தமிழ்ப்பள்ளி!!…..(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

 

tamil_schoolகதவிருக்கு

கறையான் அரித்துவிட்டது…..

கூரையிருக்கு

மழைபெய்தால் ஒழுகும்…..

ஆசிரியர்கள் உண்டு

ஆனால் போதவில்லை…..

நாற்காலி மேஜைகள்

கோரிக்கை முடியவில்லை…..

Tamil 2ndary school - MPSவகுப்பறை பற்றாக்குறை

தொடரும் தொடர்கதை…….

கொள்கலனில் வகுப்பறை

தமிழ்ப்பள்ளியின் அவலநிலை……

பந்துவான் மோடால் பள்ளிகள்

பந்துவான் பெனோவாய்

தேர்தல்காலத்து வாக்குறுதி

தலைவர்களின் வாய்ஜாலம்……

ஆண்டுதோரும் பட்ஜெட்டும்

Seaport Tamil school1கண்துடைப்பு

கல்வி அமைச்சர்களின்

மாற்றமும்

தமிழ்ப்பள்ளிகளின் தலையெழுத்தை

மாற்றவில்லை…..

தமிழ்ப்பள்ளிகளுக்கு

துயரமும் அவலமும்

மாறாத

வரலாற்று சுவடுகள்!!

– சிவாலெனின்

TAGS: