வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
இங்கு
குழிதோண்டி
புதைக்கப்பட்டது……
இரத்தத்தில் வெற்றி
கொண்டாட்டங்கள்
இனவெறி சதுராட்டத்தில்
மனித மிருகங்கள்…….
பௌத்தம் எனும்
அறிவியக்கத்தின் அடாவடிதனம்
காவியுடையில்
புத்தபிக்குகளின் இனவெறியாட்டம்…..
ஆட்சிகள் மாறின
அதிகாரவர்கத்தின் அராஜகம்
மாறவில்லை
ஆண்டப்பரம்பரை மீண்டுமொருமுறை
ஆளாநினைக்குது
அதிகாரவர்கத்தை அழிக்க
துடிக்குது…….
புத்ததின் புத்திமதிகள்
புதைகுழியில்
தஞ்சமானது
மனித உயிர்கள்
சிங்களவனுக்கு விளையாட்டானது……
அன்பு பாத்திரம்
வீசியெறியப்பட்டு
புத்தபிக்குகளின் கைகளில்
தமிழர்களின் மண்டையோடுகள்!!!
(சிவாலெனின்,சுங்கை,பேராக்)
புத்தனின் பெளத்தம் ,இனவாதம் கொண்ட கறையால் , மெளனித்து போனதே ,சிவாலெனின் கவிதையால், புத்தனின் கண்களிலும் கண்ணீராய்ப் போனதே ,
நன்றி உதயகுமார் (தமிழ் நாடு) அவர்களே.
புத்தீசம் சரி யென்றால் இலங்கை இனபடுகொலையை ஞாயப்படுத்துவதாகும்,வாழ்க நாராயண நாமம்.
புத்தம்பற்றிப் பேசும் நாம் புத்தர் என்ன சொன்னார் என்றும் தெரிந்துகொள்வது நன்று. காண்க: https://sites.google.com/site/budhhasangham/dhammapadam . திரு. யாழன் ஆதியின் மொழிபெயர்ப்பில் கிடைக்கும் தம்மபதம் வாசிப்பதற்கும் இனிமை.