வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com
மண் மணக்கும் பெயரோடு…. !
மண்ணிலிருந்து புறப்பட்டாய்…
மலையக சிறகுகளுடன்…!
மறக்காமல் திரும்பி வருவாய் என்று…..
மனைகளில் காத்திருந்தார்கள்..
மறந்து விடவில்லை நீ.. .?
மழலைகளையும் சுமந்து….!
மதியிழந்த மடையர்களால்….
மண்ணை தொடுமுன்னே..
முடமாகியது உன் மேனி….!
மன்றாடின பலமொழிகள்….!
மண்ணில் சிதறினாய்..
மக்கள் பிணமாக…
மங்கியது உலகம்…!
மனிதாபிமானம் என்பது…
மடிந்து போனது….!!
மலரவில்லை காலை உனக்கு….!
முகம் காணா உறவுகளே…
மனமில்லை உறங்க எங்களுக்கு…!!
மரண ஓலம்.. மேகங்களில் தெரிந்தது…..!
மன்னிக்க மாட்டோம்…
மலைநாட்டவர் நாங்கள்….. !!
மண்ணை இரணமாக்கிய…
– ஆதிநேசன். கிமிஞ்செ, நெ.செம்பிலான்.