a living force again. In his epoch making hymn “Nam Yaarkkkum Kudiyallom….” he is in fact outlining a new philosophy of human freedom which is quite different from the concept of freedom that is available now in the Western countries. Genuine freedom is not simply a permissiveness to do whatever one wants, neither is it going along with majority opinion. For permissiveness is slavery to passions and the majority can be quite wrong in number of cases. Genuine freedom requires the absolution of personal desires and seeking out TRUTH no matter how problematic and difficult it becomes. Appar also mentions that true human freedom is possible only by being close to and intimate with SHIVA for it is only SHIVA who as the ABSOLUTE BEING is totally free. We human beings become free only to the extend we proximate SHIVA. For Appar understands Siva as “Thaan Yaarkum Kudiyalla Sangkaran” which means Siva is not only totally transcendent but also totally powerful and authoritative. There is no power in the world that can excel him and exceed him, a notion that was also articulated by Thirumular. with the words “Thanakku thane Thalaivanagiya Thatparan”. These notions have been forgotten by the Tamil people and because of which they seem to emphasise submissiveness and mental slavery. We have to realise this fault of our present day Saivite culture and draw up programmes so that we do not continue to create youths who are afraid of seeking out truth and only truth.Our whole education programme must be revamped so that creativity and productive thinking are encouraged. We should discourage repetitiveness and encourage the production of new thoughts, novel ideas no matter how deviant they are from established modes of thought. Only when the mind is free to explore the whole world of ideas unhampered will it understand the enormous dance of Siva and only then they will understand the truths of Saiva Siddhantam.
From: http://mssubashinik.tripod.com/
சில வேளையில் சிலறுக்கு அவரவர் பாணியில் பதில் சொல்ல வேண்டியுள்ளது.நாம் இங்கு நேரம் ஒதுக்கி கருத்து எழுதும்போது வாசகர் பயன் பெற எதையாவது விட்டு செல்லவே முயல்கிறோம்.யாம் கோறுவது அறம்,அறம் தெரிந்த யாரும் தலைகுனிவு செயல்களை செய்ய துணியார்.திருக்குறளை மனனம் செய்தாலே போதும்,கல்வி பயில்பவர்,இழ்வாழ்கை நடத்துமுன் தெரிந்துக்கொள்ள வேண்டியை, ஆன்மீகம்/அரசியல்க்கு வேண்டிய குறள்(அறம்) கற்றாலே போதும்.வாழ்க நாராயண நாமம்.
“யாமார்க்கும் குடியல்லோம்” என்ற மேற்கூறிய பாமாலையில் திருநாவுக்கரசர் இம்மைக்கும் (உடலுக்கும்), மறுமைக்கும் (உயிருக்கும்) வேண்டிய இரண்டு வகையான சுதந்திரத்தை விளக்கினார். மற்றவரோ உடலுக்குரிய சுதந்திரத்தை மட்டுமே பேசினர். ஆனால், தமிழரோ உயிருக்குடைய சுதந்திரத்தையும் கீழ்காணுமாறு ஒப்பு நோக்கினர்.
(1) உலகில் வாழும் பொழுது அரசன், ஆண்டி என்ற உடளவில் பேதம் இல்லாமல் வாழும் சுதந்திர நிலையை வேண்டினார் திருநாவுக்கரசர். சமணத்தை விட்டு நீங்கி சைவத்திற்குத் திரும்பிய திருநாவுக்கரசரை அரசன் ஆணையை மேற்கொண்டு அவரை அழைத்துச் செல்ல வந்த காவலனிடம் யாம் அரசருக்கு அடிமை இல்லை என்று கூறி அன்றே மன்னர் ஆட்சியை மறுத்து மக்களாட்சியை நிலைநிறுத்தினார். இயமனைக் கண்டே அஞ்சோம், எத்துயர் வந்திடினும் அதனை இன்பமாகவே போற்றிடுவோம் என்று சூளுரைத்தார். இதுவே, தமிழர்களிடம் இருக்க வேண்டிய சுதந்திர மனப்பான்மையும், தைரியமுமாகும். சிவனை அன்றி, யாம் யார்க்கும் கை கை கட்டி ஏவல் செய்வோமல்லோம் என்று அன்றே தைரியமாகச் சொன்ன தமிழன் இன்றில்லையே!. அதனால்தான் என்னவோ, இன்று நம்மை சூத்திரன் என்றும், ஈனப் பிறவி என்றும் இளிக்கும் இனத்துக்கு குற்றவேல் செய்யும் தமிழனாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோமே!.
(2) உயிர் வேறு உடல் வேறு என்று உணர்ந்து செயல்பட்டவன் தமிழனே. உடலைப் பிரிந்த உயிருக்கு எவ்வாறு சுதந்திரம் கிட்டும் என்று உணர்ந்து சொல்லி வைத்தனர் தமிழ் ஞானிகள். எங்கும் சுதந்திரமாக, கால தேச கட்டுப்பாட்டிலிருந்து விலகி, எவ்விடமும் வியாபகமாக நிரம்பி நிற்கும் சிவபெருமான் திருவடிப் பேற்றை பெரும் உயிரே, வினைப்பயன் அற்று (பிறவாக் கடல் நீந்தி) அவரோடு சேர்ந்து, அவர் பெரும் பேரின்ப நிலையில் சுதந்திரமாக இயங்கும் என்று உணர்த்திய தமிழனின் வேதமாகிய திருமுறைகளைப் போற்றி வாழ்ந்திடுவோம்.
தேனீ கோயிலை பெற்ற தாயிக்கு ஒப்பிட்டு பேசலாமா பூசாரியில்லை என்றால் உங்களுக்கு மணி அடித்து பூஜை
செய்யவும் பிரசாதம் கொடுக்கவும் யாரும் இருக்க மாட்டார்கள் ,ஆனால் தாய் அப்படியில்லை அவள் பிள்ளை கேட்டகாமலே
பாலை ஊட்டி , அறிவுரைகளை ,நல்லது கேட்டது எல்லாவற்றையும் சொல்லிகொடுத்து தன் பிள்ளையை நல்ல பிள்ளையாக எந்த ஒரு காசையும் எதிர்பாராமல் சேவைசெய்யும் புனித பிறவி ,ஆனால் கோயிலில் காசு
இல்லாவிட்டால் பூசாரி மட்டும் அல்ல சாமியே கண்ணை
மூடிக்கொள்ளும் ,அதோடு அங்கே அரசியல் ,பூசாரிகளின் காமகளியாட்டம் , அங்கே தேவதாசிகள் அதாவது கோயில் தாசிகள் , தாய் அப்படியில்லை தாய் புனிதம் கோயில் அசிங்கம் தெரியுதா தேனீ , ஒ நான் மறந்து விட்டேன் உனக்கு பூக்களை பற்றிதான் தெரியும் என்று .
தேனீ கோயில்களை ஒழித்துவிட்டால் சமயம் மட்டும்
அழியாது கூடவே ,தமிழ் பத்திரிகைகள் செய்திகள் இல்லாமல் இழுத்து மூடவேண்டும் ,.,கும்பாவிசேகம் ,கஞ்சி ஊத்துதல் ,அந்த பூஜை இந்த பூஜை என்று நடக்கும் செய்திகளை மட்டூம் ஏந்திவரும் தமிழ் பத்திரிக்கைகள் செய்தியில்லாமல் வெறும் கோயில் செய்தியை மட்டும்
எழுதிவரும் நிருபர்களை வேலைவிட்டு நீக்க வேண்டி வரும்.
ம. .இ.கா தலைவர்கள் கோயிலின் பெயரால் அரசாங்கத்திடமிருந்து ஆண்டுதோறும் மானியம் வாங்குவது நிறுத்தப்படும் ,கோயில் நிர்வாகத்தினர் குடும்பங்கள் நடுதெருவுக்கு வர நேரிடும் குறிப்பாக கோயில் நடராஜா
தெரு நடராஜாவாக மாறி விடுவார் .கோயில் இருப்பதால் பூசாரிகள் ,வேலைகளை இழந்து தமிழ் நாட்டுக்கு திரும்ப வேண்டும் இவ்வளவு பிரச்சனைகள் நடைபெறும் என்று
எனக்கு தெரியும் ,அதே நேரத்தில் என் சமூதாயம் தன்னம்பிக்கை உள்ள சமூதாயமாக சூல்சிகளுக்கு சிக்ககாமல் ,மூடபலகத்தில் மூழ்காமல் தலை நிமிர்த்து
மற்ற மனிதர்களை போல வாழும் சூழ்நிலை ஏற்படும்
மனிதன் மனிதனாக வாழ மதம் தேவையில்லை என்று
உணர்ந்து மாய உலகை விட்டு விலகி உண்மையான உலகில் வாழ்ந்து எல்லோரும் தங்கள் உழைப்பை நம்பி யாரையும் ஏமாற்றாமல் மனித நேயத்துடன் வாழ்வார்கள் .மதம் மனிதனை பிரிக்கும் மனித நேயம் மனிதனை இணைக்கும் நைனா .
தமிழ் பித்தரே!தாயை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை!
அவர் இல்லாமல் யாரும் பூமியில் அவதரித்திருக்க முடியாது!
-தாய் இல்லாமல் நான் இல்லை
-தானே எவரும் பிறந்ததில்லை
-எனக்கொரு தாய் இருக்கின்றாள்
-என்றும் என்னை காக்கின்றாள்…
ஆனால் நாம் இங்கு எதற்கு பிறந்தோம் என்று தெரியுமா?
இறைவனை அறியவே!
எனவே தாயுடன் நிறுத்திவிடாதீர்கள் தங்கள் தேடலை!
தாய்,தந்தை,குரு,தெய்வம் என்று அனைவரையும் முழுமையாக தெரிந்துகொள்ள
முயற்சி செயுங்கள்!
தம்மை இறைவனுக்கு அடிமை என்றொரு பெயர் வைத்துக் கொண்ட பெண்ணொருவர் கூறிய கருத்து கவனிக்கத் தக்கது. தமிழ் பித்தருக்கு இரவில் கருத்து எழுதாலாம் என்றிருந்தேன். இப்பெண்ணின் கருத்தைக் கண்டவுடன் எம் கருத்தையும் சேர்த்தே எழுத தூண்டியது. ஆலயம் என்பது ஓர் ஆன்மா இறைவனிடம் தன் மனதை இலயத்து (பறிகொடுத்து) அவருடன் மனதளவில் சற்றே சேர்ந்து இருக்க வழி வகுக்கும் இடம். இது ஒரு தலைவன் (கோ) குடியிருக்கும் (இல்) இல்லமாகையால் கோவில் என்று அழைக்கப் பட்டது. ஓர் உயிர் எம்பெருமானின் கருணையால் ஒரு உடலைப் பெற்று இம்மண்ணில் பிறந்ததின் நோக்கமே அவ்வுயிருக்கு ஆணவ மல நீக்கம் பெற்று திருவருளின் துணையுடன் மெய்ப்பொருளான அந்த சிவனையே அடைய வேண்டியதாகும். நான் என்றென்றும் நிலைத்து இருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றேன். அழிந்துப் போகும் உடலை அல்ல. இந்நோக்கத்தை அடைய உதவி புரியும் இடமே ஆலயம். யாம் கூறும் ஆலயமும், பித்தன் குறிப்பிடும் வியாபார ஆலயமும் ஒன்றன்று. தொடரும்.
எவ்வாறு ஒரு நல்ல தாய் தன் குழந்தையை காக்கின்றரோ, அவ்வாறே இறைவன் அந்த தாயையும், குழந்தையும் சேர்த்துக் காக்கின்றார். எவ்வாறு ஒரு நல்ல தாயின் மனம் அன்பினால் வயப்பட்டு தன் குழந்தையை பாலூட்டி, சீராட்டி வளர்கின்ராரோ அவ்வாறே எம்பெருமானும் கருணையின் வடிவாமாகி அத்தாயின் உயிரில் உடனாய் ஒன்றாய் நிற்கின்றார். இருவருமே புனிதத்திர்க்குப் போற்றப்பட வேண்டியவர்கள். இதனை உணர்த்த வந்ததே “தாய், தந்தை, குரு, தெய்வம்” என்ற சொற்றொடர். இந்த சொற்றொடர் ஒரு வாக்கியம் அல்ல. ஒரு வாக்கியத்திற்கு தமிழ் இலக்கனத்தில் இருக்க வேண்டிய முக்கூறுகள் இதில் இல்லை. ஆனால் அந்த சொற்றொடரின் வார்த்தைகளே அதனுள் இருக்கும் பொருளை விளக்கக்கூடியது. தனக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு தந்தை யார் என்பதை அந்த தாய்தான் அறிவிக்க முடியும். அந்த குழந்தைக்கு தந்தை என்பவரே குருவாகி வழிகாட்ட முடியும் அல்லது அத்தந்தை ஒரு குருவினிடம் அக்குழந்தைக்கு ஞான (அறிவு) உபதேசம் (கற்றுக் கொடுக்க) செய்விக்க முடியும். அந்த குருவே, அக்குழந்தைக்கு பரம்பொருளான எம்பெருமான் சிவபெருமானை அடைய வழிகாட்ட முடியும். ஆக, அந்த சொற்றொடரின் இறுதி இலக்கு பரம்பொருளை அடைவதே நோக்கம் கொண்டதாகும். அச்சொற்றொடரை ஏறுமுகமாக நோக்கினால் இது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். இதனையே, இறங்கு முகமாக நோக்கி தாயை அடுத்துதான் இறைவன் என்பது பிழையான கருத்து என்பது அடியேன் கருத்தாகும்.
தேனீ நான் கூறும் கருத்துகள் அனைத்தும் நன்கு சிந்திபவர்க்கு மட்டுமே புரியும் ,நீங்கள் கூறும் கருத்துகள் எல்லாம் ஆதாரம் இல்லா கருத்துக்கள் ,நீங்கள் கண்ணால்
காணாததை மற்றவர்கள் சொன்னதை இங்கே பதிவாக்கம்
செய்கிறீகள் ,நீங்கள் கடவுளின் எஜன்ட் மாதிரி உங்களை
காட்டிகொல்வதால் உங்களுக்கு என்ன லாபம் ,இன்னமும் என் இனத்தை ஆரியர்களின் காலடியில் கிடக்க வைக்க
ஆரிய கூத்தாடிகள் எவ்வளவு லஞ்சத்தை உமக்கு கொடுத்தனர் ,தமிழ் நாட்டு அரசர்கள் ஆரியர்கள் தங்களின்
கோயிலை கட்டிக்கொண்டு அந்த கோயிலுக்கு தலைமை பூசாரியாக இருக்க கைமாறாக அவர்களின் பெண்களை
கொண்டுபோய் அரசர்களின் அந்த புறத்தில் இருந்து அரசர்களுக்கு சோமபானத்தை ஊற்றி கொடுத்து சல்லாபத்தில் இருக்க செய்தான் அது போல ஆரியன்
உங்களுக்கு …..
தமிழ் பித்தரே, இன்னும் உம் இனத்தை எந்த ஆரியன் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றான்?. ஏன் உம் இனத்துக்கு அறிவில்லையா?. எவனும் வந்து நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கவில்லை. நம் அர்சகர்களே நம் இனத்தவர்களை இந்நாட்டில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். நம் இன ஆலய நிர்வாகமே நம் இனத்தை சூறையாடுகின்றது. மலையைப் பார்த்து நாய் குறைத்தால் நாய்க்குத்தான் கேடு என்பார்கள். அதைப்போல தேவை இல்லாமல் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு நாமே திருந்தாமல் வாழ்வதால் பயன் ஒன்றுமில்லை. நல்ல முறையில் சொல்லிப் பார்த்தேன். விளங்கவில்லை. கொஞ்சம் வெறித்தனமாக சொல்லிப் பார்ப்போம் என்றே உண்மையை உள்ளவாறு உரைத்தேன்.
அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்த சாண்ரோறின் அடியோற்றி நடப்பவர்கேயன்றி மற்றவர்களுக்கு பிற துன்பக்கடல்களை கடப்பது என்பது எளிதான காரியமல்ல.அந்தணர் என்பது ப்ராமணர் என்று அறிக.பெண்களை கேவலபடுத்தும் சிலரை விமர்சிக்க விரும்பவில்லை காரணம் அது அவர் கர்மாவை காட்டுகிறது.அவர்,அவர் குடும்ப பெண்களை அறிமுகம் செய்கிறார் என்பதே வுண்மை.யோசியுங்கள் ஹிந்துவுக்கு துரோகம் செய்தவர்களை,இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வந்தது முதல் இன்று வரை யார் யார் என்று அதை விடுத்து கடவுளை பற்றி விமர்சிக்க,அறம் தெரிந்து பேசு,அறம் தெரிந்த பின் வாயே திரக்கமாட்டாய்.குஷ்டரோகம் தேடியவர்க்கு வரம் தந்த அப்பன்,கந்தன்,அழகன்,குமரன்,ஞானபழம்,அயோக்கியனாகிய தனக்கும் அருள் செய்வார் கருதி இப்படியெல்லாம் விரண்டாவாதம் செய்கின்றனர் சிலர்.அவர்கள் பல பிறவி கடந்தவர்கள்,மாயையில் சிக்குன்டு வாழும் மக்களுக்கு ஆதி,கண் முன் தோன்றினாலும் மலக்கண்ணுக்கு தெரியாது,நாயன் மார் என்பவர்கள் நாரதர் போன்றவர்கள்,நாயன்மார் போன்று மணிதன் வாழ முடியாது.மாணவ பருவத்தில் கல்வியை தேடு,படித்து முடிந்த பின் தொழிலை தேடு,திருமணத்திற்க்கு பின் கடமையை செய்,அனைத்தையும் அறம் தெரிந்து செய்.திருக்குறளை மனனம் செய்.தீயவை தானே சிந்தையை விட்டு அகன்று விடும்.ஆதி கொடுத்த உடலை நன்கு பேனி காத்திடு.அஷ்டாங்க யோகம் பற்றி தெரிந்துக்கொள் விரும்பினால் பழகிடு,குண்டலினி த்யானம் செய்திடு.இயற்கை துணை புரியட்டும்,வாழ்க நாராயண நாமம்.
“நாயன் மார் என்பவர்கள் நாரதர் போன்றவர்கள்”. என்னே உம் சமய அறிவு?. கொஞ்சமும் அறிவில்லாமால் பேசும் இந்த காய் தமிழ் இன எதிரி, விரோதி என்று சொல்லாமலே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதற்கு நன்றி. இனி, நீர் இப்பகுதியில் எழுதுவதெல்லாம் வீண். உம் பேச்சு அம்பலம் ஏறாது. உமக்கென்று வேறு இடம் இருந்தால் தேடிக்கொள்ளவும். இல்லையேல், வீழ்ந்து மாளவும்.
தேனீ நைனா இன்னுமா உமக்கு தெரியவில்லை நாம் இன்னமும் உங்களை போன்ற ஆரிய பாதந்தாங்கிகளின் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைபதில்லை ,எங்கள்
திருமணங்கள் சமஸ்கிருதத்தில் நடைபெறுவதில்லை ,கோயில்களில் சமஸ்கிருதம் ,இறந்தபிறகும் சமஸ்கிருதம்
விடுவதில்லை ,இப்படி எங்கு பார்த்தாலும் சம்ஸ்கிருத மாயம் .கோயிலிலும் ,அச்சகர்கள் தமிழில் ஓதுவதில்லை
இதற்கு பிரமாணன் கூறுகிறான் கடவுள் மந்திரத்திற்கு
கட்டு பட்டவர் ,மந்திரம் பிராமனக்கு கட்டுபட்டது ,அதனால்
நாங்கள் ஓதும் வேதங்களுக்கு தான் கடவுள் செவிசாய்ப்பார் ,தமிழ் மொழியில் அய்யங்கார்கள் ,பூசாரிகள் செய்யும் அச்சனையை கடவுள் ஏற்றுகொள்ள மாட்டார் ,அவர்கள் சமஸ்கிரத மொழியை படித்து மந்திர சொல்லை சொன்னாலும் கடவுள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார் , காரணம் தமிழ் ஈச மொழி என்று பிராமணன் கூற்று இருக்கும் போது தேனீ நைனா ஏன் பிதற்றிகொண்டு இருக்கிறீகள் ,எனக்கு இருக்கும் அதே தமிழ் பற்று ஏன்
தமிழ் தேனீக்கு இல்லாமல் போய் விட்டது ,காரணம் நீ ஒரு பூச்சி என்பதால அல்லது இரண்டு அறிவு பிராணி என்பதாலா .?
தமிழர் சமயம் வேதமோ, வேதாந்தாமோ அல்ல என்று வலியுறுத்திக் கூறிய பின்னும் ஏனோ தமிழ் பித்தரைப் போன்று இன்னும் பல தமிழர்கள் அதனையே கட்டிப் பிடித்துக் கொண்டு கதறுவானேன்?. சமஸ்கிருதமும் நமது மொழி அல்ல என்று வலியுறுத்தி சொல்லிய பின்பும் அதனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஏன் அழுவானேன்?. ஏன் அவர்களிடம் வீண் வம்புக்கு நிற்பானேன்?. எம்மைப் போன்றோர், தமிழர்களுக்கென்று அறிவார்ந்த சிவ நெறியாகிய சைவ சமயம் உள்ளது. அச்சமயம் சிறந்ததொரு சித்தாந்தத்தை நமது சமய தத்துவமாக பெற்றுள்ளது. ஆகையால் எம்மைப் போன்ற தமிழர்களுக்கு அதுவே சமயம். யாம் இறைவனை வணங்குவது தெள்ளத் தமிழில் இருக்கும் திருமுறை பாமாலைகளைக் கொண்டே பாடி வழிபடுகின்றேன். தமிழ் பித்தரைப் போன்று எனக்கு சமயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நிம்மதியாக எம்பெருமானை வணங்குகின்றேன். சரியான சமய நெறியில் நிற்கின்றேன். வேதமோ, வேதாந்தாமோ எம் இன சமய நெறி இல்லை என்பதனை நன்றாக உணர்ந்து செயல்படுகின்றேன். இதனை அறிய வேண்டுமானால் எதிர்வரும் 26 & 27, சூலை மாதம் சா அலாம் மிட்லாண்ட்ஸ் தமிழ் பள்ளி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் 2-ம் சைவ சமய மாநாட்டிற்கு வந்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேனீ நைனா , சமய மாநாட்டில் நீங்கள் சைவ சமயம் தான்
தமிழர் சமயம் மற்ற சமயங்களை பின் பற்ற கூடாது என்ற
தீர்மானத்தை கொண்டு வந்து அதை அந்த மாநாட்டில் நிறை
வேற உங்களால் முடியுமா , நான் அந்த மாநாட்டில் கலந்து
கொள்வேன் , நீங்கள் தீர்மானத்தை கொண்டு வருகிறீகளா அல்லது ….. நீங்களும் ,,……
திருவிளையாடல் ஆரம்பம்! எல்லாம் சிவமயம்…
தமிழர் மற்ற சமயங்களை பின் பற்றக் கூடாது என்பதற்கு சமயம் என்ன கிலோ கணக்கில் கடையில் வாங்கும் பொருளா?. இது ஒவ்வொருவரின் உள்ளத்திற்கும் அவரவர் போற்றும் இறைவனுக்கும் இருக்கும் தனி நபர் உரிமை. இதுநாள் வரை அறியாமையில் வாழ்ந்து வரும் நம் இன மக்களுக்கு எது தமிழர் சமயம் என்று உணர்த்துவது நமது கடமை. ஏற்றுக் கொள்வது, கொள்ளாததும் அவரவர் உரிமை. நெத்தியில் துப்பாக்கியை வைத்து சமயத்தை மாத்திக்கோ இல்லையென்றால் சுட்டு பொசிக்கிடுவேன் என்று கூறும் சமயம் நம் சமயம் அல்ல. இது அன்பே வடிவானது. அன்பினால் நம் மக்களை அரவணைத்து அன்பே சிவம் என்று உணர்த்தும் சமயம். ஆகையால், செய்வதை அன்போடும், பண்போடும் செய்வோம். எவர் மனதையும் புண் படுத்தாமல் நல்லதைச் செய்வதே தமிழர் பண்பாடு. அப்பா இப்பதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் பித்தர் கொஞ்சம் மனசு மாறி கட்டைளையுடன் மாநாட்டுக்கு வருகின்றேன் என்று சொன்னது. பரவா இல்லையே பொறுத்தவன் பூமி ஆள்வான் என்பது உண்மை போலும்.
இன்றைய நிலையில் இருந்து ஏறக்குறைய 1,000 வருடங்களுக்கு முன்பாகவே ஆரியர் தமிழர்களை மதம் மாற்றி விட்டனர். அதனை நினைத்த மாத்திரத்தில் மாற்றி விட முடியாது. ரோஜா செடியின் மீது போட்ட சேலையைப் போல் பக்குவமாகத்தான் எடுக்க வேண்டும்.
ஞானி சொல்வது போல இது அந்த சிவபெருமானின் திருவிளையாடலே. இதுநாள் வரை சைவ சமயம்தான் தமிழர் சமயம் என்று எடுத்துச் சொல்லவே நம்மவர்கள் பயந்தனர். கற்றவர்களும் சரி கல்லாதவர்களும் சரி அவ்வாறே பயந்தனர். அல்லது சமயத் தெளிவு இல்லாமல் வாழ்ந்தனர் எனலாம். உடனே நம்மை எதிர்ப்பவர்கள், இது தெய்வ குற்றமாகி விடும் என்று பூச்சாண்டி காட்டி நம்மை பயமுறுத்தி வைத்திருந்தனர். இன்று தமிழர்களுக்கு அந்த பயம் தெளிந்தவுடன், நல்ல சிந்தனையுடன் சிவநெறியில் செயல் பட துவங்கி விட்டனர். இது அந்த சிவபெருமானின் திருவிளையாடலே.
குட்டை குழம்பிவிட்டது. மீன் பிடிப்பவர்கள் மீன் பிடிக்கலாம். விஞ்ஞான கோட்பாடுகளுக்கு சமயத் தத்துவங்கள் ஒத்துப்போகிற மதமே உலகின் கவனத்தை ஈர்க்கும். உதாரணமாக பிக் பேங், கிரவிடோன் போன்றவற்றோடு ஸ்டிரீங் தியரி,பரலேல் யூனீவர்ஸ் போன்றவற்றோடு மதம் இணைந்து பயணத்தை மேற்கொள்ளுமா என்பதையும் எதிர்கால மனித சமூகம் கவனித்தே பயணிக்கும். அவற்றிற்கு முரண்படும் சமயத்தை உலகமும் தவிர்க்கும், தமிழர்களும் தவிர்ப்பர்!
தமிழன்! நீங்கள் கற்ற விஞ்ஞானம் இதுதானா? ஒரு சத்குருவை நாடி முழுமையான உபதேசம் பெறுங்கள்! தமிழர் சமையம் முற்றிலும்
விஞ்ஞானம்!
நல்ல குருவை எனக்கு அறிமுகம் செய்தால், ஞானிக்கு குரு தட்சணை
வழங்க தயாராக உள்ளேன்.
சித்தாந்த தத்துவங்களில் இருந்து அறிவியல் தத்துவங்கள் தோன்றியதை தமிழன் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்துள்ளான் என்பதனை இங்கு வருகை தந்துள்ள “தமிழன்” அறியாமல் போனதற்கு சித்தாந்த அறிவு இன்மையே காரணம். .
காசு வாங்காத நல்ல குருவை தேடித்தாருங்கள்!.
சிவனுடைய திருவிளையாடல் இனிமேல் ஆரம்பம் என்று சொன்னேனே அதன் அர்த்தம் போக போகத் தெரியும் ஆசாமி.
காலால் மலையேறி குருவுக்கு குருவான முருகப்பெருமானை நாடுங்கள்! அவர் உங்கள் குருவை அடையாளம் காட்டுவார்! இதற்கு ஏன் சாமி தட்சணை? உங்கள் முயற்சி மட்டுமே போதுமானது!
சத்குருவே பரம்பொருளான சிவபெருமானை அடைவதற்கும் வழி காட்டுவார்! எல்லாம் சிவமயம்…
சாதிக்கொள்கை சைவக்கொள்கை இல்லை. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது இல்லை. சாதிவெறி சைவநெறி இல்லை. இறைவர் ஒருவர் என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.
“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.”
(6.60.3) – திருநாவுக்கரசர்
இது கருத்துக்களம். இங்கே கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும். ஞானி அவர்களே…. நீங்கள் சைவத்தைப் பற்றி அறிந்திருந்தால் விளக்கம் தாருங்கள்.இல்லையெனில் மற்ற சமயத்தவர் விளக்கட்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், சமணம் , பஹாய், சீக்கியம் என எச்சமயத்தவராயினும் விளக்கட்டும். நாமும் அதுகுறித்து அறிய முற்படுவோம். (உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)
சுருக்கமாக சொல்லுங்கள்,கடவுள் ஆணா? பெண்ணா ? இல்லாவிடில்
இதை நிறுத்துங்கள்.
பேசும் குரு தேவை,ஒருவர் பழனி ஆண்டவரிடம் வந்து முருகா,கந்தா,கதிர்வேலா,அப்பனே,அப்பனுக்கு பாடம் புகற்றியவரே நான் தேவைக்காக வட்டிக்கு பணம் வாங்கிவிட்டேன் இப்போ பணத்தை திரும்பி செலுத்த பணம் இல்லை,ஆகையால் வட்டிக்காரன் என்னை தேடி வரகூடாது என்று சொல்வார் ஆனால் பேசும் குருவோ முதலில் வட்டிகாரரிடம் போய் பேசு,டைம் கேலு,வாங்கிய கடனை முதலில் செலுத்து என்று புத்தி மதி சொல்வார்.ஆதலால் மாணிட குருவை தவிர்க பல காரணம் சொல்லி தப்பிக்கின்றர்,நாராயண நாராயண.
http://www.youtube.com/watch?v=xGrrLvtUMP4
அன்பான சைவ தமிழர்களே. நம் தமிழ் சமுகம் சமயரிதியாக மிகவும் தெளிவற்ற இந்து முடனம்பிகைல் திசைமாறி கால்போனபோக்கில் மனிதர்களாக வாழ்ந்த வாழ்கிற குருவளிபாட்டிலும் மற்றும் பல அந்நிய மத விட்பனர்களாலும் சிதறி சிரளிகிரார்கள் .. தமிழர்கள் தங்களை தமிழர்களாக உணர இந்த காநோளியும் தெளிவுபெற உதவலாம் .. முகனுள் உடாகவும் பகிருங்கள் .. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
கலை இந்த காணொளி வலைப் பகுதியின் சுட்டியை வலை ஏற்றியமைக்கு நன்றி. முழுமையாகப் பார்த்து விட்டு பின்னர் கருத்து எழுகின்றோம்.
கலை போன்ற அன்பர்கள் “திராவிடர்” என்னும் வார்த்தையை கடுமையாக எதிர்த்தாலும், இன்று தமிழர்களுக்கு கிடைத்த சமய உரிமைக்கு திராவிட கழகத்தாரும் ஓரளவு நற்பணி செய்துள்ளனர் என்பதனை நாம் மறுக்க இயலாது. அவர்கள் இந்து மதத்தில் இருந்து வரும் ஒரு தரப்பினரின் ஆதிக்கத்தை சமய ரீதியில் எதிர்க்க வலுவில்லாமல், நம்மவர்களிடம் இருந்து போதிய ஆதரவும் இல்லாமல் தடுமாறிய நேரத்தில்தான் இப்படி வேற்றுமைக் காட்டும் சமயம் நம் தமிழர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்ற கருத்தை முன் வைத்தனர். இதன் மறுபக்கம் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் தமிழினத்தின் சமயம் மற்றும் பொருளாதார ரீதியலான உரிமை காக்கப் பட வேண்டும் என்ற கருத்து உறுதியாக இருந்தது. இதன் தாக்கத்தைத்தான் நீயா, நானா என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண்கின்றோம். அவாக்களின் ஒரே வாதம் “ஆகமம்” அவ்வாறு சொல்கின்றது. அகையால், இது எங்கள் பிறப்புரிமை என்பது. ஆனால் அவர்கள் இன்று உரை வடிவில் பிடித்துக் கொண்டிருக்கும் சைவ ஆகமங்கள் அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் உரைநடையில் ஓலைச் சுவடியில் எழுதப் பட்டவை. அதுவும், 8-ம் நூற்றாண்டுக்குப் பிறகே (சமணம், புத்தம் வலுவிழந்த பிறகு) வைதீகம் மீண்டும் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்த வேளையில் உரைநடையில் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டவை. ஆகையால் இந்த ஆகமங்களில் வைதீகச் சேற்று படிவம் இல்லை என்பதற்கு உறுதி இல்லை. தமிழில் தோன்றிய சைவ ஆகமங்கள் கால ஓட்டத்தில் மாற்றி எழுத்தப்பட்டு, இடைச் செருகல் ஏற்பட்டு இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக ஒரு கட்டுரையின் சுட்டியை இங்கே பதிவு செய்துள்ளோம். படித்துப் பார்க்கவும்.
http://www.viduthalai.in/readers-choice/115-2011-05-28-07-41-10/63801—-2.html
இந்த நேரமா பாத்து பன்ச் வரலயே மக்க,பக்தி வேறு பகுத்தரிவு வேறு.ஒரு சம்பவத்திற்கு ஏதோ கருத்தை கூறி பரிசு வாங்குபவன் பகுத்தரிவாலன் ஆனால் அக்கருத்து காலத்துக்கு மாற்றம் காணும்.திராவிட கருத்தாலே யாறும் அஞ்சி ஒதுங்குகின்றனர்,தமிழ் நாட்டில் சாத்தியமாகும்.இங்கே நிலவும் விரண்டாவாதமான கருத்தே தமிழ் நாட்டு அரசியல் சூழல்.ஆனால் இங்கு அப்படியா,பால் மரம் சீவியவர்கள் இன்று சொகுசா வாழ்கின்றனர் கௌரவமாக வாழ்கின்றனர்.முட்டுக்கட்டை கிடையாது.நாம் தலைமை ஏற்றிருந்தால் தமிழ் நாட்டு நிலைதான்.மங்கை சொல்வார்,ஏன் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் யென்று.உதயத்தை தேடுபவர் தேடட்டும் இதயத்தை தேடுபவர் இதயத்தை தேடட்டும்.நோ ப்ரோபலம் சோல்வ் ப்ரோபலம்.இறையை நம்பாதவன் தெரியாதவன் உனராதவன் எப்படி சரியாக விமர்சிக்ககூடும்.தெரியாத ஒன்றை பற்றி எப்படி பேச வரும்,நாராயண நாராயண.
தேனீ நான் சமய மாநாட்டுக்கு வருகிறேன் என்று கூறியது
உங்களை போன்ற பல பேர் மாநாட்டில் தீர்மானத்தை போடுவார்கள் வாய் கிழிய பேசுவார்கள் ,வீட்டுக்கு வந்ததும்
நான் என்ன செய்வது என் மனைவி சைவ சமயம் வேண்டாம்
என்கிறார் என்று கூறி பழையப் படி வேதாளம் முருங்க மரத்தில் ஏறியது போல இந்து மத பிராமணர்கள் காலடியில் போய் விழுவார்கள் ,மாற்றத்தை உடனடியாக
தந்தை பெரியாரால் முடியாமல் போனதற்கு காரணம்
1000 வருடங்களுக்கு மேலாக இந்து மத்தில் ஊரிப்பான நம்
சமூதாயம் சைவ சமயத்தை மீண்டும் ஏற்று கொள்ளது ,தேனீ
ஏன் சைவ சமயம் தொடர்ந்து வரவில்லை ,இடையில் வந்த
இந்து (திருட்டு ) சமயம் துளிர்விட்டு வளர்ந்தது ,காரணம்
இந்து மத்தில் கவர்ச்சி இருந்தது பிராமணன் தன் சிவப்பான பெண் பிள்ளைகளை தமிழ் அரசர்களுக்கு கொடுத்து காரியத்தை சாதித்து கொண்டான் , நைனா முதலில் நீங்கள்
உங்கள் குடுபத்தை சேர்ந்த எத்தனை பேர்களை மாநாட்டிற்கு அழைத்து வருகிறீர்கள் என்பதை பார்க்க தான்
நான் வருகிறேன் .ஆசாமி நைனா கடவுள் என்பது கற்பனை
அப்படி இருக்க கடவுள் ஆணா அல்லது பெண்ணா என்று
கேட்டால் எப்படி நைனா உண்மையான பதில் வரும்,ஆசாமி நைனா ,போய் உருப்படியான வேலையை பாரு நைனா , இவனுங்க எல்லாம் கடவுளை நேரில் பார்த்த மாதிரி சொல்லுவானுங்க ,பிரிட்டிஸ் நாட்டில் ஒரு கிண்டர் கார்டென் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் நம்மை எல்லாம் படைத்தவர் கடவுள் என்று படித்து கொடுத்தபோது ,அந்த மாணவி கேட்ட கேட்ட கேள்வி ,கடவுள் நம்மை படைத்தார்
என்றல் அந்த கடவுளை யார் படைத்தார் ,அவர் எங்கு குடியிருக்கிறார் என்ற கேள்வியை கேட்டதும் இவ்வளவு
அறிவுள்ள மாணவிக்கு நான் பாடம் சொல்லிகொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஆசிரியர் தொழிலை ராஜினாமா செய்தாக ஒரு செய்தி 10ஆண்டு களுக்கு மேல் வந்தது .தேனீ திராவிடர் கழகத்தார் மலேசியாவில் உண்மையான சீர்திருத்தவதியாக முன்பு கே.ஆர்.திருச்சு டர், ரே.சு .முத்தையா காலத்தில் தான் இருந்தார்கள் ,இப்போது கழகத்திற்கு உறுப்பினர் தலைவர்கள் இல்லாத காரணத்தால் கோயிலில் மணி அடிப்பவர்களையும் ,ஜோசிய காரர்களையும் வைத்துகொண்டு பதவிக்காக இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் உங்கள் சமய மாநாட்டிற்கு கூப்பிட்டால் அவர்கள் வருவார்கள் ,என்னை பொருத்தவரை மனிதனுக்கு சமயமோ மதமோ தேவையில்லை அவனுக்கு தேவை மனித நேயம் ஒன்றே நைனா .
செய்ய
தமிழ் பித்தரே, இது வாய் கிழிய பேசி விட்டு கூடிக் களையும் புலவர்கள் மாநாடல்ல. இம்மாட்டின் நோக்கங்களில் ஒன்று நம் மக்களுக்கு பக்தி நெறி என்பது அறிவு நெறியாக (ஞான நெறி அல்லது சமஸ்கிருதத்தில் சன் மார்க்கம் எனப்படும்) இருக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்நாட்டில் உள்ள சைவ சமியிகள், இந்து பெருமக்கள் அனைவரையும் இம்மாநாட்டிற்கு அழைக்கின்றோம். பல காலமாக சமயம் என்ன்பது என்ன என்று தெரியாமலேயே, அறியாமலே வாழ்ந்து விட்ட நம் மக்களை மடை மாற்றம் செய்வது என்பது சுலபமானா காரியமல்ல என்பதை எம்மைப் போன்ற தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளோம். எடுத்துச் சொல்வது எங்கள் சிவபணி. அதனை திருவினையாக்குவது திருவருள் என்று நினைத்துக் கொண்டே சிவன் மேல் பாரத்தை போட்டு விட்டு நாங்கள் சிவப்பணியில் இருக்கின்றோம். சிவத்தை உணர்ந்து இறுதி மூச்சு உள்ளவரை இச்சிவப் பணியில் நாங்கள் யாதொரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் செய்கின்றோம். என் மனைவியும் சைவ சமய ஈடுபாடு உள்ளவரே. எம் குடும்பத்தில் உள்ள 10 உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்கின்றனர். இம்மாநாட்டையே, எமது குடும்பம் சைவ சமய பயிலரங்கமாக எடுத்துக் கொண்டு வருகை தர உள்ளனர். தங்கள் வருகை இனிய வருகை ஆகட்டும்.
நாம் இன்று நிலவும் சம்பவத்தை தமிழர் அவலத்தை கேவலத்தை குறிப்பிட்டால் நீர் ப்ரசுரிக்க மருக்குறீர்.படித்தாவது பிற சமுகத்தை இகழ கூடாது எண்ணி மணம் மாறுவர் கருதினோம்.நாராயண நாராயண.
பார்பனன் ஏன் இந்த பகுதியில் குப்பைகொட்டுகிறாய் ?
ஏன் உமக்கு இந்த வீண் வம்பு ?
நாராயணாவை மறந்து சிவவழிபாட்டுக்கு உம்மை வெற்றிலை பாக்கு வைத்து யாரும் அழைக்கவில்லை !
குப்பை தொட்டியில் தானே கொட்டவேண்டும்,கேள்விக்கு பதில் வரவேண்டும்,மணடையில் சங்கதி இல்லாதவன் போல் குதிக்ககூடாது லைக.தமிழரிடம் என்னய்யா இருக்கு,அரசாங்கமே தூக்கி குப்பையில் போட்டுறிச்சி.இந்தியாவில் அடுத்த இனமே ஆண்டது இப்போ மலேசியாவிலும் சீனர் கிட்டே மாட்டிக்கிச்சி குடுமி.இந்துவை திருடன் என்குறீர்,ஏன் இந்துவிடம் காலை பிடிச்சு கெஞ்சுகிறீர் பிள்ளைகலை உம் தமிழ் பள்ளிக்கு அனுப்ப சொல்லி.நீர் வாழ எதை வேணுமானாலும் பிடிச்சு கெஞ்சுவீர் போல்.தமிழர்கே தமிழ்பள்ளி என்று கூறும்,பிற இனத்துக்கு தமிழ்பள்ளியில் இல்லை இடம் கூறும்,நீர் ஜான் பிள்ளை என்று கூரலாம்.வரம் காலங்களில் ஒவ்வொரு இனத்துக்கும் தனி பள்ளி உருவாகும்,பொருத்திருந்து பாரும்.மலேசியா என்ன தமிழ் தேசமா.அன்வார் வந்தால் நிச்சயம் தமிழ்பள்ளி கிடையாது.சத்யராஜ் வடிவேலு நடித்த என்னம்மா கன்னு படத்தில் வடிவேலு சத்யராஜ் வண்டியிலே போகயில ஒரு பையன் குருக்க போவான்,வடிவேலு திட்டுவார் அதற்கு சத்யராஜ் கோபித்துக்தொள்வார் ஏன் என்று நீங்களே பாருங்கள்.அப்புரம் ப்ராமணர் பத்தி பேசுங்க.நாராயண நாராயண.
தேனீ நைனா ,சிவன் என்ன உங்களை தூவராக நியமித்தாரா ஏன் சிவன் அவரால் சைவ சாயத்தை பரப்ப முடியாதா ,சமயம் .மதம் என்ன என்பதை சிவனோ அல்லது கடவுளோ நேரில் வந்து சொன்னால் எல்லா மக்களும் நம்புவார்களே ,ஏன் அந்த
கடவுள்கள் நேரில் வர மாட்டேன் என்கிறார்கள் ,மனிதன் கேள்வியை கேட்பான் என்ற பயமா அல்லது …. அதான் கடவுள் கையில் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களே ,ஏன்
கடவுள் நேரில் தோன்றினார் என்று நீங்கள் கூறலாம் எப்பது
2000 அல்லது 10,0000 ஆண்டுகளுக்கு முன்பு ,அப்போது மக்கள் எப்படி இருந்தார்கள் வெந்ததை தின்று எவன் எதை
சொன்னாலும் நம்பி இருந்தார்கள் ,இப்போது அறிவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் ,உணவை பல வகையாக சுவையாக சமைத்து சாப்பிடுகிறார்கள் ,அதனால்
சமயங்கள் ,மதங்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது,
இன்னும் 2050 மனிதர்கள் மத்தியில் மதம் என்றால் என்ன
என்று கேள்வியும் கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியும் இருக்கும் காரணம் கடவுள் இல்லை என்று சொல்லும் என்னைபோன்றவர்களும் கடவுள் ,சமயம் மதம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிற தேனீ போன்றவர்களும் இந்த
பூமியில் இருக்க மாட்டோம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ,தேனீ நைனா நான் நடிகர் கமல்ஹாசன் கூறிய வார்த்தையையும் ,தந்தை பெரியார் கூறிய கருத்தை இங்கே பதிய விரும்புகிறேன் ,கடவுள் இல்லை இருந்தால் நல்லது ,கடவுள் இல்லவே இல்லை ,கடவுளை கண்டுபிடித்தவன் காட்டு மிராண்டி .ஓகே நைனா
பார்ப்பான் தமிழை கற்றால் தமிழனுக்கும் தமிழுக்குமே கேடு 100%உண்மை …. நீயே இரவல் மொழியில் வாழ்கிறாய் இதுல பேரியபேச்சு!!!!!!!!!!!!!!
