வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
உடமைகளையும்
இருப்பிடங்களையும்
அல்ல
உணர்வையும்
உயிரையும்……
நாங்கள் தொலைத்தது
பொன்னையும்
பொருளையும்
அல்ல
உறவையும்
அன்பையும்…..
கரம்பிடித்து
நடைபழகி தந்த
தந்தையை காணவில்லை
நிலா சோறு
ஊட்டிய அன்னையின்
அறவணைப்பு இனி
இல்லை………
அன்பான தமக்கையை
தொலைத்தேன்
கொஞ்சும் தமிழ்பேசும்
தங்கையையும் இழந்தேன்
யாருமின்றி தனிமனிதனானே
சர்வதேச நாடுகளால்
அகதியானேன்……
எல்லாம் இழந்தும்
உயிர் மட்டும் உள்ளது
அகதியாய் கடல்கடந்தேன்
தொடர்ந்து உயிர்வாழ
அல்ல
அடுத்ததலைமுறைக்கு
தமிழீழத்தின்
வரலாற்றை சொல்ல!!!!
– சிவாலெனின்
Super bro
நன்றி