வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
துன்பத்தை நீக்க
இந்த நாள்……
ஏழை இல்லங்களில்
எரியாத அடுப்புக்குத்
தீ…..
மூட்டட்டும்….!
காலச் சுழற்சியில்
காணாமல் போன
மனக் கனவுகளின்
நினைவுகள்….
இந்த
ஒளியிலாவது
கண்டெடுக்கப்படட்டும்…!
மூலை முடுக்குகளில்
முற்றுப் பெறாத
முனகல்கள்
இந்த
விடியலிலாவது
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கட்டும்….!
இதயத்தின் அருளை
எண்ணத்தின் அருள்
ஆளுமை செய்யும்போது,
“பகுத்தறிவுச் சிந்தனைகள்
பட்டுடை தரிக்கட்டும்” !
தீப
ஆவளியால்
நரகா சூரனை
நினைப்பூட்டும்
இந்த நாள்
எம்
இனத்தின்
நரக வேதனைகளைத்
தீய்க்கட்டும்….!
தீண்டாமை எண்ணங்கள்
தீயாத வரை…..
நான்…. நானாக,,,!
நாம்…. நாமாக….!
தீபங்கள்….ஒளியாக,
எரியட்டும்
எரியட்டும்….!
-செ.குணாளன், பட்டர்வொர்த்
சிறப்பாக உள்ளது….
தீண்டாமை எல்லோர் மனதிலும் உள்ளது,வாழ்கிறது,விதியை மீறும்போது வருவதை தாங்கித்தானே ஆகவேண்டும்.எந்திரன் படத்தில் ரஜினி சொல்வார்,வகுக்கபட்ட விதியை மீறினால் விலைவு எப்படி இருக்கும் யென்று,வாழ்க நாராயண நாமம்.