பார்பனர்கள் தட்சனை என்றபெயரில் சில்லறை பொறுக்கமாட்டோம் என்று சொல்லும்பார்ப்போம் !!!!!!!!!!! பிச்சைக்கும் சில்லறைதான் பார்பானுக்கும் சில்லறைதான் .. சில்லறபசங்க… இந்தியாவில இத்நோண்டு வீதம் இருந்துகொண்டு பார்பனர்கள் பண்றசெட்ட இருக்கே!!!!!!!!!!!!
மோடி பதவிக்கு வந்ததே பார்பாங்களுக்கு ஒரு வீழ்ச்சிதான் .. இனிமேல் படிப்படியாக இவர்கள் கொட்டம் அடங்கும் … நாடோடிகூட்டம் பிழைக்கவந்த இடத்தில் மண்ணின் மைந்தர்களான சிந்துவேளிமக்களை மதத்தால் அடிமைபடுத்தி ஆலய பணத்தை வைத்து அரசியலை கைப்பற்றி கொண்டு பண்ணுற அலப்பறை முடிவுக்கு வரும் விரைவில் ..
உம்மை இப்படி பேச வைத்து இறை நம்பிக்கையாளர்களை மேலும் வளர்ப்பதும் அந்த சிவபெருமானே. தமிழ் பித்தரே. தங்களின் உயிர் உலக பந்தம் என்னவென்பதை அறிந்து, பிரிந்து “நான்” என்ற நினைப்பில் நிற்க ஆரம்பித்ததால், “தான்” என்ற அகங்காரத்தில் நிற்கின்றது. அவ்வுயிரானது சிவத்தை உணர்ந்து, சிவத்தைச் சார்ந்து நின்றால் “சகலத்தில் கேவல” நிலைக்குச் செல்வதில் இருந்து தடுக்கலாம். எல்லாம் அவன் சித்தமே!.
எட் லீஸ் ஆசிரியர் படித்திருப்பார் என்ற திருப்தி போதும்.எப்படி சுவையா இருந்ததா ஆசிரியரே,நாராயண நாராயண.
டமில் பீத்தன் நைனா! கடவுளை கண்டுபிடித்தவன் காட்டு மிராண்டி என்று உங்களுக்கு முன்பே உங்களது நைனா பெரியார் கூறியிருந்தார். அவரைத்தொடர்ந்து உங்களது சின்ன நைனா அண்ணாத்துரையும் தாளம் போட்டார். தற்போதைய கரு’நைனா’ நிதியும் பக்க வாத்தியம் போட்டு தமிழகத்தையே குட்டிச்சுவராக்கினார்கள். இவர்களது ‘கடவுள் இல்லா’ படிப்பினை நல்லதையா கொண்டு வந்தது? அருகிலுள்ள தொப்புள் கொடி ‘ஈழ’ சகோதர சகோதரிகள் கொலைக்களங்களில் தத்தளித்தபோது, வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு இந்த ‘கடவுள் இல்லா’ ஈனப் பிரச்சாரம் தமிழர்களை கவ்விக் கொண்டது. ‘கடவுள் இல்லை’ என மேடையில் பேசிப் பேசியே உலகில் ஆட்சியில் அமர்ந்த கட்சிகள் இந்த தி.மு.க..அண்ணா தி.மு.க. ஆட்சிகள். இவர்களது படிப்பினை தமிழர்களை முட்டாளாக்கியதே தவிர, ஒற்றுமையை வளர்த்ததில்லை. இருந்திருந்தால், ஈழ மக்கள் கொலை செய்யப் படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள் நைனா!
கடவுள்,கடவுள் என்பது எதை குறிக்கிறது,கடவுளின் இலக்கணம்(பாக்தா)தெரியாத பிள்ளைகளுக்கு தான் மானாடு நடத்தபடுகிறது,போய் தெரிந்துகொளுங்கல்.எல்லோறும் கடவுளின் பிரதிநிதியெ,தாய் என்கிறாயே மருத்துவர் சொல்லித்தான் தெரியும் இவள் தாய் என்று,அந்த பெண் கூறயவரே தந்தையாம்,ஆனால் உண்மை ஹஹஹ.என் மொழி,தாய் மொழி தமிழ் என்கின்றீரே,யார் சொன்னது இந்த மொழி வும்முடயது யென்று.எப்படி வந்தது,யார் தயாரித்தது.வந்த வழியே தெரியாவனுக்கு பரம் பொருளை காட்டனுமாம்.ச்சீரி ச்சீரி யை வைத்துக்கொண்டு ஆதியை காட்டமுடியாது.நாராயண நாராயண.
தமிழ்ப்பித்தன் சார், கடவுள் பெயரைச் சொல்லி ஆள்பிடிக்க ஒரு கூட்டம் புதுசா கிளம்பி இருக்கு. இனி நிறைய கிளப்புகள் தோன்றும். தலைவர்கள்,கமிட்டி எல்லாம் தோன்றும். தமிழனை ஆளுக்கு ஒரு பக்கமா இழுத்து பிச்சி பேனுபார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இவர்கள் இந்தத் தமிழச்சாதியை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க. கடவுள் இல்லை கொள்கை இலங்கைத் தமிழனைக் காப்பாத்தவில்லை என்று ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது. கடவுள் இருக்கு கொள்கை என்ன பண்ணியது? அதுவும் தானே கொலைய வேடிக்கைப் பார்த்தது. திராவிட கட்சிக்காரன் கொள்கை தமிழனை முட்டாளாக்கியதாம். சாமியாடிங்க கொள்கை என்ன செய்தது? அவன் கோவனத்தையுமல்லவா பிடுங்கிக்கிட்டு விட்டது. கடவுளைப் பார்த்தவன் கடவுளைப் பற்றி பேசினா அது தகும். கடவுளை வைத்து காசு சம்பாதிக்க எத்தனிக்கிற ஒரு கூட்டம் , கடவுளை வைத்து கட்சி சேர்க்கத் துடிக்கிற ஒரு கூட்டம் , தமிழன் உணர்வைத் தூண்டிவிட்டு குளிர்காய நிணைக்கிற ஒரு கூட்டம் , தமிழனைப் பண்டாரமாக்கத் துடிக்கிற ஒரு கூட்டம் அறிவுக்குச் சம்பந்தமே இல்லாம கற்பனை வாதத்தை முன்வைக்கிற ஒரு கூட்டம் நல்ல பகுத்தறிவாளனாம் தமிழ்ப்பித்தனை சாடுவது ஏன்? போங்கையா…. பெரிய கடவுள் செக்ரடிரி மாதிரி பேச வந்துட்டீங்க!