வாழ்ந்து தழை!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

coconutபுள்ளல்லவே? – நீ

புழுவல்லவே? – பின்

புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?

கல்லல்லவே? – நீ

கசடல்லவே? – பின்

கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?

மண்ணல்லவே? – நீ

மரமல்லவே? – பின்

மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?

விழலல்லவே? – நீ

வெற்றல்லவே? – பின்

வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?

 

கண்ணைத் திற! – கீழ்

விண்ணை அறி! – இரு

கைகளை ஏனினும் கட்டுகிறாய்?

கூட்டை உடை! – சங்கை

ஊதி எழு! – சேவல்

கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?

அச்சம் அறு! – தலை

வணங்க மறு! – பழம்

ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?

அழுகை விடு! – தாழ்

வகத்தை ஒழி! – விதிச்

சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?

 

இலக்கை அமை! – அதை

எட்ட முனை! – அதில்

இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!

தொடர்ந்து முயல்! – தோன்றும்

துயரம் களை! – உன்றன்

தோள்வலி நன்கு துலங்கஉழை!

விளையும் பயன்! – பகிர்வில்

வேண்டும் சமன்! – அதை

வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!

ஒப்பை அழை! – மனம்

ஒன்றி உழை! – இந்த

உலகம் பொதுவென வாழ்ந்துதழை!

 
– காக்கைச் சிறகினிலே – சனவரி 2013 – பக்.32-33
TAGS: