வைரமுத்து…..(ஆதிநேசன்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

வடுகபட்டியில் வீசத்தொடங்கிய வசந்தமே…..
vairamuthuவைரமானாய் எங்கள் தமிழுக்கு….!
வான்குடையானாய் தமிழருக்கு…!
வண்ணம் தீட்டினாய் கவிதைக்கு..!

வைகறை மேகங்களும் வாழ்த்தும்…
வில்லோடு வந்த நிலவுன்னை…
உன்னால் பிறந்தமைக்கு…!
உந்தன் பிறப்பதற்கு..!!

‘நிழல்களாய்’ ஒளியானாய்…
நடிப்புலகுக்கும் இசையுலகுக்கும் மத்தியில்
நடந்தாய் ‘சிகரங்களை நோக்கி’…!
நிருபித்தாய் ‘தமிழுக்கு நிறமுண்டு’ என்று….!

இந்த‘கவிராஜன் கதையும்’ சொன்னான்..
‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களுமாய்..
ஒரு மெளனத்தின் சப்தங்களானான்…!

தண்ணீர் தேசத்தையும் கடந்து…
திரும்பிப்பார்க்க வைத்த..
‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’..
தொடர்ந்தாய் ‘இதுவரை நான்’ என….!!

செதுக்கினாய் தமிழை..
‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் ’என்று…!
கள்ளிகாட்டு இதிகாசமாய்
கரையேற்றினாய் எங்கள் தமிழை..

‘வடுகபட்டி முதல் வல்கா வரை’
விளையாடிய உனது விரல்கள்..!
‘வானம் தொட்டன துரமில்லையென.-நீயோ
வேள்வியானாய் கேள்விகளால்…!

‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்களும்..
இவரின் விசிறியானார்கள்…!!
‘இதனால் சகலமானவர்களுக்கும்,, ‘
இவரின் ரசிகர்களானார்கள்…!!

கொடிமரத்தின் வேர்களாய் படர்ந்தாய்…
காவி நிறத்தில் ஒரு காதலுமானாய்…!
கொஞ்சம் தேனீர் நிறைய வானமாய்..
காவியமானாள் உனது கருவாச்சி…!!

‘எல்லா நதியுளும் உன் ஓடம்’
எல்லா கவிதைகளும் உனை பாடின…!
உன் பழைய பனை ஓலைகள் கூட..
உன் ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தன..!

‘மீண்டும் தமிழ் தொட்டிலுக்கு’
மூன்றாம் உலகப் போரானாய்…!!
இன்னொரு தேசிய கீதமாகும்…
இனியுந்தன் ‘கல்(சொல்)வெட்டுகள்’….!!!

‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’
கருப்பு முத்தை ஈன்றவள் நீயோ…!
அறுபதை கடந்த தலைவனை
ஆண்ட தமிழுடன் வாழ வாழ்த்த வருவாயே….!!!

-ஆதிநேசன்,
கிமிஞ்செ. நெ.செம்பிலான்.

TAGS: